சனி, 22 ஜனவரி, 2022

கலைஞர் சிங்கப்பூர் பேச்சு-1999 ! தொல்காப்பிய தமிழ் இன்றும் இலங்கையில் பேசப்படுகிறது

ராதா மனோகர்  : கலைஞர் ( 1999 சிங்கப்பூர்) : இன்றைய உலகம் விஞ்ஞான உலகத்திலே மிக மிக சுருங்கி கொண்டுதான் வருகிறது .ஒரு காலத்தில் ஆபிரகாம் லிங்கன் கொல்லப்பட்ட செய்தி ஐந்து நாட்களுக்கு பின்புதான் லண்டன் மாநகரத்திற்கே கிட்டியது
அந்த அளவுக்கு தகவல் தொடர்பு பஞ்சமாக இருந்த காலக்கட்டம் அது
ஆனால் இன்றைக்கு உலகத்தையே குறுகக்கூடிய சுருங்க வைக்கக்கூடிய வசதி வாய்ப்புக்கள் . தகவல் தொடர்புகள் உருவாக்கி இருக்கின்றன.
globalization என்று சொல்லப்படுகின்ற இந்த ஆங்கில வார்த்தைக்கு உலகமயமாகின்றது என்று பொருள்.
எனினும்  think globally and act locally என்றே சொல்லுகிறார்கள்.
உலகமயவாதால் நாட்டின் எல்லை கோட்டை யாரும் அழித்து விட விரும்புவதில்லை


ஒரே உலகம் என்று சொல்லப்பட்டாலும்  தனித்தனி நாடுகள் இருக்கின்றன   
மூவாயிரம் ஆண்டு காலத்தை கொண்ட தொல்காப்பிய இலக்கணம்  வகுத்த தொல்காப்பியத்தில் கூட . முன்னோர்கள் சொல்லி இருப்பதை  போல என்கின்ற எடுத்து காட்டுகள் பல வரும்
உதாரணமாக "நல்லிசை புலவர் செய்யுள் உறுப்பென வல்லிதழ் கூறி வகுத்து உரைத்தனரே |"   . கடந்த காலத்தில் உரைத்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கப் பட்டிருக்கிறது  என்றால் தொல்காப்பியத்தை விட முற்பட்டது தமிழ் மொழி
அத்தகையை தமிழ் மொழிக்கு சொந்தக்காரர்கள் நாம் .
இப்படிப்பட்ட கீர்த்தி வாய்ந்த இலக்கிய இலக்கணங்களுக்கு அடையாளமாகத்தான் தொல்காப்பியமும் திருக்குறளும் திகழுங்கின்றன.
உங்களுக்கு தெரியும் உலகப்புகழ் எய்திய  கிரேக்க  பாரம்பரியம் இப்போது இல்லை.
எகிப்திய மொழி கலாசாரம் இப்போது இல்லை .
ஆனால் இன்னமும் இலங்கையில் தொல்காப்பிய தமிழை பேசிக்கொண்டு இருக்கிறார்கள் .
ர என்ற எழுத்து தமிழில் முதலில் வர கூடாது என்பது இலக்கண நியதி.
ஆனால் நாம் ரத்தம் என்று .. ர என்ற எழுத்தை கொண்டுதான் இப்போதும் எழுதி கொண்டிருக்கிறோம் .
ஆனால் இலங்கையில் இ என்ற எழுத்தை சேர்த்து இரத்தம் என்றுதான் எழுதுவார்கள் . எனவே இலங்கை வாழ் தமிழர்கள் இன்னமும் தொல்காப்பிய காலத்தை மறக்கவில்லை என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக