வெள்ளி, 17 ஜனவரி, 2014

மாநிலங்களவைத் தேர்தலில் திருச்சி சிவா மீண்டும் போட்டி:

நாடு முழுவதும் உள்ள 16 மாநிலங்களில் 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியில் இருந்து 12-ம் தேதிக்குள் முடிவடைகிறது. தமிழகத்தில் ஜெயந்தி நடராஜன், ஜி.கே.வாசன், டி.கே. ரங்கராஜன், பாலகங்கா, அமிர் அலி ஜின்னா மற்றும் வசந்தி ஸ்டான்லி ஆகிய எம்.பி.க்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதி முடிகிறது. காலியாகும் இந்த உறுப்பினர் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் பிப்ரவரி 7-ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது.இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் திருச்சி சிவா மீண்டும் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்!புரியல்லியே  கணக்கு சரியாகிட்டதா என்ன ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக