வியாழன், 20 ஜனவரி, 2022

இதுவரை எந்தவொரு தென்னிந்திய பாடலும் படைக்காத இமாலய சாதனையை படைத்த விஷாலின் ‘டும் டும்’ பாடல்!

 Mari S  - tamil.filmibeat.com : சென்னை: விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்துடன் தைரியமாக வெளியான படம் எனிமி.
இந்த படத்தில் விஷால் மற்றும் மிருணாளினி ரவி நடனமாடும் 'டும் டும்' பாடல் யூடியூபில் இமாலய சாதனையை படைத்துள்ளது.
மேலும், இதுவரை எந்தவொரு தென்னிந்திய பட பாடலும் படைக்காத சாதனையை இன்ஸ்டாகிராமில் இந்த பாடல் படைத்துள்ளது படக்குழுவை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்துடன் அஜித்தின் வலிமை மற்றும் சிம்புவின் மாநாடு உள்ளிட்ட படங்கள் போட்டிப் போடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடைசி நேரத்தில் தில்லாக போட்டிப் போட்டது விஷால் மற்றும் ஆர்யாவின் எனிமி படம் தான். வேற  இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எனிமி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அந்த படத்தில் விஷால் மற்றும் மிருணாளினி ரவி நடனமாடிய 'டும் டும்' பாடல் வேற லெவல் ஹிட் அடித்தது. இசையமைப்பாளர் தமன் இசையில் தெலுங்கில் ஏகப்பட்ட பாடல்கள் ஹிட்டடித்து வரும் நிலையில், தமிழில் அவர் இசையில் எனிமி படத்தின் டும் டும் பாடல் ரசிகர்களை கவர்ந்தது.

டான்ஸ் டப்ஸ்மேஷ் குயினாக சமூக வலைதளங்களை கலக்கிய மிருணாளினி ரவி சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஏலியனாக நடித்து இருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் நடிப்பில் எனிமி படம் தியேட்டரில் எம்ஜிஆர் மகன் படம் ஒடிடியிலும் வெளியானது. நிச்சயதார்த்த பாடலான 'டும் டும்' பாடலில் அழகு மிளிர மிருணாளினி ரவி செம டான்ஸ் போட்டிருப்பார்.
100 மில்லியன் பட்டித் தொட்டி எங்கும் பிரபலங்களும், இளம் பெண்களும், குழந்தைகளும் 'டும் டும்' பாடலுக்கு நடனமாடியும் அதன் வீடியோ பாடலை Divo யூடியூப் தளத்தில் தொடர்ந்து பார்த்தும் வந்த நிலையில், தற்போது 1
06 மில்லியன் பார்வைகளை அந்த பாடல் கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. தென்னிந்தியாவிலேயே முதல்முறை தென்னிந்தியாவிலேயே முதல்முறை இன்ஸ்டாகிராமில் ரவுடி பேபி பாடல் 1000 மில்லியன்களையே கடந்துள்ளது.
ஏகப்பட்ட தென்னிந்திய பாடல்கள் 100 மில்லியனை கடந்துள்ளன. இந்நிலையில், தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக இன்ஸ்டாகிராம் ரீலில் 250K வியூக்களை அள்ளி இமாலய சாதனையை படைத்துள்ளது தான் சிறப்பான விஷயமே. சந்தோஷத்தில் விஷால் சந்தோஷத்தில் விஷால் நடிகர் விஷால் மற்றும் படக்குழுவினர் அனைவரும் இந்த ரெக்கார்ட் பிரேக்கிங்கால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி உள்ள வீரமே வாகை சூடும் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்வதிலும் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறார் விஷால்.

Read more at: https://tamil.filmibeat.com/news/vishal-s-enemy-movie-tum-tum-crosses-100-million-and-creates-a-new-record-in-instagram-reels-091721.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக