சனி, 18 ஜூன், 2016

பங்களாதேஷ் இந்து பேராசிரியரை கொல்ல முயன்றவர் சுட்டு கொலை 17 வயது குற்றவாளி

வங்காளதேசம்: இந்து பேராசிரியரை கொல்ல முயன்று கைதான 17 வயது குற்றவாளி போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலிவங்காளதேசத்தில் இந்து பேராசிரியரை கொல்ல முயன்று கைதான 17 வயது குற்றவாளி போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்கா: இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெறும் வங்காளதேசத்தில் இந்த மாதத்தில் மட்டும் இந்து கோயில் பூசாரி, மட நிர்வாகி, கிறிஸ்தவரான ஒரு வியாபாரி ஆகியோர் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இந்த கொலைகளுக்கு உள்ளூரை சேர்ந்த சில தீவிரவாத குழுக்களும், அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளும் பொறுப்பேற்றுள்ள நிலையில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் மேலும் நிகழாமல் தடுக்கும் வகையில் தீவிரவாதிகளுக்கு எதிரான அதிரடி வேட்டையில் ஆறாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், வங்காளதேசத்தின் எல்லையோரம் அமைந்துள்ள இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் கோடரியால் வெட்டப்பட்ட நிலையில் இந்து கோயில் பூசாரி ஒருவர் நேற்று முன்தினம் பிணமாக கிடந்தார்.

இதற்கிடையே, மடாரிப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் கணித பேராசிரியராக பணியாற்றிவந்த ரிபன் சக்கரவர்த்தி(50) என்பவரை சமீபத்தில் ஒருகும்பல் கொல்ல முயன்றது. அதிர்ஷ்டவசமாக அவர்களிடம் இருந்து காயங்களுடன் அவர் உயிர்தப்பினார். இந்த கொலை முயற்சி தொடர்பாக குலாம் பைசுல்லா பாஹிம்(17) என்பவனை கைது செய்த போலீசார், அவனை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, விசாரணை காவலில் எடுத்திருந்தனர்.

இந்த கொலை முயற்சியில் தொடர்புடைய மேலும் சிலரை அடையாளம் காட்டுவதற்காக அவனை மடாரிபூரின் புறநகர் பகுதிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். போலீசார் மீது குலாம் பைசுல்லா பாஹிமின் கூட்டாளிகள் துப்பாக்கிகளால் சுட்டனர். போலீசாரும் பதிலுக்கு சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் காயமடைந்த குலாம் பைசுல்லா பாஹிம் ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லும் வழியில் உயிரிழந்ததாக போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.

இறந்த குலாம் பைசுல்லா பாஹிம் அரசால் தடை செய்யப்பட்டுள்ள சிஸ்புத் தஹ்ரிர் என்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவன் என அடையாளம் காணப்பட்டதாக முன்னர் போலீசார் தெரிவித்திருந்தனர்.மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக