சனி, 18 ஜூன், 2016

கடனில் மூழ்கும் மேற்கு வங்க நிர்வாகம்!

மேற்கு வங்க அரசு கடன் பிரச்னையால் திணறிவருகிறது. இந்தியாவிலேயே அதிக கடன்சுமை உள்ள மாநிலமாக மேற்கு வங்கம் மாறியிருக்கிறது. மாநில ஜி.டி.பி-யை விட அதிகமாக தன்னுடைய கடன் 'லிமிட்டை' தாண்டி அரசு கடன் பெற்றுள்ளது. 2011-ல் கடன்சுமை ரூ.1.13 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது ரூ.3.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. ஐந்தாண்டுகளில் ரூ.94,000 கோடி கடன் சேவைக்காகச் செலவிடப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் ரூ.28,000 கோடி கடன் சேவைக்காக செலவிடப்பட்டிருக்கிறது. மாநில நிதியமைச்சர் மித்ரா இந்த கடன்சுமையை, 'கச்சிதமான கடன் வெடிகுண்டு' என்று குறிப்பிட்டுள்ளார்.
கடன்சுமையைத் தாண்டி மாநில நிர்வாக பணியாளர்கள் சுமார் 10 லட்சம் பேருக்கு வழங்கவேண்டிய, DA allowance எனப்படும் படித்தொகை நிலுவை மட்டுமே சுமார் ரூ.16,000 கோடி மிச்சம் இருக்கிறது.

1% படித்தொகை உயர்த்தி வழங்கினால் கூட சுமார் ரூ.300 கோடி செலவு ஏற்படக்கூடும். இந்நிலையில், மத்திய அரசு கடன்சுமையை சமாளிக்க உதவவில்லை என்று நிதியமைச்சர் மித்ரா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து மித்ரா, ‘கிரீஸ் நாட்டின் கடன்சுமையை தீர்க்க உலக நிதியத்தில் சுமார் $10 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.65,000 கோடி) தருவதற்கு இந்தியா தயாராக இருந்தது. ஆனால், தனது சொந்த நாட்டில் உள்ள ஒரு மாநிலத்துக்கு உதவ மத்திய அரசு தயாராக இல்லை’ என்று குற்றம் சாட்டியுள்ளார்  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக