ஞாயிறு, 16 ஜனவரி, 2022

10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை - தமிழ்நாடு அரசு

 மாலைமலர் :கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை:  கொரோனா தொற்று காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பொதுத் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.
இதற்கிடையே, இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்தலாம் என ஐகோர்ட் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இந்நிலையில், அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு.

மேலும், ஜனவரி 19-ம் தேதி தொடங்கவிருந்த 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக