திங்கள், 17 ஜனவரி, 2022

அருந்ததியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் அருந்ததியர் குடியிருப்புகள் சூறை.! - இரா.அதியமான் - தலைவர் ஆதித்தமிழர் பேரவை

May be an image of 2 people and text that says 'அருந்ததியர் பிணம் பொதுப்பாதையில் செல்ல தடை, அருந்ததியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் இந்து பார்ப்பனிய போதையால் சாதிவெறி தலைக்கேறிய உச்சம். சாதிவெறி வன்முறை தலைக்கேறிய ஆதிக்க சாதிவெறி கும்பலைச் சார்ந்த சுமார் 1000 க்கும் மேற்ப்பட்டோர்கள் கொடுர ஆயுதங்களுடன் அருந்ததியர் காலனியில் புகுந்து வன்முறை கடந்த மூன்று தினங்களாக அரசு பிணவறையில் இருக்கும் மல்லிகா அவர்களின் உடலை தமிழக அரசின் உரிய பாதுகாப்போடு வீரலூர் பொதுமயானத்தில் அடக்கம் செய்திடவும் பாதிக்கபட்ட அருந்ததியர் மக்களுக்கு இழப்பீட்டு நிவாரணம் வழங்கிடவும் வன்முறை தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் தயவு தாட்சனை இன்றி கைது செய்ய வேண்டுமெனவும் ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது. இரா.அதியமான் நிறுவனர் தலைவர் ஆதித்தமிழர் பேர வை'

Kathiravan Mayavan : அருந்ததியர் பிணம் பொதுப்பாதையில் செல்ல தடை.! அருந்ததியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்
அருந்ததியர் குடியிருப்புகள் சூறை.!
சாதிவெறி வன்முறையை ஆதித்தமிழர்  பேரவை வன்மையாக கண்டிக்கிறது!
கடந்த 10 ஆண்டுகளாக சமூகநீதியையும்,  சமத்துவத்தையும் பாழ்படுத்திய சாதிவெறி எத்தர்கள் பார்ப்பனிய போதை தலைக்கேறி  தமிழகத்தை வன்முறைக்கடாக மாற்றும் சூழ்ச்சியில் இறங்கி அருந்ததியர் குடியிருப்புகளை அடித்து நொறுக்கி துவம்சம் செய்து பிணத்தை பொதுப்பாதையில் எடுத்துச் செல்லவும் தடைவிதித்துள்ளனர்.
திருவண்ணமலையிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கலசபாக்கம் ஒன்றியம் வீரலூர் கிராமம் பட்டியல்-அருந்ததியர் காலனியில் வசிக்கும் மல்லிகா (48) என்பர் கடந்த பொங்கல் தமிழர் நன்நாளன்று உடல் நலக்குறைவினால் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.


2021 டிசம்பர் இறுதியில் அதே ஊரில் வசித்து இறந்த  அருந்ததியரான
நாட்டார் (50) என்பவரின் உடலை பொது பாதையில் செல்வதற்க்கான நீதிமன்ற உத்தரவினை பெற்று அடக்கம் செய்துள்ளனர்.
தற்போது மறைந்த மல்லிகா
அவர்களின் உடலினை நல்லடக்கம் செய்ய வீரலூர் பொதுமயானத்தில் அதற்க்கான ஏற்ப்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் வீரலூர் ஊராட்சியில் வசிக்கின்ற இந்து பார்ப்பனிய போதை தலைக்கேறிய ஆதிக்க சாதிவெறி கும்பலைச் சார்ந்த சுமார் 1000 க்கும் மேற்ப்பட்டோர்கள் கொடூர ஆயுதங்களுடன் அருந்ததியர் காலனியில் களமிறங்கி 500 க்கும் மேற்ப்பட்ட  குடியிருப்புகளை சூறையாடியுள்ளனர் மேலும்
 அருந்ததியர்களின் மோட்டார் சைக்கிள்களையும் வாகனங்களையும் அடித்து நொறுக்கியிருக்கின்றனர்.
இதையறிந்த ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் வீரலூர் பகுதிக்கு வந்து பார்வையிட்ட நிலையிலும்
நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத ஆதிக்க சாதிவெறிகள் தங்களின் பார்ப்பனிய போதை தலைக்கேறி அத்துமீறலிலும் வன்முறையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது சமூகநீதியின் மீதும் சமத்துவத்தின் மீதும் தொடுக்கப்பட்ட யுத்தமாகும்.
சமூகநீதியும் சமத்துவமும் இருகண்கள் என்று  உறுதிபடுத்திவரும் மாண்புமிகு முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின்
ஆட்சியில் தமிழகத்தில்  சட்டம் ஒழுங்கை எப்படியாவது சீர்குலைத்து விட வேண்டும் என்ற தீய சிந்தனையின் வெளிப்பாடாக அருந்ததியர் காலனியை இந்தாண்டு தமிழர் தமிழ்ப்புத்தாண்டு அன்று திட்டமிட்டே சூறையாடியாடியிருக்கும் சாதிவெறி எத்தர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து  குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் சிறைவைக்க வேண்டும்.
மேலும் இதுபோன்ற சாதிவெறியர்களை தயவு தாட்சனை இன்றி இருப்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுவதோடு
அருந்ததியர்களின் பிணங்களை பொதுப்பாதையில் கொண்டு செல்வதற்கும் பொது மயானத்தில் அடக்கம் செய்திடவும் தமிழக அரசு உரிய பாதுகாப்பினை உறுதிசெய்திட வேண்டும்.
கடந்த மூன்று தினங்களாக அரசு பிணவறையில் இருக்கும் மல்லிகா அவர்களின் உடலை தமிழக அரசின் உரிய பாதுகாப்போடு வீரலூர் பொதுமயானத்தில் அடக்கம் செய்திடவும்
பாதிக்கபட்ட அருந்ததியர் மக்களுக்கு இழப்பீட்டு நிவாரணம் வழங்கிட வேண்டுமென ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.
  - இரா.அதியமான்.
நிறுவனர் தலைவர்
ஆதித்தமிழர் பேரவை
17-1-2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக