சனி, 18 ஜனவரி, 2014

சுனந்தா உடலில் காயங்கள் ! சசிதரூரிடம் இறுதிச்சடங்கு முடிந்ததும் விசாரணை !

டெல்லியில்  நேற்று  உயிரிழந்த சுனந்தா புஷ்கருக்கு உடல்கூரைவு முடிந்தது.  ஆய்வில் விஷம் ஏதும் உட்கொண்டு சுனந்தா இறந்ததற்கான  ஆதாரம் இல்லை என தகவல் தெரிவித்துள்ளது. இயற்கைக்கு எதிரான திடீர் உயிரிழப்பு என கண்டரியப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அதிகாரப்பூர்வ ஆய்வு அறிக்கை 2 அல்லது  3 நாளில் வெளியிட மருத்துவர் குழு முடிவு செய்துள்ளனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுனந்தாவுக்கு உடற் கூரைய்வு  நடைபெற்றது.சுனந்தா உடலில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிந்ததை அடுத்து சுனந்தா உடலை அவரது கணவர் சசிதரூர் பெற்றுக்கொண்டார். இன்று மாலை 4 மணிக்கு  சுனந்தா புஷ்கர் இறுதிச்சடங்கிற்க்கு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில் சுனந்தா உடலில்  கண்டறிந்த காயங்கள் வைத்து இயற்கைக்கு மாறான  திடீர் மரணமாக இருக்கலாம்  என  மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  மேலும் மரணத்துக்கான  காரணத்தை  கண்டு அறிய அவரது உடலை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினர். இறுதிச்சடங்கு முடிந்ததும் சசிதரூரிடம்  விசாரணை நடத்தப்படும் என  டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிக்விகின்றன மற்றும் சுனந்தா தங்கிருந்த ஹோட்டலில் கண்காணிப்பு கேமராவில் பிடிக்கப்பட்ட காட்சியை போலிஸார் எடுத்து சென்றனர்.dinakaran.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக