புதன், 19 ஜனவரி, 2022

பாகப்பிரிவினை செய்த சில மணி நேரத்தில் குளத்தில் சடலமாக மிதந்த சிறுவர்கள்... போலீசார் விசாரணை!

Boys floating in the pool within hours of parting!

நக்கீரன் - பகத்சிங் :  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கற்பூரசுந்தரேசுவர பாண்டியன். இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இவரது மகன்கள் நிவாஷ் பாண்டி (வயது 6), ரித்திஷ் பாண்டி (வயது 4) ஆகிய இருவருடன் 4 சகோதரர்களுடன் ஒரே குடிசையில் வசித்து வருகிறார். தான் வெளியூர் வேலைக்கு சென்றால் தனது மகன்களை தனது சகோதரர்கள் பாதுகாப்பில் விட்டு செல்வது வழக்கம்.


நேற்று திங்கள் கிழமை கற்பூரசுந்தரேசுவர பாண்டிக்கும் அவரது சகோதரர்களுக்கும் பாகப்பிரிவினை நடந்துள்ளது.
அப்போது காரசாரமாகப் பேசிக் கொண்டுள்ளனர்.
அதன் பிறகு சிறுவர்களைக் காணவில்லை.
அவரது ஒரு சகோதரர் குளத்திற்கு குளிக்கச் சென்றதாகவும் தான் குளிக்கச் சென்ற போது பின்னால் வந்த சிறுவர்களை வீட்டிற்கு போகச் சொல்லிவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தேன்.
அதன் பிறகு சிறுவர்களைக் காணவில்லை. வீட்டிற்குச் சென்றிருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் வீட்டிற்கும் வரவில்லை என்று கூறியுள்ளார்.

அதன் பிறகு எங்கு தேடியும் கிடைக்காததால் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். தொடர்ந்து உள்ளூர் இளைஞர்கள் பல குளங்களில் இறங்கித் தேடியும் கிடைக்கவில்லை. ஆனால் வீட்டு வாசலில் உள்ள குளத்தில் இளைஞர்கள் தேட வரும் போது நாங்கள் தேடிப் பார்த்துவிட்டோம் என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக