சனி, 18 ஜனவரி, 2014

கெஜ்ரிவால் போலீசுடன் மோதல் ! டெல்லி மாநில அரசுக்கு போலீஸ் அதிகாரம் கேட்கிறார்

புதுடில்லி: கடமையை செய்ய தவறிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கதவறினால் போராட்டத்தில் ஈடுபட போவதாக புதுடில்லி முதல்வர் எச்சரித்துள்ளார்.உள்துறை அமைச்சருடன்சந்திப்பு:கடந்தசில தினங்களுக்குமுன்னர் டென்மார்க்நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை மர்ம கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இதனை தொடர்நது காவல் துறை மீது நடவடிக்கை எடு்க்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவை முதல்வர் கெஜ்ரிவால், அமைச்சர்க் ராக்கி பிர்லா, சோம்நாத் பார்தி, மணீஷ்சிசோடியா ஆகியோர் சந்தித்தனர். மாநில அரசிடம் ஒப்படைக்க கோரிக்கை:தலைநகர் புதுடில்லியில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்த மக்கள் மாநில அரசிடம் மட்டுமே கேள்வி எழுப்பி வருகின்றனர். எனவே காவல்துறையை மாநில அரசின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும். தேவையெனில் மாநகராட்சி கவுன்சிலுக்கு உட்பட்ட பகுதி, மண்டலப்பாதுகாப்பு பகுதியையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளட்டும்.ஆட்சி அமைத்ததற்கு பின்னும் போராட்டமுன்னு போனா அன்றாட அரசு வேலைகளை யார் சாமி பார்த்துக்குவா???..வேண்டும்னா ரெண்டு அமைச்சர்களை முடிவு தெரியும் வரை உள்துறை அமைச்சக அலுவலகத்திலேயே உட்க்கார சொல்லுங்க...
மேலும் கடமையை செய்ய தவறிய போலீஸ் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் மீதான நடவடிக்கையை வரும் திங்கட்கிழமைக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் காலை 11 மணி முதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் முன்னர் அமைச்சர்கள் , எம்.எல்.ஏக்களுடன் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளார்.
புதுடில்லி நகர காவல் துறையின் பொறுப்பை மத்திய அரசின் உள்துறைஅமைச்சகம் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக