வெள்ளி, 17 ஜூன், 2016

தென்தமிழகத்தில் சாணாரை கண்டாலே தீட்டு? பொன்னர் மறந்தாரா? திராவிடர் கழக மாநாட்டில் நாடார் சமையல்...

கனாக் காரன்'s photo.சமஸ்கிருதம் தெரியாததற்காக பொன்னார் வெட்கப்படுகிறாராமே -
தென் தமிழகத்தில் சாணாரை கண்டாலே தீட்டு என்ற நிலை நிலவியது பொன்னாருக்கு தெரியாதா?
தோள்சீலை போராட்டம் அவர் பிறந்த குமரி மண்ணில் நடந்ததென்பதும் தெரியாதா?

கண்டாலே தீட்டு என்றால் அக்ரகார தெருவில் நுழையவே தடை, பார்ப்பான் குளிக்கும் முன்பே இவர்கள் நடமாடலாம், இவர்களைப் பார்த்தால் மீண்டும் குளிக்கும் நிலை ஏற்படும் நிலை இருந்ததே அதெல்லாம் பொன்னாருக்கு தெரியாதா?
இவரின் குமரி மாவட்டம் திருவிதாங்கூரில் இருந்தவரை இவர் சமூகத்தினர் திவானை (அதிகாரி) பார்க்கச் சென்றால் எத்தனை அடி தொலைவிலிருந்து பேசவேண்டும் என்பதை மறந்தாரா?
கண்டாலே தீட்டு என்ற நிலையிருந்த நாளில் திராவிடர் கழ மாநாட்டில் நாடார் சமையல் உண்டு என்ற வாசகத்தை மறந்தாரா? இத்தனை இழிவையும் இவர்கள் மீது தினித்த ஆரிய மொழியை கொண்டாட காரணம்தான் என்ன? நிச்சயம் மறக்கவில்லை -
பதவி சுகத்துக்காக இவ்வளவு தரம் இறங்கித்தான் பேசனுமா?
காவி மத்திய அரசின் பிரதிநிதியாக ஒட்டுமொத்த தமிழரையும் அவமானப்படுத்தி விட்டார்.
நன்றி:  facebook     ராஜராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக