சனி, 22 ஜனவரி, 2022

அனிருத், ஐஸ்வர்யா மிக நெருக்கமான தொடர்பில் இருந்தனர்! பயில்வான் ரங்கநாதன் வில்லங்க பேட்டி

 cinemapettai.com : கடந்த சில நாட்களாக  தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து சம்பவத்தை பற்றி தான் மீடியாக்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றன. அவர்களின் பதினெட்டு ஆண்டு கால திருமண வாழ்கை திடீரென முடிவுக்கு வந்தது ஒரு பக்கம் அதிர்வலையை ஏற்படுத்தினாலும் மறுபக்கம் ஏன் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.
தற்போது அவர்களின் விவாகரத்தை பற்றி பலவிதமான காரணங்கள் சோசியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து பின்னணியில் என்ன நடந்தது என்பதை பற்றி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


அதில் அவர் கூறியிருப்பதாவது தனுஷ், ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் ஏற்பட்ட இந்த மன கசப்புக்கு முக்கிய காரணம் ஐஸ்வர்யாவின் உறவினரும், இசையமைப்பாளருமான அனிருத் தான் என்று கூறியுள்ளார்.

அனிருத், ரஜினியின் குடும்பத்திற்கு நெருங்கிய உறவு முறை சுருக்கமாகச் சொன்னால் ஐஸ்வர்யா, அனிருத்திற்கு முறை பொண்ணு.

அதன் அடிப்படையில் அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகினார்கள். அப்படி அவர்கள் இருவரும் இணைந்து நெருக்கமாக எடுத்துக்கொண்ட பல போட்டோக்கள் ஊடகங்களில் வெளியானது.

ஆரம்பத்தில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத தனுஷ் இதில் இருக்கும் சீரியஸை பார்த்து அவர்கள் இருவரையும் கண்டித்திருக்கிறார்.

ஆனாலும் அவர்கள் இருவரும் தனுஷின் வார்த்தைகளை மதிக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த தனுஷ் அனிருத்துடன் இருந்த நெருக்கமான நட்பை முறித்துக் கொண்டார்.

அதன் பிறகு அவர்கள் இருவரும் தற்போது வரை பேசிக் கொள்வதில்லை என்று பயில்வான் ரங்கநாதன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக