வெள்ளி, 17 ஜனவரி, 2014

லஞ்சம் பேரத்தின் வீடியோ ஆதாரம் மற்றும் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் பட்டியல் வெளியீடு


1. மாநகராட்சி கமிஷனர் விஜயலட்சுமி மற்றும் பாலசந்திரன் ரூ.36 லட்சம்.
2. வடிவேல், நகர பொறியாளர் ரூ.7 லட்சம்.
3. ஞானமணி, பாதாள திட்ட பொறியாளர் ரூ.6 லட்சம்.
4.முருகேசன், செயற்பொறியாளர் ரூ.6 லட்சம்.
5. பரமசிவம், உதவி செயற்பொறியாளர் ரூ.5.5 லட்சம்.
6. ரவி, உதவி செயற்பொறியாளர் ரூ.7 லட்சம்.
7.சுரேஷ் குமார், உதவி செயற்பொறியாளர் ரூ.6.5 லட்சம்.
8. ரவிசந்திரன், உதவி பொறியாளர் ரூ.5.5 லட்சம்
9. நடேசன், உதவி பொறியாளர் ரூ.2.5 லட்சம்
10. ராஜேந்திரன், உதவி பொறியாளர் ரூ.5.5 லட்சம்

ஈரோடு மாநகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம், 2008-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 2010-ல் வேலை துவக்கப்பட்டது. ஜெர்மன் வங்கி, 60%மும், தமிழக அரசு மானியம், 20%மும், பொது மக்கள் தொகை- 20%வீதம் பங்களிப்புடன் இத்திட்டத்துக்கு, 209.22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.2015-ம் ஆண்டில் பணிகள் நிறைவு செய்யும் வகையில், இப்பணி ஐந்து தொகுதிகளாக பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. முதல் தொகுப்பில், ஈரோடு, வீரப்பன்சத்திரம், காசிபாளையம், சூரம்பட்டி பகுதியும், இரண்டாம் தொகுப்பில், ஈரோடு, வீரப்பன்சத்திரம் எஞ்சிய பகுதிகள் இணைக்கப்பட்டன.
மூன்றாவது தொகுப்பில், பெரியசேமூர், வீரப்பன்சத்திரம் எல்லைகுட்பட்ட பகுதிகள் உள்ளன. நான்காவது தொகுப்பில். காசிபாளையம் பகுதிமட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. நான்கு தொகுப்புகளின் வேலை முடித்து ஒருங்கிணைத்து கொண்டுவரபப்டும் தண்ணீர் ஐந்தாவது தொகுப்பில்  சுத்திகரிப்பு பணி மட்டும் மேற்கொள்ளப்படுகிறது.


இத்திட்டத்தில் பெரிய அளவில் அதிகாரிகள் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்வதால், பாதாள சாக்கடை திட்டத்தில் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை என கூறி, 2010-முதல், 2013௦-வரை, லஞ்சம் கேட்ட அதிகாரிகளின் லஞ்ச பட்டியலை, தமிழக முதல்வர், லஞ்ச ஒழிப்பு போலீஸ் உள்பட பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு ஒப்பந்ததாரரான, ஹைதராபாத்தைச் சேர்ந்த கே.ஆர்.ஆர்.ஐ டி.ஏ.பி.ஐ ஜெ.வி நிறுவனம் அனுப்பியது.


இதனால் கோபமடைந்த மாநகராட்சி அதிகாரிகள், பாதாள சாக்கடை முதல் தொகுப்பில் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கவில்லை என, கூறி அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை இரத்து செய்தனர்.
இவ்விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஈரோடு மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.


மூன்று மாதமாக வழக்கு விசாரணை நடந்தது. 10-ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. பாதாள சாக்கடை திட்டம் குறித்த வழக்கை, சென்னை இசைவு தீர்ப்பாயத்தில்(ஆர்பிட்ரேஷன்) நான்கு மாதத்துக்குள் முடித்து கொள்ள வேண்டும் என இருதரப்புக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், நேற்று இத்திட்டத்தின் சிறு ஒப்பந்ததாரர் (சப்-காண்டக்டர்)மணி மற்றும் வஞ்சியப்பன் ஆகியோர், தங்களிடம் யார் யாரெல்லாம் லஞ்சம் பெற பேரம் பேசினர் என்ற வீடியோ ஆதாரத்தை வெளியிட்டனர்.


அதோடு யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற விவரத்தையும் வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
1. மாநகராட்சி கமிஷனர் விஜயலட்சுமி மற்றும் பாலசந்திரன் ரூ.36 லட்சம்.
2. வடிவேல், நகர பொறியாளர் ரூ.7 லட்சம்.
3. ஞானமணி, பாதாள திட்ட பொறியாளர் ரூ.6 லட்சம்.
4.முருகேசன், செயற்பொறியாளர் ரூ.6 லட்சம்.
5. பரமசிவம், உதவி செயற்பொறியாளர் ரூ.5.5 லட்சம்.
6. ரவி, உதவி செயற்பொறியாளர் ரூ.7 லட்சம்.
7.சுரேஷ் குமார், உதவி செயற்பொறியாளர் ரூ.6.5 லட்சம்.
8. ரவிசந்திரன், உதவி பொறியாளர் ரூ.5.5 லட்சம்
9. நடேசன், உதவி பொறியாளர் ரூ.2.5 லட்சம்
10. ராஜேந்திரன், உதவி பொறியாளர் ரூ.5.5 லட்சம்

இவர்கள் உட்பட மேலும் பலர் எங்களிடம் லஞ்சம் வாங்கி உள்ளனர் மாநகராட்சியின் பிற அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுக்கு ரூ.37. 5 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.


இதற்கான வீடியோ ஆதாரம் மாநகராட்சி கமிஷனர் அறையிலும், ஈரோடு பிரபல ஹோட்டல்களிலும், கோவையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. nakkheeran.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக