வியாழன், 16 ஜனவரி, 2014

லோக்சபா தேர்தல் கருத்து கணிப்பு ! நக்கீரன் சர்வே ! தி.மு.கவும் அ.தி.மு.கவும் சமபலத்துடன் ?


சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் கருத்து கணிப்புகளும் வரிசைகட்டி வெளியாகி கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் தேர்தல் களத்தில் அதிமுகவும், திமுகவும் சம பலத்துடன் மோதுவதாக நக்கீரன் வாரம் இருமுறை கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நக்கீரன் வாரம் இருமுறை இதழ் ஒவ்வொரு எம்.பி. தொகுதியிலும் 6 ஆயிரம் பேரிடம் கருத்து கணிப்பு நடத்தியது. தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 40 ஆயிரம் பேரிடம் எடுக்கப்பட்ட இந்த கருத்து கணிப்பு முடிவுகளையும் கடந்த 6 மாத கால அரசியல் நிலவரங்கள் அடிப்படையில் "நக்கீரனின் மெகா சர்வே" விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மொத்தம் 17 தொகுதிகள் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ளவை என்கிறது நக்கீரன் சர்வே
மதுரை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, ஆரணி, கள்ளக் குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், பெரம்பலூர், திருப்பூர் வடசென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர், தேனி, கன்னியாகுமரி, தர்மபுரி ஆகியவை அதிமுக வசமாகுமாம்
தேபோல் மொத்தம் 16 தொகுதிகள் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ளவையாம்.

திருவண்ணாமலை, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர், அரக்கோணம், கோவை, மயிலாடுதுறை, சிதம்பரம் தஞ்சாவூர், நாகப்பட்டினம் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கடலூர் ஆகியவை திமுக வசமாக வாய்ப்புள்ள தொகுதிகளாம்
அ.தி.மு.கவும் தி.மு.கவும் சமபலத்துடன் தென்காசி, திருச்சி, வேலூர், திண்டுக்கல் ஆகிய 4 தொகுதிகளில் மோதுகின்றனவாம்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரே லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்கிறது நக்கீரன் சர்வே
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 15%க்கு மேல் வாக்குகள் உள்ள தொகுதிகளாக கன்னியாகுமரியும், சிவகங்கையும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
அதேபோல் 10%லிருந்து 15%க்குள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்குபலம் உள்ள தொகுதிகளாக கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், நீலகிரி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, பொள்ளாச்சி, சேலம், தூத்துக்குடி ஆகிய 9 தொகுதிகளையும் சுட்டிக்காட்டுகிறது நக்கீரன்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், தஞ்சாவூர், விருதுநகர், திருப்பூர், விழுப்புரம், மத்தியசென்னை, தேனி, வேலூர், திண்டுக்கல், தென்சென்னை, ஆரணி, சிதம்பரம், அரக்கோணம், பெரம்பலூர், கோவை, திருச்சி, நாமக்கல் ஆகிய 19 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 5%லிருந்து 10%க்குள் வாக்குகள் உள்ளனவாம்.
சுமார் 30 தொகுதிகளில் எம்.பி. தேர்தல் என்ற அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்குபலம் இருக்கிறது. ஆனால் வலுவான கூட்டணி அமைந்தால்தான் இந்த வாக்குகள் காங்கிரசுக்குப் பயன்படும் என்பதும், இல்லையென்றால் காங்கிரசுக்கே அந்த வாக்குகள் பெரிய பலனைத்தராது என்கிறது நக்கீரன் கருத்து கணிப்பு
தே.மு.தி.க.வுக்கு நாமக்கல், திருச்சி, விழுப்புரம், திருவள்ளூர், திருப்பூர், தஞ்சாவூர், கரூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருப்பெரும்புதூர், சிதம்பரம், தென்சென்னை, தர்மபுரி, வேலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய 16 தொகுதிகளில் 5% முதல் 10% வரையிலான வாக்குபலம் உள்ளதாம்
கன்னியாகுமரி தொகுதியில் 10%க்கு மேல் வாக்குபலம் கொண்டுள்ளதாம், ராமநாதபுரம் தொகுதியிலும் 10%க்கு மேல் வாக்குபலம் இருக்கிறதாம்.
மதிமுகவைப் பொறுத்தவரையில் ஈரோடு எம்.பி. தொகுதியில் 2% வாக்குகள்தானாம். ஆனால் விருதுநகர், பொள்ளாச்சி தொகுதிகளில் ம.தி.மு.க.வுக்கு 5%க்கு மேல் வாக்குபலம் உள்ளதாம். கோவையில் 4%, திருச்சி- தஞ்சையிலும் 3% வாக்குகளையும் மதிமுக வைத்த்திருக்கிறதாம்.
வடமாவட்டங்களில் 11தொகுதிகளில் பா.ம.கவுக்கு செல்வாக்கு இருக்கிறதாம். தர்மபுரி தொகுதியில் அ.தி.மு.கவுக்கு அடுத்த இடத்தில் பா.ம.க 24% வாக்குகளை வைத்திருக்கிறதாம்.
ஆரணியில் பா.ம.க.வுக்கு 13%, சிதம்பரத்தில் 11%, அரக்கோணத்தில் 9%, திருவண்ணாமலையில் 8%, சேலத்தில் 7%, தென்சென்னை, மயிலாடுதுறை, திருப்பெரும்புதூர், காஞ்சிபுரம் ஆகிய தொகுதியில் 6%, விழுப்புரத்தில் 4% வாக்குகளை பா.ம.க கொண்டிருக்கிறதாம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நாமக்கல் தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 5% வாக்குகுளைக் கொண்டிருக்கிறதாம். ஆரணி தொகுதியில் 50% ஆதரவு சிறுத்தைகளுக்கு உண்டாம். தர்மபுரியில் வி.சி.கட்சிக்கு 5% வாக்குகள் இருக்கிறது என்கிறது நக்கீரன்.
திருவள்ளூரில் 3%, திருப்பெரும்புதூரில் 3%, காஞ்சிபுரத்தில் 6%, விழுப்புரத்தில் 5% வாக்குகளைக் கொண்டுள்ளதாம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. சிதம்பரத்தில் 17% வாக்குகளைக் கொண்டிருக்கிறதாம்.
புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியில் 6%, விருதுநகர், ராமநாதபுரம், பெரம்பலூர், திருநெல்வேலி, கரூர், கோவை, திருச்சி, தேனி ஆகிய தொகுதிகளிலும் 1 முதல் 2% வாக்குகள் இருக்கிறதாம்.
மனித நேய மக்கள் கட்சிக்கு மத்திய சென்னை, நாகப் பட்டினம், வேலூர், திருச்சி, நாமக்கல், தென்காசி, மயிலாடுதுறை, திருப்பெரும் புதூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோவை, பெரம்பலூர், ராமநாதபுரம், விருதுநகர், வடசென்னை ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் செல்வாக்கு உள்ளதாம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு நாகப்பட்டினம் தொகுதியில் 4% வாக்குகள், கோவை, வேலூர் தொகுதிகளிலும் இதே அளவு வாக்குகள் இருக்கிறதாம்.
நாகப்பட்டினம் எம்.பி. தொகுதியில் சி.பி.எம்.முக்கு 9% வாக்குகளும், சி.பி.ஐ.க்கு 5% வாக்குகளும் உள்ளன. திருப்பூர் எம்.பி தொகுதியிலும் சி.பி.எம்.முக்கு 9%, சி.பி.ஐ.க்கு 5% வாக்கு இருக்கிறது. திருச்சியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 4% வாக்குகளை வசப்படுத்தியுள்ளன. கோவையில் இரண்டு கம்யூனிஸ்ட்டுகளுக்கும் சேர்த்து 7%, தஞ்சையில் 3% என வாக்கு பலம் உள்ளது. கன்னியாகுமரி தொகுதி
பா.ஜ.கவுக்கு கன்னியாகுமரியில் 18%, கோவையில் 14% வாக்குகள் கிடைக்குமாம். அதேபோல் நாமக்கல், மதுரையில் 12% வாக்குகள் பா.ஜ.க.வுக்கு கிடைக்கிறதாம்
நீலகிரி, திருச்சி, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் 10% வாக்குகள் பா.ஜ.க.வுக்கு உண்டாம்..

tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக