சனி, 18 ஜனவரி, 2014

கம்போடிய தேசியக் கொடியில் கோயிலின் உருவம்: ‘கம்போடியக் கலைக் கோயில்கள்’-7


அங்கோர்வாட்­டுக்கு வடக்கே 20 கிலோ­மீற்­ற­ருக்கு அப்பால் குலன் மலையின் (Kulen Mountain) கால­டியில் ராஜேந்­தி­ர­வர்மன் காலத்தில் கட்­டப்­பட்ட அழ­கான முக்­கி­ய­மான ஆல­ய­மாகும்.
இதன் இன்­றைய பெயர் Banteay Srei என்­றாலும் அதன் உண்­மை­யான பெயர் சமஸ்­கி­ரு­தத்தில் திரி­பு­வனேஸ்­வரா ஆலயம் (மூவு­லகக் கடவுள் ஆலயம்). ஆனால், இப்­பொ­ழுது வழங்­கப்­படும் Bantay Srei என்­ப­தற்கு ‘பெண்­களின் கோட்டை’ என்று சொல்­லப்­ப­டு­கி­றது. இது மன்­னரின் கோயி­லன்று. மன்னர் ராஜேந்­தி­ர­வர்­மனின் ஆலோ­சகர் யஜ்­ந­வ­ராஷா என்­பவர் கட்­டி­யது. இவர் ஐந்­தா­வது ஜெய­வர்­ம­னுக்கும் குரு­வாக இருந்­தவர்.
கெமர் கலையின் இரத்­தினம் என புகழப்­பட்ட இந்த அழ­கான கோயில் 1912இல்தான் வெளி உல­கிற்கு தெரி­ய­வந்­தது. இது மற்ை­றய கோயில்­க­ளை­விட சற்று வித்­தி­யா­ச­மாகத் தெரி­வ­தற்கு முக்­கிய காரணம் இளஞ்­சி­வப்பு நிறத்து மண்­ணா­லான  கற்­களால் கட்­டப்­பட்­டுள்­ள­மை­யே­யாகும். இந்த  நிறத்­தினால்   கோயிலில்  ஆங்­காங்கே செதுக்­கப்­பட்­டுள்ள சிலைகள் பளிச்­சி­டு­கின்­றன.

இரா­மா­ய­ணக் ­காட்­சிகள், மகா­பா­ர­தக்­காட்­சிகள், இராவணன் கைலாச மலையை அசைப்­பது, காமன் சிவன் மீது மன்­ம­தப்­பாணம் விடு­வது, துர்க்கையின் வடிவம், நர­சிம்ம அவ­தாரம், சிவ, பார்­வதி என பல சிற்­பங்­க­ளாக செதுக்கப்பட்டுள்­ளன. ஒவ்­வொன்­றையும் பார்க்­கும்­போது சிற்­பி­களின் கைவண்­ணமும் அவை செதுக்­கப்­பட்ட நேர்த்­தியும் பளிச்­சிட்­டன. ஏனைய கோயில்­க­ளை­விட இந்­திய பாணி­யி­லான கோயில் கட்­டட அமைப்பு அதி­க­மாக இதில் இருந்­தது.
அங்கோர்வாட்டின் அரு­க­ருகே திரும்­பிய பக்­க­மெல்லாம் அங்கோர் பேர­ரச மன்­னர்கள் கட்­டிய ஆல­யங்கள் 50இற்கும் மேலே இருந்­தன. ஆலயம் கட்­டு­வதில் போட்டி இருந்­ததால் ஒவ்­வொரு மன்­னர்­களும் வெவ்­வேறு ஆல­யங்­களை, அரண்­ம­னை­களை கட்­டி­வைத்­தனர்.
அங்கோர் பேர­ரசின் அடுத்­த­டுத்து தொடர்ந்து ஆட்­சியைத் தொடர்ந்த 25இற்கும் மேற்­பட்ட மன்­னர்­களில் 6 மன்­னர்­களைத் தவிர ஏனைய மன்­னர்கள் தங்­க­ளது ஆட்சிக் காலத்தில் ஏதோ ஒரு கட்­ட­டங்­களை கட்டி அர­சுக்கு வரும் நிதியை பெரு­ம­ளவு செலவு செய்­தி­ருக்­கி­றார்கள். அவ்­வாறு செலவு செய்­தது வீணா­க­வில்லை. அவை இன்று கம்­போ­டி­யா­விற்கும் கெமர் பேர­ரசின் புக­ழுக்­குமே கார­ண­மா­யி­ருக்­கின்­றன.
அடுத்து பார்க்கச் சென்­றது பிரஸாத் க்ராவன் (PRASAT KRAVEN) என்ற ஆலயம். அது முதலாம் ஹர்­ஷ­வர்மன் மன்­னனால் மகா­லஷ்­மிக்­காக கட்­டப்­பட்­டது. 5 கோபு­ரங்கள் வரி­சை­யாக அமைந்து ஒரு தாம­ரைப்போல் காணப்­படும் ஆல­யத்தில் உள்ள பழைய ஓவி­யங்கள் அழி­யாமல் இன்­னமும் காட்சி தரு­கின்­றன. விஷ்­ணுவின் வாமன அவ­தா­ரமும் 4 மற்றும் 8 கைக­ளோடு ல­க் ஷ்­மியும் சிற்­பங்­க­ளாக செதுக்­கப்­பட்­டுள்­ளன.
அவற்­றை­யெல்லாம் நின்று நிதா­ன­மாகப் பார்த்­து­விட்டு பெரு­மை­மிக்க அங்கோர் நக­ரத்தின் முதற் கோயி­லுக்கு போனேன். சியா­மரீப்பி­லி­ருந்து தென் கிழக்­காக 13 கிலோ மீற்றர் தூரத்­திற்கு தனது தலை­ந­கரைக் கொண்டு போனான் யசோ­வர்மன். அந்த தலை­ந­க­ரிற்கு அவன் வைத்த பெயர் ‘யசோ­த­ர­புர’ ஆகும். 4கிலோ மீற்றர் சதுர அளவைக் கொண்ட இந்தத் தலை­ந­கரம் ‘அங்கோர் தொம்’மை விடப் பெரி­யது.
இந்தத் தலை­ந­க­ரி­லுள்ள மலைக்­குன்றில் ஒரு அழ­கான சிவன் கோயில் கட்­டப்­பட்­டுள்­ளது. இக்­கோ­யிலில் நடு­நா­ய­க­மூர்த்தி லிங்­க­மாகும். ஆகவே, இக்­கோ­யிலை யசோ­வர்மன் கட்­டி­யதால் யசோ­த­ரேஸ்­வராக் கோயில் என அழைத்­தனர். இக்­கோயில் 65 மீற்றர் உய­ர­முள்ள 5 நிலை கோபு­ரத்­துடன் அமைந்­துள்­ளது.
இந்து எண்­க­ணித அடிப்­ப­டையில் உரு­வாக்­கப்­பட்ட கோயி­லான நொம் பெகங்க் (PHNOM BAKHENG) 108 சிறிய கோபு­ரங்கள் வளர்­பிறை, தேய்­பிறை நாட்­களைக் குறிக்கும் வகையில் அமைந்­துள்­ளது. தினமும் ஆயி­ரக் ­கணக்­கான பய­ணிகள் இந்த மலைக் கோயி­லுக்குச் சென்று சூரிய அஸ்­த­ம­னத்தை கண்டு மகிழ்­கின்­றனர். இந்த சூரிய ஒளியில் அங்­கி­ருந்து அற்­பு­த­மாக காட்சி தரும் அங்­கோர்­வாட்­டையும் காண்­கி­றார்கள். மலை மீது நடந்து ஏற முடி­யா­த­வர்­க­ளுக்கு யானை மீது ஏறிப் போகிற சவா­ரியும் உண்டு.
Statue made from weapons, symbolizing nonviolence, in Cambodia
கெமர் பேர­ரசு மன்­னர்கள் பல அற்­பு­த­மான கட்­ட­டக்­கலை அழ­குடன் கூடிய ஆல­யங்­களை கட்­டி­ய­போதும் அவற்­றுக்­கெல்லாம் சிக­ர­மாக விளங்­கு­வது அங்­கோர்வாட் என்ற பெருங்­கோயில். ஆகவே, சியா­மரீ­ப்பைச் சுற்­றி­யுள்ள இந்த ஆல­யங்கள் அனைத்­தையும் மொத்­த­மாக அங்கோர்வாட் எனப் பெய­ரிட்டு அழைக்­கின்­றனர். இந்த ஆல­யங்­களின் அழ­கையும், கட்­டடக்­க­லையின் நுணுக்­கங்­க­ளையும் நின்று நிதா­ன­மாகப் பார்க்க­ வேண்­டு­மானால் முழு­மை­யாக 5 நாட்கள் வேண்டும். ஆயி­ரக்­க­ணக்­கான சிற்­பிகள் ஆயி­ரக்­க­ணக்­கான நாட்­களில் செதுக்­கிய சிற்­பங்­களைப் பார்க்க செல­விட முடி­யா­தா என்ன?
அன்று மாலை மலேஷியா திரும்ப வேண்டும். காலைப் பொழுதை வெறு­மனே கழிப்­பதா என யோசித்­த­போது ஆட்டோ ஓட்­டியான் சொன்னான் தென்­கி­ழக்கு ஆசி­யா­வி­லேயே மிகப் பெரிய குளம் இருக்­கி­றது. போய்ப் பார்க்­க­லாமே என்றான்.
அவ­னிடம் ஆட்­டோ­வுக்­கான கட்­ட­ணத்தைக் கேட்டேன் யு.எஸ்.டொலரில் கட்­டணம் சொன்னான். பேரம் பேச அவ­சியம் இல்­லா­ததால் ஒப்­புக்­கொண்­டேன். கம்­போ­டி­யா­வுக்­கென ரீல் என நாணயம் இருந்­த­போதும் யு.எஸ். டொல­ரில்தான் பெரும்­பா­லான வர்த்­தகம் நடக்­கி­றது. கடை­களில் பொருள் வாங்­கு­ம்­போது யு.எஸ். டொலரைக் கொடுத்தால் கம்­போ­டியா நாண­யத்தில் மீதி கிடைக்­கும்.
50 நிமிட ஓட்­டத்தில் அந்த குளத்­திற்கு வந்­தது ஆட்டோ. குளத்தைப் பார்த்தேன் கண்­ணுக்கு எட்­டிய தூரம் செம்மண் நிற நீர் கடல் போன்று நிறைந்­தி­ருந்­தது. குளத்தில் பய­ணி­களை ஏற்­றிக்­கொண்டு ஏரா­ள­மான பட­குகள் கிழித்துக் கொண்டு ஓடின. ஒரு படகில் நானும் போனேன். ‘யான்’ சொன்­னான். இது பெருங்­குளம் மழை காலத்தில் 16,000 சதுர கிலோ­மீற்­றரில் தண்ணீர் நிற்கும்.
மற்றைய காலத்தில் 3000 சது­ர­கி­லோ­மீற்­றரில் தண்ணீர் இருக்கும். இந்தக் குளத்தில் படகு வீடுகள் மூலம் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் மிதந்து கொண்டே வாழ்­கி­றார்கள். இவர்­க­ளுக்­கான கூடைப்­பந்­தாட்ட அரங்கு, மருத்­துவ நிலையம், பள்­ளிக்­கூடம், தேவ­லா­லயம், கடைகள் என்­பன தண்­ணீரில் மிதக்­கின்­றன.
இங்கு வாழும் மக்­க­ளுக்கு மீன்­பி­டித்­தலே முக்­கிய தொழில். உப தொழி­லாக பய­ணி­க­ளிடம் நினை­வுப்­பொருள் விற்­கிற தொழில் உண்டு. சிறு­வர்கள் இதில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்கள். அது இங்கு மட்­டு­மல்ல அங்­கோர்­வாட்டைச் சுற்­றி­யி­ருக்­கின்ற கோயில்­களில் பய­ணி­களைக் கண்டால் புத்­தகம், நினை­வுச்­சின்­னங்கள் என்­ப­வற்றை விடாப்­பி­டி­யாக விற்­கின்­றார்கள்.
இந்தச் சிறு­வர்கள் எவரும் வெளி­நாட்டுப் பய­ணி­க­ளிடம் பிச்சை கேட்­ப­தில்லை. எதை­யா­வது விற்­கிற ஆர்­வத்தில் துரத்­து­வார்கள். அவர்கள் சொல்லும் விலைக்கு வாங்­காமல் பேரம் பேசலாம். உதா­ர­ண­மாக 15 யு.எஸ். டொலர் என்றால் உங்கள் பேரம் 3இலி­ருந்து 5 வரை போகலாம்.
பட­கை­விட்டு இறங்கி வெளியே வந்த­போது ஒரு கம்­போ­டியப் பெண் ஒரு நினைவுக் கோப்­பையை என்­னிடம் கொடுத்தாள். அதில் என்­னு­டைய படம் அச்­சி­டப்­பட்­டி­ருந்­தது. என்னைக் கேட்­கா­மலே என்னைப் படம் பிடித்து கோப்­பையில் அச்­சிட்­டி­ருக்­கி­றார்கள்.
கோப்­பையை வேண்டாம் என்றால் என்­மீது கோபமும் நட்­டமும் வரலாம். ஆகவே, அந்தக் கோப்­பையை நினைவுப் பொரு­ளாக வாங்­கினேன். விடு­திக்கு திரும்பும் வழியில் சியாம்ரீப் நகரைப் பார்த்தேன். சிறிய நக­ரம். ஆனால் அங்­கோர்­வாட்டால் உலகப் புகழ் பெற்­றுள்­ளது.
நகரில் பெரிய, சிறிய தங்கும் விடு­திகள் நிறைய இருந்­தன. அந்த தங்கும் விடு­தி­களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் அங்­கோர்­வாட்டின் நினைவு தெரி­வ­துபோல் ஏதோ ஒன்று இருந்­தது. ஒன்று பெயரில் அங்­கோர்வாட் இருக்கும். அல்லது அங்கோர் வாட்டில் உள்ள சின்­னங்­களில் ஏதோ­வொன்று இருக்கும். ஒரு மிகப் பெரிய விடு­தியின் முகப்பில் பிள்­ளையார் சிலை இருந்­தது. இன்­னொரு விடு­தியில் வாசுகி பாம்பை இழுக்கும் தேவர்­களின் சிலைகள் இருந்­தன.
கம்­போ­டி­யாவைப் பொறுத்­த­வ­ரை யில் அங்­கோர்வாட் என்ற வார்த்தை உல­கத்தைக் கவரும் வார்த்தை. ஆகவே, அதனை மக்கள் வர்த்­த­க த்­திற்கும் பயன்­ப­டுத்­தி­யுள்­ளனர். ஆனால், அங்கோர் (Anghkor) என்ற பெயரில் மது­பானம் (பியர்) விற்­ப­துதான் நெரு­ட­லாக இருந்­தது. அங்கோர் என்றால் புனிதம். அப்­ப­டி­யானால் அங்கோர் பியர் புனி­த­மா­னதா? ஒரு மொழி­யிலோ, தத்­து­வத்­திலோ, சம­யத்­திலோ வர்த்­தகம் புகுந்­து­விட்டால் அதன் தன்மை கெட்­டுப்­போகும்.
விமா­ன­நி­லை­யத்தில் என்னை இறக்­கி­விட்ட ‘யான்’ இரு கை கூப்பி வணக்கம் செய்து என்னை வழி­ய­னுப்பி வைத்தான். பதில் வணக்கம் செய்தேன். தூரத்தில் கம்­போ­டிய நாட்டுத் தேசி­யக்­கொடி பறந்­தது. அக்­கொ­டியில் கம்­போ­டியா பெளத்த நாடாக இருந்த போதும் அங்­கோர்வாட் கோயில் உருவம் நடுவில் இருந்­தது. உல­கி­லேயே ஒரு கோயிலின் உரு­வத்தை தேசிய கொடியில் வைத்திருக்கும் நாடு கம்போடியாதான்.
(தொடரும்…)

-மாத்தளை சோமு-
The Royal Palace, Phnom Penh, Cambodia


கம்போடிய கலைக்கோயில்கள்- (பகுதி-5/6) : உலகிலேயே மிகப்பெரிய கோயில் அங்கோர்வாட்!!

கம்போடிய கலைக்கோயில்கள்- (பகுதி-4)


மாத்தளை சோமு 
ilakkiyainfo.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக