சனி, 18 ஜனவரி, 2014

சசி தரூருக்கு மாரடைப்பு ! குணப்படுத்த முடியாத நோயால் சுனந்தா அவதி ?

புதுடெல்லி: மனைவி சுனந்தா புஷ்கரின் மர்ம மரணத்தை தொடர்ந்து நெஞ்சு வலி காரணமாக மத்திய அமைச்சர் சசிதரூர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சசிதரூருக்கு சிறிய அளவிலான மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி நட்சத்திர விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த விவகாரம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல் மாசிஸ்திரேட் உத்தரவுக்கு பிறகு இன்று கூறாய்வு செய்யப்படும். அதன் பிறகே மரணத்திற்கான காரணம் தெளிவாகும் என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. சுனந்தாவின் மரணத்தை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் சசிதரூரின் அலுவலகத்திற்கும், வீட்டிற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுனந்தாவின் மரணம் குறித்து மத்திய அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் தலைவரும், முன்னாள் கேரள கல்வி அமைச்சருமான எம்.ஏ. பேபி திருவனந்தபுரத்தில் வலியுறுத்தியுள்ளார்.


இதனிடையே மரணமடைந்த சுனந்தா புஷ்கரின் நோய் குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன. குணப்படுத்த முடியாத திசு வளர்ச்சி திசை மாற்றம் என்ற நோயினால் அவர் கடுமையாக அவதி பட்டதாக தெரிகிறது. அவரது சிறுகுடலில் காசநோய் தொற்றும் இருந்துள்ளது. இதற்காக கடந்த 14, 15 தேதிகளில் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக 45 வயதான பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் மெஹர் தராருக்கும், சசி தரூருக்கும் தொடர்பு இருப்பதாக டுவிட்டரில் குற்றம் குற்றம் சாட்டிய சுனந்தா பின்னர் அதனை மறுத்தார். இந்நிலையில் சுனந்தா மர்மமான முறையில் இறந்தது பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக