திங்கள், 13 ஜனவரி, 2014

பத்மப்ரியா மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம்

சென்னை:‘மிருகம்‘, ‘பட்டியல்‘, ‘சத்தம் போடாதே‘ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பத்மப்ரியா. கடந்த 2 ஆண்டாக நடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அவர் கூறியதாவது:நடிகை ஆக வேண்டும் என்பதற்கு முன் படிப்பில் சாதிக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். ஆனால் என்னை நடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். மனதில் ஒரு பக்கம் அந்த ஆசை இருந்ததால் நடிகையாகிவிட்டேன். என்னை தேடி வந்த வாய்ப்புகளை மட்டுமே ஏற்று நடித்தேன். யாரிடமும் போய் நான் சான்ஸ் கேட்டதில்லை.
நடிகையாக பயணித்துக்கொண்டிருந்தாலும் படிப்பின் மீதான ஆர்வம் குறையவில்லை. ஒரு கட்டத்தில் நடிப்புக்கு விடுமுறைவிட்டு படிப்பில் முழுகவனம் செலுத்த தொடங்கினேன். 2 வருடத்துக்கு முன் அமெரிக்கா சென்று அங்கு படிப்பை தொடர்ந்தேன். காலை 5.30 மணிக்கு எழுந்து யோகா செய்யத் தொடங்கி பிறகு கல்லூரி, லைப்ரரி என்று என்னுடைய நேரம் கழிந்தது. படிப்பும் முடிந்துவிட்டது. மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்பதைவிட அழுத்தமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். வழக்கமாகவே நல்ல வேடங்கள் கிடைப்பதற்காக ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் நிறைய இடைவெளி விட்டு
விடுவேன். - tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக