திங்கள், 17 ஜனவரி, 2022

நடராசன் - தாளமுத்து! ஜாதி கும்பலிடம் இருந்து மொழிப்போர் தியாகிகளை பாதுகாக்க வேண்டும்.

May be an image of 1 person, sky and text that says 'மொழிப்போர் தியாகிகள் நடராசன் தாளமுத்து நினைவு மண்டபம் Dongutunt சதிகம் நடராசன் தாளமுத்து'

Vijayabaskar S  :  தாளமுத்து நடராசனா?  நடராசன் தாளமுத்தா?
1938 இந்தி எதிர்ப்பு போரில் முதலில் தாளமுத்தா நடராசனா என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. முதலில் இறந்தது நடராசன். இரண்டாவது இறந்தது தாளமுத்து.
திராவிட இயக்கத்தை சேர்ந்த யாரும் இதை மறுக்கவும்  இல்லை. மறைக்கவும் இல்லை.
தோழர்கள் நடராசனும் தாளமுத்துவும் இறந்த போது தந்தை பெரியார் பெல்லாரி சிறையில் இருந்தார்.
முதலில் இறந்த (15.01.1939) நடராசனின் உடல் மூலக்கொத்தளம் சுடுகாட்டில் புதைக்கப்பட்டது.


பின்னர் இறந்த (12.03.1939)  தாளமுத்துவின் உடல் முதலில் களப்பலியான நடராசனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்குப் பக்கத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. அப்போது நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பேசிய அறிஞர் அண்ணா ”தோழர்கள் நடராஜன், தாளமுத்து மரணத்தை எனது அண்ணன், தம்பி இறந்தனர் எனவே கருதுகிறேன்” என்கிறார்.
சென்னை எழும்பூரில் உயர்ந்து நிற்கும் அரசு அலுவலகக்  (பின்னாளில் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட) கட்டிடத்திற்கான பெயர் தாளமுத்து – நடராசன் மாளிகை என இருவர் பெயரையும் இணைத்தே பெயரிட்டனர்.
அன்றிலிருந்து இன்று வரை நடராசனையும் தாலமுத்துவையும் திராவிடர் இயக்கம் பிரித்து பார்க்கவே இல்லை. அண்ணா சொன்னது போல், சகோதரர்கள் தான்.
சென்னை எழும்பூர் கட்டடத்தை தவிர, வேறெங்கும் தாளமுத்துவின் பெயர் முதலில் குறிப்பிடப் படவில்லை. நடராசனின் முதல் களப்பணியை திராவிடர் இயக்கத்தை சேர்ந்த யாரும் எங்கும் எப்போதும் மறைத்ததில்லை. திராவிட இயக்கத் தலைவர்கள் எழுதிய அனைத்துப் புத்தகங்களிலும் நடராசனின் முதல் களப்பலி சரியாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மூலக்கொத்தலம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபம்  ”மொழிப்போர் தியாகிகள்  நடராசன் தாளமுத்து நினைவு மண்டபம்” என்றே பெயரிடப்பட்டுள்ளது. நடராசனே முதல்.
இந்த மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டியவர் பெரியார்.
இந்த நினைவு மண்டபத்திற்கு திமுக தலைவர்கள் செல்வது  இன்று வரை வழக்கமாக இருக்கிறது. சமிபத்தில் கூட (2020) திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  நடராசன், தாளமுத்து  நினைவு மண்டபத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார்.
இருப்பினும் சிலர் நடராசன் மறைக்கப்படுகிறார் என திரும்பத் திரும்ப சொல்கின்றனர். இவர்களில் முக்கியமானவர் ஸ்டாலின் ராஜாங்கம், துரை. ரவிக்குமார்.
திராவிட இயக்கம் இருவரையும் பிரித்து பார்க்கவில்லை. நடராசனின் தியாகத்தை மறைக்கவும் இல்லை.
ஆனால் சிலருக்கு வரிசை முக்கியமாக இருக்கிறது.
ஏன் முக்கியமாக இருக்கிறது?
நடராசனின் சாதியும் ஸ்டாலின் ராஜாங்கம், ரவிக்குமாரின் சாதியும் ஒன்று என்பதைத் தவிர வேறு எந்த காரணங்களும் இல்லை.
இந்த சாதி கும்பலிடம் இருந்து மொழிப்போர் தியாகிகளை பாதுகாக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக