வெள்ளி, 17 ஜனவரி, 2014

இந்தியாவில் பாக்., வங்கிகள் விரைவில் திறக்கப்படும்

இஸ்லாமாபாத்: இரு நாடுகளிடையே வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் பாக்., வங்கிகள் இந்தியாவில் கிளைகளை திறக்க உள்ளது  இந்தியா-பாகிஸ்தான் இடையே உறவுகளை மேம்படுத்தும் விதமாக வர்த்தக ரீதியில் வஙகி கிளைகள் திறக்கப்படும் என கடந்த 2012-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதன்படி இந்தியாவின் சார்பில் பாகிஸ்தானில் ஸ்டேட்வங்கி, பாங்க் ஆப் பரோடா வங்கிகளும் பாக்.,சார்பில் இந்தியாவில் தேசியவங்கி, யுனைடெட் வங்கிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவிற்கு வேண்டப்பட்ட நாடு என்ற அந்தஸ்த்தை வழங்க பாகிஸ்தான் தவறியதை அடுத்து வங்கிகிளைகள் திறப்பது குறித்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

ரிசர்வ் வங்கியிடம் அனுமதி: வர்த்தக உறவு தொடர்வது குறித்து பாக் வர்த்தக அமைச்சர் குர்ரம் தஸ்தகிர் கான் தெரிவித்ததாவது: பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷெரீப், புதுடில்லியில் வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த்சர்மாவை சந்தித்து பேசியுள்ளார்.
மேலும் இந்தியாவில் வங்கி கிளைகள் திறப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி்யிடம் அனுமதி கோரி கடிதம் எழுதப்பட்டிருப்பதாகவும் விரைவில் அதற்கான அனுமதிகிடைத்து விடும்என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.dinamalar.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக