திங்கள், 13 ஜனவரி, 2014

கோவா முதல்வரை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவிக்க வேண்டும்: ஆம் ஆத்மி


பனாஜி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பதிலாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி அறிவிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. கோவா முதல்வரை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவிக்க வேண்டும்: ஆம் ஆத்மி கோவா மாநிலத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கோவா முதல்வர் பாரிக்கரின் எளிமையை நரேந்திர மொடி புகழ்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து இன்று கருத்து தெரிவித்துள்ள கோவா மாநில ஆம் ஆத்மியின் செய்தி தொடர்பாளர் தினேஷ் வகேலா, பாரதிய ஜனதாவுக்கு துணிச்சல் இருந்தால்.. எளிமை மீது நம்பிக்கை இருந்தால்.. மோடிக்கு பதிலாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கட்டுமே என்று கூறியுள்ளார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக