புதன், 15 ஜனவரி, 2014

ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க 700க்கும் மேற்பட்ட வீரர்கள் 700 காளைகள் !பாலமேடு ஜல்லிக்கட்டு துவங்கியது..!

மதுரை பாலமேட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற  ஜல்லிகட்டு போட்டி துவங்கியது. பாலமேடு மஞ்சளாறுதிடலில் நடைபெற்று வரும் போட்டியில் 700 காளைகள் பங்குபெற்றுள்ளன. சீறிப்பாயும் காளைகளை அடக்க 700க்கும் மேற்பட்ட வீரர்கள்  களத்தில் இறங்கியுள்ளனர். முதல் முறையாக இந்த ஜல்லிகட்டு போட்டி ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மஞ்சளாறு திடலில் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக