வியாழன், 16 ஜனவரி, 2014

காணும் பொங்கல் : தமிழகம் முழுவதும் குவியும் மக்கள் கூட்டம்


தமிழகம் முழுவதும் காணும்பொங்கலையொட்டி மக்கள் பொழுது போக்கிற்காக அந்தந்த பகுதியில் உள்ள பொழுதுபோக்கு இடங்களில் குவிந்து உள்ளனர்.சென்னை அதனை சுற்றி உள்ள மக்கள் சென்னை மெரினா கடற்கரை, பெசட்ட் நகர் பீச், கிண்டி சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகிய இடங்களில் குவிந்து உள்ளனர். இதுபோல் மகாபலி புரம் முட்டுக்காடு,கடற்கரைபகுதிகளிலும் பழவேற்காடு, பகுதிகளிலும் ,மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து உள்ளனர்.
இதுபோல் காணும் பொங்கலையொட்டி சேலம் கிருஷ்ண்கிரி, தர்மபுரி மாவட்ட மக்கள்  ஒகேனக்கல்லில் இன்று அதிகாலை முதலே குவியத்தொடங்கினர் அவர்கள் காவிரி ஆற்றில் நீராடி, அங்கு விற்கும் மீன்களை வாங்கி சாப்பிட்டனர். மேலும் அருவியில் குளித்தும், காவிரி ஆற்றில் பரிசல் சவாரி சென்றும் ரசித்தனர்.
இதே போல் மேட்டூர் அணையிலும் கூட்டம் அலைமோதியது.இங்குள்ள முனியப்பன் கோவில், பூங்கா ஆகிய இடங் களுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இது போல் ஏற்காட்டிலும் அங்கு ள்ள பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக