BBC : க்வென்டின் சோமர்வில் - பிபிசிசெய்திகள், காபூல் : தமனா சர்யாபி பர்யானி, தாலிபன்கள் தமது வீட்டுக்கு வெளியே வந்தபோது உதவிக்காக கெஞ்சும் வீடியோவை வெளியிட்டார்
தாலிபன்கள் மிரட்டலாம். 20 ஆண்டுகால வன்முறைப் போராட்டத்துக்குப் பிறகு, பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களை இழந்த பிறகு, மிருக பலத்தைப் பயன்படுத்தி இங்கு அவர்கள் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள்.
அப்படியிருந்தும், ஆப்கானிஸ்தானிய பெண்களில் சிலர் அவர்களின் மிரட்டலுக்கு பயப்பட மறுக்கிறார்கள்.
அந்த பெண்களில் தமனா சர்யாபி பர்யாணியும் ஒருவர். நீங்கள் வாழ்க்கையில் சாதித்த அனைத்தையும் பறிக்க விரும்பும் ஆயுதமேந்திய நபர்களுக்கு எதிராக நிற்க தைரியம் நிச்சயம் தேவை.
கடந்த வார இறுதியில், வேலை செய்யும் உரிமை மற்றும் கல்விக்கான உரிமையைக் கோரி வீதியில் இறங்கி போராடிய டஜன் கணக்கானவர்களுடன் சேர்ந்தார்.
சனி, 22 ஜனவரி, 2022
தாலிபன்கள் வந்து விட்டனர், எங்களுக்கு உதவுங்கள்" .. தாலிபனை எதிர்த்த பெண்கள் மாயம்: BBC
நடந்தது நடந்துபோச்சு: சோனியா காந்தியை தொடர்புகொண்ட மம்தா!
நக்கீரன் செய்திப்பிரிவு : 2024ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸுக்கு இடையே மோதல் வெடித்தது.
திரிணாமூல் காங்கிரஸ், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களை தனது கட்சிக்கு இழுத்தது. இது காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மேலும் மம்தா உள்ளிட்ட திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தனர். இதற்கு காங்கிரஸ் கட்சியும் பதிலடி அளித்தது.
இந்தசூழலில், கோவா தேர்தலில் கூட்டணி அமைக்க திரிணாமூல் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்தது. இதற்கு காங்கிரஸ் எந்த பதிலையும் அளிக்கவில்லை.
பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை நீதிமன்ற வளாகத்திலேயே சுட்டு கொலை செய்த தந்தை.. பீகார்
கலைஞர் செய்திகள் -Lenin : பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்தவர் தில்ஷாத் ஹுசைன். இவரது மகளை பக்கத்து வீட்டைச் சேர்ந்த பகவத் நிஷாத் என்பவர் கடந்த 2020ம் ஆண்டு கடத்தில் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து காவல்நிலையத்தில் தில்ஷாத் ஹுசைன் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து 2021ம் ஆண்டு ஹைதராபாத்தில் பகவத் நிஷாத்தை கைது செய்தனர்.
டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன்
மின்னம்பலம் : வைஃபை ஆன் ஆனதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. ”மாநகரத் தந்தை என்று சென்னை மேயரை அழைக்க முடியாது. மாநகரத் தாய் என்றுதான் அழைக்க வேண்டும். அந்த தாய் யார்?” என்று மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் படத்தோடு ஒரு கேள்வியையும் இணைத்து அனுப்பியிருந்தது இன்ஸ்டாகிராம்.
இந்த இன்ஸ்டாகிராம் கேள்விக்கு வாட்ஸ் அப் சுடச் சுட பதிலை டைப் செய்யத் தொடங்கியது.
“தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் 50% பெண்களுக்கான இட ஒதுக்கீட்டின்படி 11 மேயர் பதவிகளை பெண்களுக்கு ஒதுக்கி அறிவித்துள்ளார் முன்னாள் சென்னை மேயரும் முதல்வருமான ஸ்டாலின்.
அனிருத், ஐஸ்வர்யா மிக நெருக்கமான தொடர்பில் இருந்தனர்! பயில்வான் ரங்கநாதன் வில்லங்க பேட்டி
cinemapettai.com : கடந்த சில நாட்களாக தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து சம்பவத்தை பற்றி தான் மீடியாக்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றன. அவர்களின் பதினெட்டு ஆண்டு கால திருமண வாழ்கை திடீரென முடிவுக்கு வந்தது ஒரு பக்கம் அதிர்வலையை ஏற்படுத்தினாலும் மறுபக்கம் ஏன் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.
தற்போது அவர்களின் விவாகரத்தை பற்றி பலவிதமான காரணங்கள் சோசியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து பின்னணியில் என்ன நடந்தது என்பதை பற்றி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
காவிரி-ஒகேனக்கல் 2வது குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்: கர்நாடகதிற்கு அமைச்சர் துரைமுருகன் பதில்
மாலைமலர் : மனிதாபிமான அடிப்படையிலும் சரி சட்டப்பூர்வமான அடிப்படையிலும் சரி தமிழ்நாட்டுக்கு ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டத்தை ஆரம்பிக்கின்ற உரிமை உண்டு என துரைமுருகன் கூறி உள்ளார்.
சென்னை: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டத்தை ரூ.4,600 கோடி மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்படும் என்ற ஓர் அறிவிப்பை கண்டு கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் வெகுண்டெழுந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டத்தை செயல்பட விடமாட்டோம் என்று ஓர் அறிவிப்பை செய்திருக்கிறார்.
‘புஷ்பா’ படம் பார்த்து கொலை செய்த 3 சிறுவர்கள்... வன்முறைக்கு நீருற்றி வளர்க்கும் சினிமா
கலைஞர் செய்திகள் : ‘புஷ்பா’ திரைப்படம் பார்த்த சிறுவர்கள், அதில் வரும் நாயகனைப் போல பிரபலமாக நினைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘புஷ்பா’ திரைப்படம் பார்த்த சிறுவர்கள், அதில் வரும் நாயகனைப் போல பிரபலமாக நினைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘புஷ்பா’. கேங்ஸ்டர்களை மையமாக கொண்டு உருவான இந்த தெலுங்குப் படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இப்படத்திதில் வரும் அல்லு அர்ஜூனின் வசனங்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தன. இந்நிலையில் அந்தப் படத்தைப் பார்த்து உத்வேகமடைந்த சிறுவர்கள் 3 பேர் கொலை செய்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 minnors kill.. as in pushpa film
கர்நாடகா: பள்ளியில் ஹிஜாபுக்கு அனுமதி மறுப்பது மத சுதந்திர தலையீடாகுமா?
இம்ரான் குரேஷி - பிபிசி இந்திக்காக : கர்நாடகாவின் கடலோர நகரான உடுப்பியில் பள்ளி வகுப்பறையில் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் எனக் கோரி கடந்த சில நாட்களாக, சுமார் அரை டஜன் பதின்ம வயது மாணவிகள் நடத்தி வரும் போராட்டம் சமூக ஊடகங்கள் உட்பட ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாகியிருக்கின்றன.
முன்-பல்கலை கல்லூரி எனப்படும் பள்ளியின் 12ஆம் வகுப்புக்கு இணையான பாடமுறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் அந்த மாணவிகள், ஹிஜாபை அகற்றிய பிறகு வகுப்புகளுக்குச் செல்லுமாறு மாவட்ட உதவி ஆணையர் அந்தஸ்து கொண்ட அதிகாரி தலைமையிலான அரசு அதிகாரிகள் குழு வேண்டுகோள் விடுத்த பிறகும் அதை ஏற்க மறுத்துள்ளனர். இப்போது அவர்கள் வகுப்பறைக்கு வெளியேயும் படிக்கட்டுகளிலும் அமர்ந்து படிக்கிறார்கள்.
இலங்கை பறிமுதல் செய்த தமிழக படகுகளுக்கு நிவாரணம்!
மின்னம்பலம் : இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த படகுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது என்பது தொடர் கதையாகி வருகிறது. கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களது படகுகள் ஒப்படைக்கப்படுவதில்லை. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இந்த சூழலில் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் கடந்த 20ஆம் தேதி அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
கலைஞர் சிங்கப்பூர் பேச்சு-1999 ! தொல்காப்பிய தமிழ் இன்றும் இலங்கையில் பேசப்படுகிறது
ராதா மனோகர் : கலைஞர் ( 1999 சிங்கப்பூர்) : இன்றைய உலகம் விஞ்ஞான உலகத்திலே மிக மிக சுருங்கி கொண்டுதான் வருகிறது .ஒரு காலத்தில் ஆபிரகாம் லிங்கன் கொல்லப்பட்ட செய்தி ஐந்து நாட்களுக்கு பின்புதான் லண்டன் மாநகரத்திற்கே கிட்டியது
அந்த அளவுக்கு தகவல் தொடர்பு பஞ்சமாக இருந்த காலக்கட்டம் அது
ஆனால் இன்றைக்கு உலகத்தையே குறுகக்கூடிய சுருங்க வைக்கக்கூடிய வசதி வாய்ப்புக்கள் . தகவல் தொடர்புகள் உருவாக்கி இருக்கின்றன.
globalization என்று சொல்லப்படுகின்ற இந்த ஆங்கில வார்த்தைக்கு உலகமயமாகின்றது என்று பொருள்.
எனினும் think globally and act locally என்றே சொல்லுகிறார்கள்.
உலகமயவாதால் நாட்டின் எல்லை கோட்டை யாரும் அழித்து விட விரும்புவதில்லை
ஓபிசி இடஒதுக்கீடு தீர்ப்பு . ஒரு வரலாற்று பார்வை
ஓபிசி இடஒதுக்கீடு பற்றிய நீதிமன்ற தீர்ப்பு என்பது ஒரு நீண்ட வரலாற்று போராட்டத்தின் பின்பே கிடைத்திருக்கிறது .
சட்டப்போராட்டம் ஒரு புறமாகவும் அரசியல் ரீதியான போராட்டங்கள் மறுபுறமாகவும் தமிழ்நாடு போராடியதன் விளைவாகத்தான் இந்த நீதி நிலை நாட்டப்பட்டிருக்கிறது
இன்று முழு இந்தியாவும் தமிழ்நாட்டை நோக்கி திரும்பி பார்க்க வைத்திருக்கிறது இந்த தீர்ப்பு
இந்த பிரமாண்டமான வெற்றியின் பின்னணியில் திமுகவின் பங்கே பிரதான பாகத்தை வகிக்கிறது என்பது எதிரிகளும் ஏற்று கொள்ளக்கூடிய உண்மையாகும்.
இது பற்றிய ஒரு வரலாற்று பதிவை தோழர் தேவி சோமசுந்தரம் முன்பு பதிவேற்றி இருந்தார்.
அவரது முகநூல் முடக்கப்பட்டிருக்கிறது . நல்வாய்ப்பாக எனது பிளாக்கில் அது இருப்பதால் இங்கு மீள்பதிவிடுகிறேன்
Devi Somasundaram : 1991 ல 10% EBC ( economically backward class )...
பிற்படுத்தபட்டவர் இல்லை. உயர்சாதியில் பொருளாதார ரீதியா பின் தங்கியவர்களுக்கு ஒதுக்கீடு. (EWS பிறப்பு இது தான் ) .
1992 -இந்திரா சானே தீர்ப்பு ( மண்டல் வழக்கு ) 10% ஒதுக்கீட்டை ரத்து செய்கிறது.
2019, -ஜனவரி 7 ந்தேதி பார்லிமெண்ட் கூட்டுகுழு 10% ரிசர்வேஷனை முடிவு செய்கிறது.
ஜனவரி 8 லோக்சபாவில் டேபிள் செய்யப்பட்டு அன்றே பாஸ் ஆகிறது,
9 ந்தேதி ராஜ்ய சபாவில் பில் பாஸ் ஆகிறது .
12 ந்தேதி பிரெஸிடெண்ட் கையெழுத்து போடுகிறார் .
வெள்ளி, 21 ஜனவரி, 2022
டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்
மின்னம்பலம் : வைஃபை ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன் லைனில் இருந்தது. ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்திருந்தது. ‘அண்ணா சொகமா இருக்கியளா?
தெக்க மேயர் ரேஸ்ல கனிமொழிக்கும் உதயநிதிக்கும் ஒரே ஹீட்டா இருக்காம்லே... கொஞ்சம் விசாரிங்களே...’ என்றது அந்த தூத்துக்குடி ஆண் குரல்.
"நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மறைமுகத் தேர்தலாகவே நடக்க இருக்கிறது. மாநகர மேயர்களை, தான் 96 இல் தேர்ந்தெடுக்கப்பட்டது போல மக்களே தேர்ந்தெடுக்கவேண்டும் என்றுதான் முதல்வர் ஸ்டாலின் ஆரம்பத்தில் விரும்பினார்.
ஆனால் சொல்லிவைத்தாற்போல அனைத்து அமைச்சர்களும் முதல்வரிடம், ‘நேரடித் தேர்தலில் ரிஸ்க் அதிகம்.
அதனால் மறைமுகத் தேர்தலே வைக்கலாம்’ என்று வலியுறுத்தினார்கள். நேரடியாக மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமைச்சர்களான தங்களின் பவர் பாலிடிக்ஸ் தத்தமது மாவட்டங்களில் குறைந்துவிடும் என்பதே அமைச்சர்களின் அடிமனசு. இதைப் புரிந்துகொண்ட முதல்வரும் மறைமுகத் தேர்தலையே நடத்த முடிவு செய்தார்.
பிரியங்கா காந்தி உத்தர பிரதேச முதல்வர் வேட்பாளர்? வேறு யார் முகமாவது தெரிகிறதா என கேட்டார்
தினமலர் : புதுடில்லி: உ.பி.,யில் முதல்வர் வேட்பாளரா களமிறங்குவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த காங்., பொதுச்செயலர் பிரியங்கா, அங்கு எல்லா இடங்களிலும் எனது முகத்தை தான் பார்க்கிறீர்கள். காங்கிரசின் வேறு யாருடைய முகத்தையாவது பார்க்கிறீர்களா எனக்கூறினார்.
ஆனால், முதல்வர் வேட்பாளராக களமிறங்குவது குறித்து உறுதியாக எந்த பதிலையும் தர மறுத்துவிட்டார்.
உ.பி., சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ஸ்டார்ட் அப் நிதியாக ரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். போலீஸ் துறையில் ஒரு லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்.
தமிழ் தாய் வாழ்த்து -கலைஞரின் திருத்தம் செல்லும்... நீதிமன்றம் உத்தரவு!
நக்கீரன் செய்திப்பிரிவு : கடந்த 1970 ஆம் ஆண்டு தமிழ்த்தாய் வாழ்த்தை அப்போதைய முதல்வர் கலைஞர் திருத்தியது செல்லும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடல் வரிகளைக் குறைத்து தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
அந்த வழக்கில் 1970-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் தமிழ்த்தாய் வாழ்த்தைத் திருத்தியது செல்லும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் திராவிட மொழிகள் அனைத்தையும் இணைத்து பாடல் எழுதி இருந்தார்.
ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு! நாடாளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை.. விடாமல் போராடிய திமுக! திராவிட வரலாற்றில் மற்றோரு மைல்கல்
Vishnupriya R - Oneindia Tamil : சென்னை: எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநில அரசுகள் ஒதுக்கும் இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
திமுக அரசு நடத்திய சட்ட போராட்டத்தின் மூலம் சமூக நீதி காக்கப்பட்டதாக பாராட்டுகள் குவிகின்றன. மாநில அரசுகள் மத்திய அரசின் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கும் 15 சதவீத எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 50 சதவீத முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான சமூகநீதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்ததாக திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.
இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஓபிசி இடஒதுக்கீடு குறித்து மாநிலங்களவையில் திமுக குரல் எழுப்பியது.
தரமற்ற பொங்கல் பரிசு பொருட்கள்- நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
மாலைமலர் : தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது, கருப்பு பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட தேவையான கடும் நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
தரமற்ற பொங்கல் பரிசு பொருட்கள்- நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாட்டில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. இதில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.
உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா? இன்று தெரியும்!
மின்னம்பலம் : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கடந்த 19 ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தினார். அப்போது அனைத்துக் கட்சிகளும், ‘தேர்தலை ஒரேகட்டமாக நடத்திட வேண்டும்’ என்றும், ‘கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும்’ என்றும் கேட்டுக் கொண்டனர். தமிழக உள்ளாட்சித் தேர்தலை ஜனவரி 27க்குள் நடத்த வேண்டும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்... அந்த வழக்கு இந்த வாரம் விசாரணைக்கு வருகிறது.
திமுகவை ஆதரித்தால் திமுகவினரை விமர்சிக்க கூடாது என்பதல்ல?
Loganayaki Lona : திமுக ஆதரவு எனும் நிலைப்பாடு தேர்தல் வெற்றிக்கு பின் எடுத்த முடிவல்ல.
திமுக தொடர்ந்து ஏன் இந்த அதிமுக விடம் போய் தோற்கிறது?
அப்படி என்ன தான் அதிமுக செய்துருக்குது?
இனியும் இது தோற்றால் இங்கு மக்கள் நிலை என்ன ஆகும்?
என எனக்குள் ஏற்பட்ட கேள்விகளுக்கு வேலைகளுக்கிடையே,
,அரசியல் பேசாதே எனும் பல வசைகளுக்கிடையே விடை தேடி தேடி கற்றுக்கொண்டு கொடுத்த ஆதரவு!.
சிறு வயது முதல் கலைஞர் ஆட்சியின் நன்மையை பார்த்து உணரும் வாய்ப்பிருந்ததால்,
அது எளிதாக புரிந்தது..
ஸ்டாலின் எந்த வித அரசியல் காரணமும் இன்றி தொடர்ந்து பேசத்தெரியல , அப்பா போல் இல்லை போன்ற மொக்கை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு,
நிராகரித்து அநியாயமாக விமர்சிக்கப்பட்டபோதே அவர்க்கு கொடுத்த ஆதரவு தான்.
மணமகளின் கன்னத்தில் அறைந்தார் மணமகன்! திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! பண்ட்ருட்டியில் சம்பவம்
தினத்தந்தி : மணமகன் கன்னத்தில் அறைந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: உறவுக்கார வாலிபர் திடீர் மாப்பிள்ளையானார்...!
பண்ருட்டி அருகே திருமண வரவேற்பு விழாவில் மணமகன் கன்னத்தில் அறைந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். இதையடுத்து உறவுக்கார வாலிபர் திடீர் மாப்பிள்ளையாக தேர்வு செய்யப்பட்டு, மணப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்
பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், பண்ருட்டியை சேர்ந்த எம்.எஸ்சி பட்டதாரியான இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்தனர். அதன்படி இவர்களது திருமணம் நேற்று காலை காடாம்புலியூரில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் செய்திருந்தனர்.
உத்தர பிரதேசத்தில் களமிறங்கிய திராவிட மாடல் .. பாஜகவுக்கு ஆப்பு வைக்கிறது...
விடுதலை ராஜேந்திரன் : "உபி பாஜகவுக்கு ஆப்பு வைக்கிறது திராவிடன் மாடல்"
ஜனவரி 19,2022 அன்று வெளிவந்த இந்து ஆங்கில நாளேட்டில், உர்மினிஷ் என்ற பத்திரிக்கையாளரின் கட்டுரை
தமிழ்நாட்டின் 'திராவிடன் மாடல்' உபியில் பாஜக வின் இந்துத்துவ அரசியலுக்கு கடும் நெருக்கடிகளை உருவாக்கி இருப்பதை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.
கட்டுரையாளர் மாநிலங்களவை தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியவர்.
அடுத்த பிரதமர் பதவிக்கு RSS தயார் செய்யும் ஆதித்யநாத் உபி முதல்வராக படு தோல்வியை சந்தித்திருக்கிறார் என்றும் இஸ்லாமியர்களை எதிரிகளாக்கி இந்துக்களை அணி திரட்டும் இந்துத்துவா வலையில் வீழ்வதற்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட தலைவர்களும் குறிப்பாக இளைஞர்களும் தயாராக இல்லை.
அவர்கள் சமூக நீதி கோட்பாட்டை பேசத் தொடங்கி விட்டார்கள் என்றும் அவர் கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.
பொங்கல் நாளில் தலித் மக்கள் மீது நடந்த தாக்குதல்கள் தற்செயலானதா? விசிக ரவிக்குமார் MP
Ravi Kumar : வீரலூர் தாக்குதல்: விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், நேரில் சென்று பார்வையிட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையத்துக்கும் நன்றி
16 ஆம் தேதி வீரலூர் அருந்ததியர் குடியிருப்பில் தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் அந்த ஊரிலிருந்து எனக்குத் தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினேன்.
அதன் பின்னர் உயர் போலிஸ் அதிகாரிகள் அங்கு நேரில் சென்று தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரித்ததோடு சடலத்தை நெடுஞ்சாலை வழியே எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர்.
மாநில எஸ்சி எஸ்டி ஆணையத்தின் தலைவருக்கும் கடிதத்தை அனுப்பினேன். துணைத்தலைவர் தோழர் புனிதப் பாண்டியனிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் பார்வையிடவேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன்.
வியாழன், 20 ஜனவரி, 2022
சிறார் நூலகம் ! தமிழர் மறுவாழ்வு முகாம் வாழ் சிறுவர்களுக்கு தொடர்ந்து படிக்கவும் எழுதவும் ....
ந. சரவணன் : முகநூல் நட்பும் - சிறார் நூலகமும்...
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு முகநூல் நண்பர் ஒருவர் அவரது முகநூல் பக்கத்தில் ஒரு செய்தி பகிர்ந்திருந்தார்.
நண்பர்
திரு.விழியன் அவர்களிடம் தங்கள் ஊர் குழந்தைகளுக்கான சிறார் நூலகம் அமைக்க
புத்தகங்கள் கேட்டதாகவும் உடனடியாக ஏற்பாடு செய்த விழியன் Umanath Selvan
அவர்களுக்கு நன்றி கூறும் விதமாகவும் அப்பதிவு இருந்தது.
அந்த
செய்தியினை Copy செய்து முகநூல் நண்பர் பட்டியலில் இருந்த விழியன்
அவர்களுக்கு தனி செய்தியாக அனுப்பி, இதேபோல் நான் வசிக்கும் இலங்கை தமிழர்
மறுவாழ்வு முகாமில் பாலர் பள்ளி முதல் கல்லூரி வரை 80 மாணவர்கள் வரை
இருக்கிறார்கள் அவர்களுக்கும் இதேபோல் உதவ இயலுமா என கேட்டிருந்தேன்.
கேபி அன்பழகன் வீட்டில் அதிரடி ரெய்டு.. சென்னை நுங்கம்பாக்கம் வீட்டில் "சிக்கிய" பொள்ளாச்சி ஜெயராமன்
Vishnupriya R - Oneindia Tamil News சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகனின் உறவினர் வீட்டின் கதவை தட்டிய போது அங்கிருந்து அதிமுக முன்னாள் துணை சபாநாயகரும் எம்எல்ஏவுமான பொள்ளாச்சி ஜெயராமன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் கே பி அன்பழகன். இவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ 11.32 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தினர்.
கே பி அன்பழகனின் வீடு மற்றும் அவர்களது உறவினர்களின் வீடு, அலுவலகம் என சுமார் 57 இடங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டது.
கொரோனா தடுப்பூசிக்கு எதிராக (Hana Horka) இருந்த செக் நாட்டின் புகழ் பெற்ற பாடகி கொரோனாவில் உயிரிழப்பு
Rishvin Ismath: Conspiracy Theory (சதிக் கோட்பாடு) பரிசளித்த மரணம்!
ஹனா ஹோர்கா (Hana Horka) செக் நாட்டின் (Czech Republic) Asonance எனும் இசைக்குழுவின் பிரதான பாடகியாக இருந்து வந்தார்.
சதிக் கோட்பாடுகளை (Conspiracy Theories) உண்மை என்று முட்டாள்தனமாக நம்புகின்றவர்களில் ஒருவராக இருந்தார்.
அதன் காரணமாக கொவிட் 19 தடுப்பூசிகளுக்கு எதிரானவராக செயற்பட்டவர்,
கொவிட் 19 இற்காக தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தவர்.
அவர் மட்டுமல்ல, அவரது Asonance இசைக்குழுவினரும் கொவிட் 19 தடுப்பூசிக்கு எதிரானவர்கள் (anti-vaxxers).
சதிக் கோட்பாடுகளை நம்பியதன் உச்ச கட்ட விளைவாக சில நாட்களுக்கு முன்னர் வேண்டுமென்றே, அதாவது வலிந்தே தனக்கு கொவிட் 19 தொற்றை ஏற்படுத்திக் கொண்டார்.
சுசி கணேசன் விவகாரம்.. லீனா மணிமேகலை - சின்மயிக்கு தடை விதித்த நீதிமன்றம்!
இயக்குநர் சுசி கணேசன் மீது கவிஞரும் இயக்குநருமான லீனா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார்.அதற்கு எதிராக இயக்குநர் சுசி கணேசன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இப்படியொரு இடைக்கால தடையை பிறப்பித்துள்ளது.
பூனம் பாண்டேவை கைது செய்யக் கூடாது.. இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்.. அந்த விவகாரமா?பூனம் பாண்டேவை கைது செய்யக் கூடாது.. இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்.. அந்த விவகாரமா?
கோயில் திரு விழாவில் தீமிதித்த இளம் தாய் (சிங்களம்) உயிரிழப்பு - கொழும்பு - இலங்கை
.tamilmirror.lk :கொழும்பு ஆமர் வீதியிலுள்ள ஆலயமொன்றின் வருடாந்த திருவிழாவில் இடம்பெற்ற தீமிதிப்பு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த 26 வயதுடைய தாயொருவர் தீக்காயங்களால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான அக்குருவிட்ட ஆராச்சிகே இரேஷா மதுரங்கனி (சிங்களப்பெண்) என்றும் அவர் 10 வயது குழந்தையின் தாயார் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 14ஆம் திகதி இரவு இடம்பெற்ற தீமிப்பில் பங்கேற்ற அந்தப் பெண்ணின் கால்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
உக்ரேன் - ரஷியா போருக்கு தயாராகிறது? பேரழிவை சந்திக்க நேரிடும் .. அமெரிக்க எச்சரிக்கை
தினத்தந்தி : உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷியா பேரழிவை சந்திக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாஷிங்டன், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்து வருகிறது. அதிநவீன ஆயுதங்கள், போர் தளவாடங்கள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும், 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்துள்ளது. இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. ரஷியா
இதுவரை எந்தவொரு தென்னிந்திய பாடலும் படைக்காத இமாலய சாதனையை படைத்த விஷாலின் ‘டும் டும்’ பாடல்!
Mari S - tamil.filmibeat.com : சென்னை: விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்துடன் தைரியமாக வெளியான படம் எனிமி.
இந்த படத்தில் விஷால் மற்றும் மிருணாளினி ரவி நடனமாடும் 'டும் டும்' பாடல் யூடியூபில் இமாலய சாதனையை படைத்துள்ளது.
மேலும், இதுவரை எந்தவொரு தென்னிந்திய பட பாடலும் படைக்காத சாதனையை இன்ஸ்டாகிராமில் இந்த பாடல் படைத்துள்ளது படக்குழுவை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்துடன் அஜித்தின் வலிமை மற்றும் சிம்புவின் மாநாடு உள்ளிட்ட படங்கள் போட்டிப் போடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஜெய்பீம் படக்காட்சி ஆஸ்கார் விருதுகளின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம்.
மின்னம்பலம் : சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘ஜெய் பீம்’ திரைப்படம், கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதியன்று அமேசான் பிரைமில் வெளியானது.
இந்த படத்தினைப் பற்றிய ஒரு வீடியோ, சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் நிறுவனமான ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸி’ன் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருக்கிறது. இது ‘ஜெய் பீம்’ படத்திற்கு கிடைத்த உண்மையான மரியாதை என திரையுலகத்தினர் பலரும் பாராட்டுகிறார்கள். ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து, 2டி என்டர்டெயின்மென்ட் என்ற தங்களுடைய பட நிறுவனத்தின் மூலமாகத் தயாரித்துள்ள இப்படத்தின் சில காட்சிகள் அடங்கிய வீடியோ கிளிப்பிங்கில், படத்தின் மைய கரு உள்ளிட்ட அனைத்தையும் படத்தினை இயக்கிய இயக்குநர் தா.செ. ஞானவேல் விளக்கியுள்ளார்.
அமரர் எஸ் எம் கார்மேகம்! மலையகம் முதல் தமிழகம் வரை கோலோச்சிய சமூக பத்திரிகையாளர்!
Kanaga Ganesh : நினைவினில் வாழ்கிறார் இனிய தந்தை!
தமிழகத்தைப் பூர்வீகமாகவும், இலங்கை மத்திய மலையகத்தைப் பிறப்பிடமாகவும் கொண்ட எனது தந்தை எஸ்.எம்.கார்மேகம் இலங்கையிலும் இந்தியாவிலும் பத்திரிகை
சேவையில் ஆற்றிய பணிகள் அளவிடமுடியாதது.
பத்திரிகை பணிகள் ஒருபுறம் இருக்க, கவிதைகள், சிறுகதைகள் தொடர்கதைகள், கட்டுரைகள், ஆய்வு கட்டுரைகள் என்று அவரது பயணம் நீண்ட நெடியது.
தமிழ் நாட்டில் இருந்து இலங்கை கண்டி நகரத்திற்கு சென்று ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு "கண்டி மன்னர்கள்" என்ற ஒரு வரலாற்று ஆய்வு நூலை தந்திருக்கிறார். இந்நூல் கண்டி மன்னர்கள் பற்றிய சான்றுகளுடன் கூடிய அரிய தகவல்களுடன், அவர் படைத்தளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தவிர.
அவரது பத்திரிகை பணியின் அரசியல் செய்திகளை வடிவமைத்து தந்த அனுபவத்தின் அடிப்படையில் இலங்கையின் முழு அரசியல் வரலாற்றையும் தொட்டுச் செல்லும் "ஈழத்தமிழர் எழுச்சி"-ஒரு சம கால வரலாறு என்ற நூலையும் படைத்திருக்கின்றார்.
புதன், 19 ஜனவரி, 2022
வங்காளதேச நடிகை ரைமா கொலை ..பாலத்திற்கு அடியில் மூட்டையில் பிணமாக
shameena Parveen | Samayam Tamil : வங்கதேசத்தில் காணாமல் போன நடிகை ரைமா இஸ்லாம் ஷிமுவின் உடல் பாலத்திற்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தை சேர்ந்தவர் நடிகை ரைமா இஸ்லாம் ஷிமு. அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். இதையடுத்து அவரை தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் திங்கட்கிழமை கேரனிகஞ்ச் பகுதியில் இருக்கும் ஹசரத்பூர் பாலத்திற்கு அருகில் ஒரு மூட்டை கிடந்தது. அந்த மூட்டையை பிரித்துப் பார்த்தபோது அதில் ரைமாவின் உடல் இருந்தது.
விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கு: ஹரிநாடார் கைது!
மின்னம்பலம் : நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி 2020ஆம் ஆண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பனங்காட்டுப் படை கட்சித் தலைவர் ஹரி நாடார் விஜயலட்சுமியைக் கண்டிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, 30 சதவீத ஊக்க மதிப்பெண் வழங்க தடையில்லை -உயர்நீதிமன்றம் உத்தரவு
மாலைமலர் :அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண் வழங்குவதால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
சென்னை: கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு முதுகலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவீதம் ஊக்கத்தொகை மதிப்பெண் வழங்கப்படும் என அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுசாரா மருத்துவர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
பிரதமர் மோடியின் 'டெலிப்ராம்ப்டர்' வில்லங்க நிமிடங்கள் நீக்கம்
உலக பொருளாதார மாநாட்டில் கடந்த திங்கட்கிழமை காணொளி வாயிலாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றியபோது திடீரென அவர் தமது பேச்சை சில நிமிடங்கள் தொடர முடியாமல் இடைநிறுத்தியதற்கு அவரது கண் முன் இருந்த டெலிப்ராம்ப்டர் சாதன குளறுபடியே காரணம் என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
உண்மையில் அன்றைய தினம் என்ன நடந்தது?
டாவோஸில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதியின் உரையின் போது திடீரென அவர் தமது உரையை இடைநிறுத்த வேண்டியதாயிற்று.
தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு பின்னணியில் புது தகவல்கள் - விலாவாரியாக பயில்வான் ரங்கநாதன்
Vishnupriya R - Oneindia Tamil : சென்னை: நட்சத்திர தம்பதி தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவிற்கு பத்திரிகையாளரும் கலைத் துறையைச் சேர்ந்தவருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதியிடையே பிரிவு ஏற்பட்டதற்கு நெட்டிசன்கள் பல்வேறு தரப்பு காரணங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதில் எது நிஜம் என தெரியவில்லை.
இந்த நிலையில் இந்த தம்பதி பிரிந்தது ஏன் என்பது குறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தனியார் செய்தி சேனலுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் நிறைய தகவல்களை கொடுத்துள்ளார்.
பாகப்பிரிவினை செய்த சில மணி நேரத்தில் குளத்தில் சடலமாக மிதந்த சிறுவர்கள்... போலீசார் விசாரணை!
நக்கீரன் - பகத்சிங் : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கற்பூரசுந்தரேசுவர பாண்டியன். இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இவரது மகன்கள் நிவாஷ் பாண்டி (வயது 6), ரித்திஷ் பாண்டி (வயது 4) ஆகிய இருவருடன் 4 சகோதரர்களுடன் ஒரே குடிசையில் வசித்து வருகிறார். தான் வெளியூர் வேலைக்கு சென்றால் தனது மகன்களை தனது சகோதரர்கள் பாதுகாப்பில் விட்டு செல்வது வழக்கம்.
PTR ராஜன் டு TRB ராஜ ஐடி விங் மாற்றப் பின்னணி!
மின்னம்பலம் : தமிழக நிதியமைச்சரும், திமுகவின் ஐடி விங் மாநிலச் செயலாளருமான பி.டி.ஆர். தியாகராஜன் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதை ஏற்றுக் கொண்ட திமுக தலைமையும் புதிய ஐடி விங் மாநில செயலாளராக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரான டி.ஆர்.பி.ராஜாவை நியமித்திருக்கிறது.
இதுகுறித்து திமுக தலைமை நேற்று (ஜனவரி 18) வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், “ திமுக தகவல் தொழில் நுட்ப அணிச் செயலாளராக பணியாற்றி வந்த தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அரசுப் பணிகளில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் அப்பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக தலைமைக்குக் கொடுத்திருந்த கடிதத்தை ஏற்றுக் கொண்டு... அவரை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, கழக சட்டதிட்ட விதி 31 பிரிவு 19 இன்படி தகவல் தொழில் நுட்ப அணிச் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. நியமிக்கப்படுகிறார்.
களப்பிரர்கள் காலம்; இருண்ட காலமல்ல; அது ஒரு பொற்காலம்' - சொன்னவர் பாபாசாகேப் அம்பேட்கர்
வேந்தன். இல. : நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்திருந்த தமிழரா? திராவிடரா? கருத்தரங்கில் ம.செந்தமிழன் பேசிய 'தமிழர் மெய்யியல் - இறையுரை'யை எனக்கு நாம் தமிழர் தோழர் அனுப்பி இருந்தார். தோழர் மன்னிக்கவும். அது இறையுரையல்ல. பொய்யுரை.
இப்படி சொல்வதற்கு காரணம் அந்த உரையில் முழுதும் மலிந்து கிடந்த பொய்கள். அவர் சொன்ன ஒவ்வொரு கருத்திலும் உள்ள பொய்கள். ஆதாரங்களோடு மறுக்கலாம். ஆனால் அதற்கு முகநூல் பதிவு இடம் தராது.
கழுகு பார்வையில் (கழுகு பார்வையே கூரிய பார்வைதானே) மேலெழுந்த வாரியாக சில புள்ளிகளை தொட்டுக்காட்டினாலே அவரின் பொய்களும் அறியாமையும் அம்பலமாகும்.
1. ஐம்பெருங்காப்பியங்களில் வளையாபதியும் குண்டலகேசியும் குப்பை என்கிறார். ஏனெனில் அது சமண (ஜைன) காப்பியமாம். அதில் மறுபிறவி குறித்து தான் அதிகம் பேசப்பட்டுள்ளன. ஆனால் சிலப்பதிகாரம் தமிழரின் மரபை பேசிய காப்பியம் என்கிறார்.
செவ்வாய், 18 ஜனவரி, 2022
பிடிஆர் சொன்ன காரணம்.. ராஜினாமா கடிதத்தில் இருப்பது என்ன? டிஆர்பி ராஜா நியமனத்தில் நடந்தது என்ன?
Shyamsundar - Oneindia Tamil : சென்னை; திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இது தொடர்பான தகவல்கள் முன்பே வெளியான நிலையில் திமுக சார்பாக அதிகாரப்பூர்வமாக இப்போதுதான் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு நிதி அமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுகவில் ஐடி பிரிவு செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில்தான் சமீபத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பதவியை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியானது.
ஆனால் இந்த தகவல் அப்போது உறுதிப்படுத்தப்படவில்லை. கட்சி தலைமையும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதையும் அப்போது வெளியிடவில்லை.
திமுக ஐடி விங் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா MLA நியமனம்! பழனிவேல் தியாகராஜன் ராஜினாமா கடிதம் ஏற்பு!
Arsath Kan - Oneindia Tamil : சென்னை: திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ.வை நியமனம் செய்வதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே அந்த அணியின் மாநிலச் செயலாளராக இருந்த அமைச்சர் பழனிவேல் தியாரகாரன், அரசுப் பணிகளில் முழுக்கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், அவர் அளித்த விலகல் கடிதம் ஏற்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.
இதேபோல் திமுக அயலக அணி செயலாளராக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திமுக தகவல்தொழில் நுட்ப அணி செயலாளராக பணியாற்றி வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசுப் பணிகளில் முழுக்கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், அப்பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக கழகத்தலைவர்கள் அவர்களிடம் கொடுத்த கடிதத்தை ஏற்றுக்கொண்டு, அவரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து கழக சட்டத்திட்ட விதி 31-பிரிவு 19-ன் படி அவருக்கு பதிலாக கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. நியமிக்கப்படுகிறார்.
ஆட்டுக்குப் பதில் மனிதரின் தலையை வெட்டிய மதுபோதையில் சலபதி! கோயில் திருவிழாவில் வெட்டப்பட்ட சுரேஷ் உயிரிழப்பு மதுபோதையில்
கலைஞர் செய்திகள் : கோயில் திருவிழாவின் போது ஆட்டுக்குப் பதிலாக மனிதனின் தலையை வெட்டிய சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், வலசப்பள்ளி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலை முன்னிட்டு ஆடு, கோழி ஆகியவற்றைப் பலி கொடுக்கும் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இதன்படி கடந்த 16ம் தேதி கோயில் திருவிழாவில் ஆடு, கோழிகள் பலி கொடுக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியில் இந்த வார்டுகளில் இருந்துதான் முதல் பெண் மேயர் வரப்போகிறார்
மாலைமலர் : மேயரை கவுன்சிலர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள். எனவே பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 32 வார்டுகளில் இருந்து வெற்றிபெறும் ஒரு பெண்தான் மேயராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: நகர்ப்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை மேயராகப் போகும் முதல் பெண் பட்டியலினத்தவர் யார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. அதில் 16 வார்டுகள் பட்டியலின பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வார்டுகள் வருமாறு:-
வார்டு எண்: 3, 16, 17, 18, 21, 22, 24, 45, 62, 72, 73, 99, 108, 117, 144, 200.
16 வார்டுகள் பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வார்டுகள் விவரம் வருமாறு:-
28, 31, 46, 47, 52, 53, 59, 70, 74, 77, 85, 111, 120, 135, 159, 196.
சென்னை குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி -முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
மாலைமலர் :தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பி வைக்கப்படும் என கூறினார்.
சென்னை: குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.
தமிழ்நாட்டு ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டு ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதிகள் பிரிகிறார்கள்! அதிர்ச்சியில் ரஜினி - கஸ்தூரி ராஜா குடும்பம்
Mohana Priya - tamil.filmibeat.com : சென்னை : மனைவி ஐஸ்வர்யாவை பிரிய முடிவு செய்திருப்பதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.
தனுஷின் இந்த திடீர் முடிவால் ரஜினி குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகினரும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து விவாகரத்தை அறிவித்து வருவதால், என்ன காரணம் என புரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.
நாகசைதன்யா - சமந்தா, இசையமைப்பாளர் இமான் ஆகியோர் சமீபத்தில் விவாகரத்தை அறிவித்தனர். இந்நிலையில் இன்று தனுஷும் தனது மனைவியை பிரிய போவதாக அறிவித்துள்ளார்.
பிரபல டைரக்டரான கஸ்தூரி ராஜாவின் இளைய மகனான தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை 2004 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
மாமனிதர் கர்னல் பென்னிகுயிக் வரலாற்றின் மீது சேறு பூச முயலும் போலிகள்
Aravind Akshan : வரலாற்றின் உண்மைகள் குளிரூட்டப்பட்ட அறைக்குள் இல்லை:
கர்னல் பென்னிகுயிக் குறித்து தவறான செய்திகள் பரப்புவதை நிறுத்துவீர்களா கவிஞர் வெண்ணிலா அவர்களே…
ச.அன்வர் பாலசிங்கம் : எழுத்தாளன் என்பவன் உண்மையை உரக்க உரைக்கும் உரை கல்லாக இருக்க வேண்டும் என்பது நியதி. இந்த நியதியை நிறைய நேரங்களில் நிறைய பேர் கவனமாக கடந்து விடுகிறார்கள்.
புரட்சிகரமாக பேசுகிறோம் என்கிற போர்வையில் ஒன்றை பேசினால் இது விவாதிக்கப்படுமா, சர்ச்சை ஆகுமா என்பதை மனதில் கொண்டே இங்கு சிலர் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இவர்களெல்லாம் தொழில்முறை எழுத்தாளர்கள். சமூகத்தின் பிரதிபலிப்பை உள் வாங்குவதில் இவர்களுக்கு நிரம்ப சிரமம் இருக்கிறது. இது போன்றவர்களை கவனமாகத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தால் கூட, பொதுவெளியில் அவர்களுக்கான வெளிச்சத்தை கொடுப்பதற்கு நிறைய பேர் தயாராக இருப்பதால் மட்டுமே இந்த விளக்கம்.
மனித உரிமைகளுக்கான raoul wallenberg prize ஐரோப்பிய விருது எவிடென்ஸ் கதிருக்கு வழங்கப்படுகிறது
எவிடென்ஸ் கதிர் : அன்பு நண்பர்களே! வணக்கம்.உணர்வின் உச்சத்திலிருந்து இதை எழுதுகிறேன்.
ஒரு பெரிய அளவிலான சர்வதேசிய விருது கிடைத்து இருக்கிறது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மனித உரிமை பணியில் ஈடுபட்டு வருகிறேன்.
அர்ப்பணிப்போடு என்னால் இயன்ற பணியினை செய்து கொண்டே வருகிறேன்.
நெருக்கடிகளும் சவால்களும் நிறைந்த பனி. ஆயினும் சோர்ந்து போய் விடவில்லை.
இந்த நிலையில்தான் இந்த விருது கிடைத்து இருக்கிறது.
ஜாதி வெள்ளையர்கள் ஏற்படுத்தியதா? ஜாதியமைப்புக்கு சாமரம் வீசிய ஆங்கில பிரெஞ்சு அதிகாரிகள்! 1926 இல் வெளியான அவாள் நூல் விபரங்கள்
Dhinakaran Chelliah : ஜாதி வெள்ளையர்கள் ஏற்படுத்தியதா?
சமீப காலங்களில் ஹிந்து மத மக்களுக்குள் வர்ண ஜாதிப் பிரிவினை துவேஷத்தை ஏற்படுத்தியவர்கள் வெள்ளையர்கள் எனவும்,ஜாதி ஹிந்துக்களுக்கு எதிராக பட்டியலினத்தவர்களை தூண்டியவர்கள் வெள்ளையர்கள்
எனவும் ஒரு பிரிவினர்,தொடர்ந்து பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்கள். வெள்ளையர்களுக்கு (ஆங்கிலேயர் மற்றும் பிரஞ்சுக்காரர்கள்) எதிராக இவர்கள் எழுதுவதையும் பேசுவதையும் தட்டிக் கேட்பதற்கு யாரும் இல்லை என்பதே இதற்குக் காரணம்.
இந்த வாதங்களை, 1926 ஆம் ஆண்டு வெளியான “ஹிந்து மதத்தின் பிராணாதாரம் ஜாதி அமைப்பும் ப்ராம்மண்யமுமே”எனும் நூல் தூள் தூளாக்குகிறது. சனாதனவாதிகளின் கடந்த கால நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டக் கூடிய முக்கியமான ஆவணம் இந்த நூல் ஆகும்.இந்த நூலை எழுதியவர் L.A.ரெங்கஸாமி அய்யர் அவர்கள்.
சனாதனவாதிகள் எப்பேற்பட்ட விஷமப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் என்பதை இந்த நூலினைப் படிக்கிற எந்த ஒரு பாமரனும் உணர்ந்து கொள்ள முடியும்.
திங்கள், 17 ஜனவரி, 2022
நடராசன் - தாளமுத்து! ஜாதி கும்பலிடம் இருந்து மொழிப்போர் தியாகிகளை பாதுகாக்க வேண்டும்.
Vijayabaskar S : தாளமுத்து நடராசனா? நடராசன் தாளமுத்தா?
1938 இந்தி எதிர்ப்பு போரில் முதலில் தாளமுத்தா நடராசனா என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. முதலில் இறந்தது நடராசன். இரண்டாவது இறந்தது தாளமுத்து.
திராவிட இயக்கத்தை சேர்ந்த யாரும் இதை மறுக்கவும் இல்லை. மறைக்கவும் இல்லை.
தோழர்கள் நடராசனும் தாளமுத்துவும் இறந்த போது தந்தை பெரியார் பெல்லாரி சிறையில் இருந்தார்.
முதலில் இறந்த (15.01.1939) நடராசனின் உடல் மூலக்கொத்தளம் சுடுகாட்டில் புதைக்கப்பட்டது.
குடியுரிமை நோக்கிய நெடும்பயணம் நம்பிக்கையை விதைத்த முதல்வர் ஸ்டாலின் - கோவி லெனின்
Govi Lenin : குடியுரிமை நோக்கிய நெடும்பயணம்
தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியேயும் வசிக்கும் இலங்கைத் தமிழரின் வாழ்வுரிமையைக் கருத்திற்கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இலங்கைத் தமிழர் நலன் ஆலேசானைக் குழுவை உருவாக்கினார்.
அதற்கான அரசாணை வெளியிடப்பட்டபோதே, முகாம்களின் உள்கட்டமைப்புகள், இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை மேம்பாடு ஆகியவற்றுடன், குடியுரிமை மற்றும் இலங்கைக்குத் தாமாக விரும்பிச் செல்லுதல் போன்ற நீடித்த தீர்வுகள் தொடர்பான சட்டப்பூர்வ அம்சங்கள் குறித்து வகை செய்வதே இந்தக் குழுவின் முதன்மைப் பணி என்பது குறிப்பிடப்பட்டிருந்தது.
குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி கிடையாது! பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
நக்கீரன் செய்திப்பிரிவு : குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17/01/2022) கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "வ.உ.சி., பாரதி, வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் படங்கள் அடங்கிய அலங்கார ஊர்த்தி மறுக்கப்பட்டது ஏமாற்றமளிக்கிறது.
விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். குடியரசு தின அணி வகுப்பில் தமிழக ஊர்தி இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அலங்கார ஊர்தி தொடர்பாக, மாநில அதிகாரிகள் மூன்று முறை குழுவிடம் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
11 மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு! சென்னை, தாம்பரம் உள்ளிட்ட - தமிழ்நாடு அரசு அதிரடி
Shyamsundar - Oneindia Tamil : சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி பதவிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கிறது.
இதில் சென்னை, தாம்பரம் உள்ளிட்ட 11 மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் திமுக அரசு இதற்கு தீவிரமாக தயாராகி வருகிறது.
நகராட்சி, மாநகராட்சி பதவிகளுக்கு நடக்கும் இந்த தேர்தல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.6230.45 கோடி நிவாரணம்.. 3 முறை கேட்டும் கொடுக்கவில்லை.. அமித் ஷாவிற்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.
அருந்ததியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் அருந்ததியர் குடியிருப்புகள் சூறை.! - இரா.அதியமான் - தலைவர் ஆதித்தமிழர் பேரவை
Kathiravan Mayavan : அருந்ததியர் பிணம் பொதுப்பாதையில் செல்ல தடை.! அருந்ததியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்
அருந்ததியர் குடியிருப்புகள் சூறை.!
சாதிவெறி வன்முறையை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது!
கடந்த 10 ஆண்டுகளாக சமூகநீதியையும், சமத்துவத்தையும் பாழ்படுத்திய சாதிவெறி எத்தர்கள் பார்ப்பனிய போதை தலைக்கேறி தமிழகத்தை வன்முறைக்கடாக மாற்றும் சூழ்ச்சியில் இறங்கி அருந்ததியர் குடியிருப்புகளை அடித்து நொறுக்கி துவம்சம் செய்து பிணத்தை பொதுப்பாதையில் எடுத்துச் செல்லவும் தடைவிதித்துள்ளனர்.
திருவண்ணமலையிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கலசபாக்கம் ஒன்றியம் வீரலூர் கிராமம் பட்டியல்-அருந்ததியர் காலனியில் வசிக்கும் மல்லிகா (48) என்பர் கடந்த பொங்கல் தமிழர் நன்நாளன்று உடல் நலக்குறைவினால் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
நீட் விலக்கு! அமித்ஷாவை சந்திக்கவிருக்கும் தமிழ்நாடு எம்.பி.க்கள் குழு
நக்கீரன் செய்திப்பிரிவு : நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக எம்.பி.க்கள் குழு இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்திக்கின்றனர்.
நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவையும் தமிழ்நாடு அரசு அமைத்தது. இக்குழுவும் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய்ந்து அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தது.
சட்டசபையில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
புதிய படங்களை ஓரங்கட்டிய Digital நினைத்ததை முடிப்பவன் - எம்.ஜி.ஆர்
மின்னம்பலம் : பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு, தீபாவளி எதுவாகினும் அது ரிலீஸ் படங்களோடு என்கிற அளவிற்கு தலைமுறை மாற்றம் ஏற்பட்டுவிட்டது. கொரோனா பிரச்சினைக்கு பின் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு ரிலீஸ் படங்கள் என்கிற திட்டமிடல் தமிழ்நாட்டில் இல்லாமல் போய்விட்டது.
வலிமை, ராதேஷ்யாம், ஆர்ஆர்ஆர் போன்ற பிரம்மாண்ட படங்கள் பொங்கல் ரேஸில் இருந்து ஒதுங்கியதால் பிரபுதேவா நடிப்பில் தேள், விதார்த் நடித்துள்ள கார்பன், சசிகுமார் நடிப்பில் கொம்புவச்ச சிங்கம், அஸ்வின் நடிப்பில் என்ன சொல்லப்போகிறாய், மற்றும் நாய் சேகர் என ஐந்து புதிய படங்கள் ஜனவரி 13, 14 அன்று வெளியானது.
திமுகவை நோக்கி ஒருவரும் அதிமுக சிலீப்பர் செல்கள் .. வழக்கு பயமாம்
மின்னம்பலம் :அதிமுக ஆட்சி முடிந்து திமுக ஆட்சிக்கு வந்து எட்டாவது மாதம் நடந்துகொண்டிருக்கிறது. அரசியலில் எதிர்க்கட்சிகளில் இருந்தவர்கள் ஆளுங்கட்சிக்கு மாறுவது வழக்கமான காட்சிதான்.
அந்த வகையில் அதிமுக, பாமக போன்ற பல்வேறு கட்சிகளில் இருந்து கட்சிப் புள்ளிகளும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் திமுகவுக்கு மாறி வருகின்றனர். இதற்கு சேலம் மாவட்டமும் விதிவிலக்கல்ல.
சேலம் மாவட்டத்தில் தற்போது அதிமுகவைச் சேர்ந்த உள்ளாட்சி ஒன்றிய கவுன்சிலர்களை திமுகவுக்குக் கொண்டுவரும் வேலையில் திமுகவின் ஒன்றிய செயலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
எடப்பாடி ஆட்சியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது பெரும்பாலான இடங்களில் அதிமுக வெற்றிபெற்றது. முதல்வரின் சொந்த மாவட்டம் என்பதால் பல்வேறு இடங்களிலும் அதிமுகவினர் வெற்றிபெற்றனர். அவர்களை எல்லாம் இப்போது திமுகவில் சேர்த்து ஒன்றிய தலைவர்களாக திமுகவினர் வரும் சூழலை உருவாக்கி வருகிறார்கள் திமுக ஒன்றிய செயலாளர்கள்.
சேலம் போலீஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளி பிரபாகரன் கொலை .. இன்னொரு சாத்தான்குளம்!
நக்கீரன் செய்திப்பிரிவு :: சேலம் மாவட்டம், கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). மாற்றுத்திறனாளியான இவரை திருட்டு வழக்கில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் போலீசார் கடந்த 11ஆம் தேதி கைது செய்து, அந்த மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், 12ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் அன்று இரவே உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து பிரபாகரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
பிரபாகரனுக்கு ஆதரவாக அவரது குடும்பத்தாருடன் விசிகவின் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு செயலாளர் சௌ.பாவேந்தன் மற்றும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் அரசு மருத்துவமனைக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திமுக அடிமட்ட தொண்டர்கள் மதிக்கப்படுவதில்லையா? சமூக ஊடங்களில் ஆதங்கம்
Muruganantham Rv : அரசியலுக்கு ஏன் வந்தோம் என சிந்திக்க தோன்றுகிறது
உலகத்தில் ஏழைகளுக்கு எவ்வாறு அவமானம் பரிசாக தரப்படுகிறதோ அதே மாதிரி அடிமட்ட தொண்டனுக்கு அவமானமும் ஏமாற்றமும் பரிசாக கிடைக்கிறது
யாரை நாம் பதவிக்கு கொண்டு வர அரும்பாடுபட்டமோ யார் நமக்கு உதவ கடமை பட்டுள்ளார்களோ அவர்களே நம்மை உதாசின படுத்துகின்றனர்
கட்சியில் இல்லாமல் பணம் மட்டுமே இருந்தாலே போதும் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்ற சிந்தனைக்கு அடிமட்ட தொண்டர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்
எல்லாமே ஓரு குளத்தில் ஊறிய மட்டைகளாக உள்ளனர் .
எல்லாமே பணத்தை நோக்கி பயணிக்கின்றனர்
பத்து உறுப்பினர் கார்டு வைத்திருந்தாலும் கழகத்தை வளர்க்க சிறைக்கு போயிருந்தாலும் அதனால் என்ன பயன் what for use எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் யாரோ சம்பாதிக்க நாம் அடிமை வேலை பார்க்காமல் இருந்திருந்தால் பணம் சம்பாதித்து இருந்திருக்கலாம்
ஞாயிறு, 16 ஜனவரி, 2022
குடியுரிமைத் திருத்தச் சட்டமும், நாடற்ற மலையகத் தமிழர்களும். மு.சி.கந்தையா
1948ஆம் ஆண்டில் இலங்கை நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இலங்கை பிரதமர் டி.எஸ். சேனநாயக்க பின்வருமாறு அறிமுகப் படுத்தினார்.
“இது எளிமையான சட்டமாக இருந்தாலும், மிக முக்கியமான சட்டமாகும். எவரது நலன்களுக்கும் நாம் தீங்கு விளைவிக்க எண்ணவில்லை.
வேறு ஒரு நாட்டில் பிரஜைகளல்லாத இலங்கையிலுள்ள மக்களு க்கு பிரஜா உரிமை (குடியுரிமை) வழங்க முயற்சிக்கி றோம். நாம் எமது சொந்த பிரஜாவுரிமை (குடியுரிமை) சட்டங்களை வைத்திருப்பது அவசியமானதாகும்”என்று தனது உரையில் வெளிப்படுத்தினார்.
இலங்கை குடியுரிமையைப் பெற்றிருந்த சுமார் பத்து லட்த்தினரின் குடியுரிமையும், வாக்குரிமைபறிப்புகளும் அவரது மென்மையான உரையில் மறைந்திருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கூட அறிந்திருக்க வில்லை. குடியுரிமை திருத்தம் என்ற பெயரில் இந்திய வம்சா வழித் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து. நாடற்ற வர்களாக ஆக்கியது. குடியுரிமை த்திருத்தச் சட்டம்.
இலங்கையில் சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையில் புதிய அணி
virakesari.lk : தென்னிலங்கை அரசியல் களத்தில் புதிய அரசியல் அணியொன்று எதிர்வரும் மார்ச் மாதம் ஐந்தாம் திகதியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த அரசியல் அணியில் மையப்புள்ளியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநயக்க குமாரதுங்க இருக்கவுள்ளதோடு, குமார் வெல்கம, அர்ஜுண ரணதுங்க, சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் ஒருங்கிணையவுள்ளனர்.
இந்த அணியானது குமார வெல்கம தலைமையில் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய அரசியல் கட்சியான புதிய லங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்தி பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைக்கும் வகையில் இந்த அணி செயற்படவுள்ளது.
இதுதொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம வீரகேசரியிடத்தில் தெரிவிக்கையில்,
ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகார் கொடுத்த விஜயநல்லதம்பி கைது!
நக்கீரன் செய்திப்பிரிவு : ஆவினில் மேலாளர் பணி வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் 30 இலட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டதாக சாத்தூரைச் சேர்ந்த ரவிந்தரன் என்பவர் புகார் அளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ராஜேந்திர பாலாஜி, விஜயநல்லதம்பி உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே ஆவின் மற்றும் அரசுத்துறைகளில் வேலை வாங்கித்தராமலும், கட்சிப் பணிகளுக்காகச் செலவழித்த பணத்தைத் திருப்பித் தராமலும் ரூ.3 கோடி வரை மோசடி செய்தார் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது அதிமுக முன்னாள் ஒ.செ.விஜயநல்லதம்பி அளித்த புகார் வழக்காகப் பதிவானது.
10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை - தமிழ்நாடு அரசு
மாலைமலர் :கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை: கொரோனா தொற்று காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பொதுத் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.
இதற்கிடையே, இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்தலாம் என ஐகோர்ட் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்: அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி
தினத்தந்தி : சென்னை தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலும், ‘ஒமைக்ரான்’ சமூக பரவல் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும் தமிழக அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. அதன்படி கடந்த 6-ந்தேதி முதல் இரவு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஏழைகள் மீது அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை - அமர்த்தியா சென்
சாதி சங்கங்கள் அதிகார கொட்டடிகள் ஆனது! .. பின்பு .அவை கட்சிகளாகவும்... அதிமுக அரசியலின் ஆரம்ப புள்ளி!
Kathir RS : சாதி சங்கங்கள் இந்த மண்ணில் கிட்டத்தட்ட நூறாண்டுகாலமாக இருக்கின்றன.
அவை பெரும்பாலும் உறவின்முறை நிகழ்வுகள்
சத்திரம் சாவடி சாப்பாடு போன்ற வசதிகளுக்காக தத்தமது சமூகத்தினரின் பயண வசதிகள் திருமண தொடர்புகள் போன்றவற்றுக்காக உருவாக்கப்பட்டவை.
அவை பெரும்பாலும் உயர் சாதியினரால் அமைக்கப்பட்டவை.அயோத்திதாசர் ரெட்டைமலையார் முன்னெடுப்பில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சங்கங்கள் அமைக்கப்பட்டன.