சனி, 22 ஆகஸ்ட், 2020

மீண்டும் மத்திய அமைச்சு செயலர் ராஜேஷ் கோட்சே இந்தி வெறி அடாவடி பேச்சு ..

.indianexpress.com : இந்தி தெரியவில்லை எனில் வெளியேறுங்கள்; ஆயுஷ் செயலாளருக்கு தமிழக தலைவர்கள் கண்டனம் தமிழக மருத்துவர்களை ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள் என்று கூறிய மத்திய ஆயுஷ் அமைச்சக்கத்தின் செயலர் ராஜேஷ் கோட்சேவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசில் பணிபுரியும் யோகா மற்றும் இயற்கை நல மருத்துவர்களை ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள் என்று கூறிய மத்திய ஆயுஷ் அமைச்சக்கத்தின் செயலர் ராஜேஷ் கோட்சேவுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எஸ்.ஐ தாக்கியதால் சாமியார் வீடியோவில் கூறிவிட்டு தற்கொலை .. வீடியோ

மின்னம்பலம் : சேலத்தில், தனது மரணத்துக்குக் காரணம், எஸ்.ஐ தான் என்று கூறி சாமியார் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சாமியார் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ட்விட்டரில் கோரிக்கை வலுத்து வருகிறது.

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே புளியம்பட்டி குண்டாங்கல்காடு பகுதியில் வசித்து வந்தவர் சரவணன் (42). இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதியினருக்கு 11ஆம் வகுப்பு படிக்கும் மகளும், 8ஆம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர்.    மந்திரவாதியான சரவணன், தீவிர சிவனடியாராக இருந்துள்ளார். அமாவாசை மற்றும் விஷேச நாட்களில் பூஜை செய்வது, கயிறு கட்டுவது, பேய் ஓட்டுவது  போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார். அப்பகுதியில் யாருக்கேனும் உடல் நிலை சரியில்லை என்றால் இவரிடம் வந்து தாயத்துக் கட்டி செல்வது வழக்கமாம்.

சூரியா விளக்கம் : நடிகனாக இல்லாமல் தயாரிப்பாளராக எடுத்த முடிவு !!

வெப்துனியா : நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரக்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் இந்த படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் சூர்யாவும் உறுதிப்படுத்தியுள்ளார்  ஆனால், சூர்யாவின் முடிவால் திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையங்க உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதோடு திரைப்பட தொழிலை நம்பியுள்ள பலரும் பாதிக்கப்படுவார்கள் என திரையரங்க உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்."

“சூரரை போற்று” திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது ... திரையரங்க உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி

  Prasanth Karthick - வெப்துனியா :   நடிகர் சூர்யா “சூரரை போற்று” திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதாக அறிவித்துள்ளது      திரையரங்க உரிமையாளர்களையும், விநியோகஸ்தர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகியுள்ள சூரரை போற்று திரைப்படம் கொரோனா பாதிப்புகள் காலமாக நீண்ட மாதங்களாக வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் சூரரை போற்று திரைப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியிடுவதாக சூர்யா இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.                      சோதனை மிகுந்த காலக்கட்டத்தில் அனைத்து தரப்பினரின் நன்மைக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சூர்யா விளக்கமளித்துள்ளார். ஏற்கனவே சூர்யாவின் 2டி நிறுவன தயாரிப்பான ‘பொன்மகள் வந்தாள்’ ஓடிடியில் வெளியான போதே திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.                   சூரரை போற்று ஓடிடியில் வெளியாவதன் மூலம் இந்தியாவிலேயே பெரிய ஹீரோ ஒருவரின் அதிக பட்ஜெட் படம் ஒன்று ஓடிடியில் வெளியாவது இதுவே முதன்முறை.      

Covaxin என்னும் கொரோனா தடுப்பு மருந்தை சருமத்தில் செலுத்தி பரிசோதிக்க அரசு ஒப்புதல்..!

zeenews.india.com:
Covaxin என்னும் கொரோனா தடுப்பு மருந்தை சருமத்தில் செலுத்தி பரிசோதிக்க அரசு ஒப்புதல்..!!!
கோவாக்சின்  என்ற கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் மற்றும் புனேவில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய வைராலஜி நிறுவனம் இணைந்து உருவாக்கியது.
  • இதன் முதல் கட்ட அல்லது இரண்டாவது கட்ட பரிசோதனையை பாரத் பயோடெக் தற்போது நடத்தி வருகிறது. 
  •  
  • புதுடெல்லி (New delhi): பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள  கோவிட் 19 தடுப்பு மருந்தை சருமத்தில் செலுத்தி (intradermal) பரிசோதிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, தசைகளில் அதாவது intramuscular முறையில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. 

    இருப்பினும், Covaxin என்னும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை  சருமத்தின் கீழ் செலுத்தி பரி சோதிக்க இரு நிபந்தனைகளை விதித்துள்ளது.

    திருவனந்தபுரம் விமான நிலைய குத்தகை: நீதிமன்றம் சென்றது கேரள அரசு, பணிய மறுக்கும் மத்திய அரசு.. வீடியோ

    BBC ":  கேரள அரசின் கடுமையான ஆட்சேபத்தை மீறி திருவனந்தபுரம் விமான நிலையத்தின் சர்வதேச விமான நிலைய கட்டுப்பாடு மற்றும் மேலாண்மைப் பொறுப்பை தனியார் நிறுவனமான அ தானி குழுமத்துக்கு குத்தகையாக மத்திய அரசு வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ள செயல்பாடு, பரவலான சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் தாக்கத்தால் பல மாநிலங்கள், கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், மத்திய அரசு விமான நிலையங்களின் பராமரிப்பு குத்தகையை தனியாருக்கு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முற்பட்டிருப்பதாக கேரள அரசு குற்றம்சாட்டியிருக்கிறது.ஆனாலும், விமான நிலைய பராமரிப்பு குத்தகை நடவடிக்கை, ஏற்கெனவே திட்டமிடப்பட்ட செயல்பாடு என்றும் திருவனந்தபுரம் விமான நிலைய குத்தகை நடைமுறை வெளிப்படையாகவே நடந்துள்ளது என்றும் இந்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

    இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள்: மத்திய அமைச்சக செயலாளர்! வீடியோ

    மின்னம்பலம் : மத்திய ஆயுர்வேத அமைச்சகமான ஆயுஷ் துறையின் காணொலி கூட்டத்தில் இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.>

    யோகா மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களுக்கான காணொலி பயிலரங்கு இந்த வாரத்தின் துவக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆகஸ்டு 18 முதல் 20 வரை மூன்று நாட்கள் நடந்த பயிலரங்கில் நாடு முழுவதிலும் இருந்தும் பலர் வந்திருக்க தமிழகத்தில் இருந்து மட்டும் 37 யோகா, ஊட்டசத்து பயிற்றுனர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் முழுக்க முழுக்க இந்தி மொழியே பயன்படுத்தப்பட்டது.    பயிலரங்கின் இறுதி நாளான வியாழக் கிழமை ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்ய ராஜேஷ் கொட்டேகா, “நான் முழுவதும் இந்தியில்தான் பேசப் போகிறேன். எனக்கு சரளமாக ஆங்கிலம் பேச வராது. எனவே ஆங்கிலத்தில் பேச்சை எதிர்பார்ப்பவர்கள் இங்கிருந்து சென்றுவிடலாம்” என்று கூறியதும் இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து சென்ற யோகா பயிற்றுநர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    சந்தனுவும் ரட்டன் டாடாவும் .. அன்பினால் .. உண்டான பிணைப்பு

    பாண்டியன் சுந்தரம் : · இந்தியாவின் முன்னணி தொழிலதிபர். மிகப்பெரும்
    கோடீஸ்வரர்களில் ஒருவர் ரத்தன் டாடா.இவரது டாடா நிறுவனத்தில் வேலை பார்ப்பதே பெரும் கவுரவம் என்று நினைப்பவர்கள் இந்தியாவில் அநேகர். இந்த டாடாவின் தோள்களில் கை போட்டுப் பேசும் அளவு இவருக்கு நெருக்கமானவர் இன்று யார் தெரியுமா? இவரது 27 வயது உதவியாளர் தான்! இவ்வளவு இளம் வயதில் எப்படி அவர் தேர்வு செய்யப்பட்டார்? இதன் பின்னே ஒரு அடிபட்ட சாலை நாய் இருக்கிறது! காரிருள் சூழ்ந்த இரவு நேரம். ஆங்காங்கு ஒன்றிரண்டு தெருவிளக்குகள்
    மட்டுமே கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. அந்த 22 வயது இளைஞர் வீட்டுக்கு அவசரம் அவசரமாக விரைந்து கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. சாலையின் நடுவே ஒரு அழகிய நாய் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் செத்துக் கிடந்தது. அதைப் பார்த்ததும் மனம் கலங்கிப் போனவர், அதை சாலையின் ஓரமாக ஒதுக்கிப் போடலாம் என விரைய முனைந்தபோது..

    ஒளியை உமிழ்ந்தபடி சாலையின் நடுவே ஒரு கார் விரைந்து வந்து கொண்டு இருந்தது. கண நேரம்தான்..  சட்டென சாலையின் ஓரம் ஒதுங்கி நின்றார் அந்த இளைஞர். இல்லை என்றால் நாயுடன் சேர்ந்து அவரும் துள்ளத் துடிக்க இறந்து போயிருக்க வேண்டியவர்தான்..

    தமிழக உயர் கல்வியை உரமூட்டி வளர்த்த திராவிடம் ..

    Kalai Selvi : அடுத்தவர்க்கும் தெரியப்படுத்துங்கள் !   தமிழக உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும்தாம் 1950, 1960களில் திராவிட இயக்கத்தின் நாற்றங்கால்களாக திகழ்ந்தன.       அதன் தொடர்ச்சியாக 1967-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு மாநிலமெங்கும் நகரம், சிறுநகரங்களை மையப்படுத்தி அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்துவந்த உயர்கல்வி கிராம மாணவர்களுக்கு அதன்பிறகே கைக்கு எட்ட ஆரம்பித்தது இன்றைக்குத் தமிழகத்தில் இயங்கிவரும் 91 அரசுக் கல்லூரிகளில் ஏறத்தாழ 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பெரியார், அண்ணா, காமராஜரின் பெயரில் தொடங்கி வைக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சி நடந்த 1969-1974 வரையிலான காலத்தில்தான்.

    சமூகநீதியைச் சட்டரீதியாக உறுதிப்படுத்த கல்வி, வேலை வாய்ப்பைவிடச் சிறந்த தளம் வேறு இல்லை என்பதை கருணாநிதி நன்கு உணர்ந்திருந்தார். அதேநேரம் அறிவியல், கலை, சட்டம், மருத்துவம், வேளாண்மை, நிதி மேலாண்மை, வணிகம், கல்வியியல் படிப்புகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் நுழைவதற்கான இட ஒதுக்கீட்டை விரிவாக்கி அரசுக் கொள்கையையும் மாற்றினார்.

    ஆலோசனைக்கு மதிப்பு.        கல்வித் துறை மட்டுமின்றி, தமிழக வளர்ச்சிக்கும்  கலைஞர் கருணாநிதியின் ஜனநாயக அணுகுமுறை முக்கியக் காரணமாக இருந்தது. அறிவார்ந்த மனிதர்களின் ஆலோசனைகள் அவருக்குக் கூடுதல் பலமாக அமைந்தன. அதேபோல அனுபவம் வாய்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளும் அவருக்குப் பக்கபலமாக இருந்தனர்.

    குட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே! 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.

    ilankainet.com : “அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எங்களுக்கு நன்று விளங்குகிறது. இதை தம்பியிடமும் சொல்லுங்கள். நீயாவது இயக்கத்தை நல்லபடி நடாத்தி தமிழ் ஈழத்தை காணும்படி அவனிடம் சொல்லுங்கள்”. குட்டிமணி

    தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகள் என்று சொல்லப்படுகின்ற குட்டிமணி, தங்கத்துரை ஜெகன் குழுவினரை பிரபாகரனே காட்டிக்கொடுத்ததாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டிவந்தனர். இக்குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என புலிகள் தரப்பு மறுத்து வந்தனர்.     இந்நிலையில் முப்பத்தியேழு வருடங்களின் பின்னர் குட்டிணி, தங்கத்துரை , ஜெகன் குழுவினருக்கான சட்த்தரணிகள் குழாமின் ஒருவரான சட்டத்தரணி சிறிஸ்கந்தகுமார் அவர்கள், பிரபாகரன் தான் தங்களை காட்டிக்கொடுத்தாக பனாகொடை இராணுவ முகாமில் குட்டிமணியுடனான முதலாவது சந்திப்பில், குட்டிமணி தெரிவித்தாக எழுதியுள்ளார்.

    வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

    தமிழ் வழியில் படித்து நாசாவின் தலைசிறந்த விஞ்ஞானியான மெய்யப்பனின் வெற்றிக்கதை .. பேட்டி வீடியோ

    சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் : (தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் எட்டாவது கட்டுரை.) தமிழ்வழியில் கல்வி பயில்வது குறித்து எண்ணற்ற ஆண்டுகளாக அவ்வப்போது விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. தமிழில் மட்டுமே படிப்பதால் உயர் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்க நேரிடும் என்று ஒரு தரப்பினரும், தாய்மொழியில் படித்ததால் வாழ்க்கையில் சிறந்த நிலைக்கு வந்தவர்கள் ஏராளம் என்று மற்றொரு தரப்பினரும் வாதிடுவதுண்டு.

    இவ்வாறு தமிழ்வழி கல்வியில் படித்து சிறந்தவர்களுக்கு உதாரணமாக, உள்நாட்டு தலைவர்கள் ஏராளமானோர் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.  ஆனால், அதே பின்புலத்துடன் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சாதித்து காட்டியவர்கள் பொதுவெளியில் அதிகம் தென்படுவதில்லை.

    பலரின் சாவுக்கு காரணமாகாதீங்க... மோடிக்கு சாபம் விடும் சுப்பிரமணியம் சாமி

    வெப்துனி எ: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பலரின் தற்கொலைக்கு காரணமாக வேண்டாம் என மோடிக்கு கூறியுள்ளார். 

     இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் மத்திய அரசு சமீபத்தில் நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜே.இ.இ தேர்வுகள் செப்டம்பர் 1-6 ஆம் தேதி வரையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.         இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இந்தியாவின் எல்லா பகுதியிலிருந்தும் எனக்கு கிடைத்த உறுதியான தகவலின்படி, நீட், ஜே.இ.இ உள்ளிட்ட தேர்வுகளை எழுதுவதற்கு தேவையான வசதிகள் தற்போது மாணவர்களுக்கு இல்லை. தேர்வு அறிவித்ததிலிருந்து இளைஞர்களிடையே அதிக அளவில் விரக்தி ஏற்பட்டுள்ளது.        எனவே தேர்வுகளை நடத்தினால், இந்தியா முழுவதும் ஏராளமான இளைஞர்கள் தற்கொலை செய்வதற்கு நீங்கள் காரணமாகிவிடுவீர்கள். எனவே, இந்த தேர்வுகளை தீபாவளிக்குப் பிறகு நடத்தவேண்டுமென்று மத்திய கல்வித்துறைக்கு நீங்கள் வலியுறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    கொரோனா ஆலோசனை கூட்டத்திற்கு திமுக எம்.பி செந்தில்குமாருக்கு அனுமதி மறுப்பு .. வைரல் வீடியோ

    மின்னம்பலம் : ஆலோசனை கூட்டத்தில் எம்.பி செந்தில்குமார் அனுமதிக்கப்படாதது குறித்து முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.    தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், கலந்துகொள்ள வந்த தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அங்கு பணியில் இருந்த போலீசார், கொரோனா பரிசோதனை செய்துவிட்டு அதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என திட்டவட்டமாகக் கூறினர்.

    நெல்லை: 2 திருநங்கைகள் உட்பட 3 பேர் கொலை! நெல்லை: 2 திருநங்கைகள் உட்பட 3 பேர் கொலை!

     

    நெல்லை: 2 திருநங்கைகள் உட்பட 3 பேர் கொலை!

    மின்னம்பலம்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகக் கொலை, கொள்ளை, சிறுமிகள் வன்கொடுமை, வெடிகுண்டு வீச்சு, என்கவுண்ட்டர் என அதிர்ச்சிகரமான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திருநெல்வேலியில் இரு திருநங்கைகள் உட்பட 3 பேரின் உடல்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வசந்தகுமார் உடல்நிலை கவலைக்கிடம்: அமைச்சர் தகவல்!

    மின்னம்பலம் : வசந்தகுமார் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமைச்சர்கள் செல்லூர் ராஜு, தங்கமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், நிலோபர் கபில் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கொவசந்தகுமார் உடல்நிலை கவலைக்கிடம்: அமைச்சர் தகவல்!ரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.   தமிழக காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினருமான வசந்தகுமாருக்கும், அவரது மனைவிக்கும் கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால், வசந்தகுமார் வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் உறுதிப்படுத்தியிருந்தார்.

    பெண்களுக்குச் சொத்துரிமை: . இந்தியாவிலேயே பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிய முதல் மாநில முதல்வர் கலைஞர்

    கலைஞரின் சிந்தனையில் இந்த சட்டத்தைக் கொண்டு வரத் தூண்டுதலைத் தந்தது, 1929இல் செங்கல்பட்டில் பெரியார் சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானம். சட்டத்தை நிறைவேற்றி விட்டு கலைஞர் சொன்னார், "செங்கல்பட்டு மாநாடு முடிந்து 60 ஆண்டு கழித்தல்லவா, இந்தத் தீர்மானத்தை நாம் நிறைவேற்ற முடிந்திருக்கிறது!”. பின்னர் நாடு முழுதும் இந்த சட்டம் விரிவுபடுத்தப்பட்டதற்குக்கூட தூண்டுகோலாக இருந்தது, அன்றைய நடுவண் ஆட்சியில் தி.மு.க.வின் பங்கேற்பு தான். அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு; பெண்களை முதன் முதலாக காவலர் பணிக்குத் தேர்வு செய்தது என்பதில் இந்தியாவுக்கே வழிகாட்டிய பெருமை கலைஞரின் நிர்வாகத் திறனுக்கு சான்றாகும். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு நீண்டகாலப் போராட்டத்துக்குப் பிறகும் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார் கலைஞர்

      hindutamil.in : அருண் மிஸ்ரா, எஸ்.அப்துல் நஸீர், எம்.ஆர்.ஷா ஆகிய மூன்று நீதிபதிகளை உள்ளடக்கிய உச்ச நீதிமன்ற அமர்வு வழிகாட்டும் முன்னோடித் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. 

    இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் 2005-ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தமானது, இந்து கூட்டுக்குடும்பங்களின் பூர்வீகச் சொத்தில் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சம உரிமையை வழங்கியது.     அத்திருத்தமானது, முன்மேவு அதிகாரம் கொண்டது; அதாவது, திருத்தத்துக்கு முந்தைய காலத்துக்கும் அது பொருந்தும் என்கிறது உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு. டெல்லியைச் சேர்ந்த வினீதா சர்மா தொடுத்த வழக்கில், இந்தத் தீர்ப்பை அளித்துள்ள உச்ச நீதிமன்றம், சொத்துரிமை கோரும் பெண்ணின் தந்தை குறிப்பிட்ட அந்தச் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்ததற்கு முன்பு உயிருடன் இருந்தாரா என்ற கேள்வியால் அந்தப் பெண்ணின் சொத்துரிமை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று விளக்கம் அளித்துள்ளது. 

    BBC : கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளருக்கு தகுதியற்றவரா?

    கமலா ஹாரிஸ்ஜாக் குட்மேன் - பிபிசி ரியாலிட்டி செக் : கமலா ஹாரிஸ் குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து, அவர் குறித்த பல தவறான தகவல்களும் வதந்திகளும் இணையத்தில் பரவி வருகிறது. 

    அதில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்..பராக் ஒபாமா அதிபர் பதவிக்கு போட்டியிடும்போது அவரது "பட மூலாதாரம், பிறப்பிடம்" குறித்து ஆதாரமற்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டது போல, தற்போது கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளர் போட்டிக்கு தகுதியற்றவர் என அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.ஆனால், கமலா ஹாரிசின் தந்தை ஜமாய்க்கா நாட்டை சேர்ந்தராக இருந்தாலும், தாய், இந்தியாவை சேர்ந்தவராக இருந்தாலும், அவர் பிறந்தது அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில்தான்.

    அமெரிக்காவில் பிறந்து, அமெரிக்க பிரஜையாக இருக்கும் யார் வேண்டுமானாலும், அந்நாட்டின் அதிபராகவோ, துணை அதிபராகவோ பதவி வகிக்க தகுதி பெற்றவர்களே.

    கூகுள் நிறுவனத்தின் இ-மெயில் சேவைகள் திடீர் முடக்கம் உலகம் முழுவதும் பயனாளர்கள் பாதிப்பு

    தினத்தந்தி : புதுடெல்லி, இணையதள உலகில் பிரபலமான தேடுபெறியான கூகுள் நிறுவனத்தின் இ-மெயில் பிரிவான ஜிமெயில் நேற்று காலையில் திடீரென முடங்கியது. 

    இதனால் இ-மெயிலை லாக்-இன் செய்யவோ, செய்திகளை அனுப்பவோ, பெறவோ முடியவில்லை. மேலும் கூகுள் மீட் செயலியில் ரிக்கார்டிங் செய்யவோ, கூகுள் டிரைவில் பைல்களை உருவாக்கவோ, கூகுள்சாட்டில் செய்திகளை அனுப்பவோ முடியவில்லை. இதனால் இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள பயனாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து கூகுள் நிறுவனத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றன. மேலும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் இது குறித்து நெட்டிசன்கள் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி கவலைகளை பகிர்ந்தனர். இது சர்வதேச அளவில் வைரலானது.

    கமலா ஹாரிஸ் : நிறவெறிக்கு வாக்சின் எனும் தடுப்பு மருந்து கிடையாது! ஒரு ஈழத்தமிழர் பார்வையில் ....

    Thambirajah Jeyabalan : · 'தகுதியானவர்களைத் விரட்டி அடியுங்கள்!' - தமிழ்ச் சூழல் 'தகுதியானவர்களை துரத்திப் பிடியுங்கள்!' - சர்வதேசச் சூழல் தமிழ்
    தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்தவர்களில் ஓப்பீட்டளவில் தகுதியான பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன். இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் எம் ஏ சுமந்திரனை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விரட்டியடிக்க அக்கட்சிக்குள் பல்வேறு சதித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. தமிழ் ஊடகங்களும் புலம்பெயர் தமிழ் சமூகவலைத்தள கனவான்களும் படாத பாடுபட்டனர். அதே போல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தவர் மணிவண்ணன். ஆனால் தேர்தல் முடிந்ததும் அவரை ஓரம்கட்டுவதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காய்நகர்த்தி வருகின்றார். எங்கே மணிவண்ணன் தனக்கு போட்டியாகி விடுவாரோ என்பதற்காக தனக்கு ஜால்ராவும் சிஞ்சாவும் போடக் கூடிய 'குதிரை' கஜேந்திரனுக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்படுகிறது.

    சட்டமன்ற சண்டமாருதம்.. அண்ணன் ரகுமான்கான்! திருச்சி சிவாவின் இரங்கற்பா

    திருச்சி சிவா :கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அண்ணன் திருச்சி
    சிவா அவர்கள் அண்ணன் ரகுமான்கான் அவர்களுக்கு எழுதியுள்ள இரங்கல் பா சட்டமன்ற சண்டமாருதம்! இன்று காலையிலிருந்து நினைவுகள் 1970 ன் பிற்பகுதி 80 ன முற்பகுதிகளில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. அவசரநிலைக்காலம், அதைத் தொடர்ந்த எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம். தலைவர் கலைஞரின் பரவசப்படுத்தும் ராஜதந்திர அரசியல் நடவடிக்கைகள், கழகத் தோழர்களின் முழு ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பு, கழக நிர்வாகிகளின் அரவணைப்பு நிறைந்த முழுநேரப் பணிகள், மாலை நேரங்களில் எங்காவது ஒரு பகுதியில் தினந்தோறும் பொதுக்கூட்டங்கள். மாணவர் அணி நிர்வாகியாக கூட்டங்கள் ஏற்பாடு செய்து நடத்துவதும், கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுவது எனவும் வீட்டுக்குக் கூட செல்லாமல் கழகப்பணியே முழுநேரமும் என மிகுந்த ஈடுபாட்டுடன் சுற்றிக் கொண்டிருந்த நாட்கள்.

    என் போன்ற இளைஞர்களை அந்த காலகட்டத்தில் கழக முன்னோடிகள் ஊக்கப்படுத்தியதும், அன்பு காட்டியதும், வயது ்அல்லது வேறு காரணங்களை பொருட்படுத்தாமல் சரிக்கு சரியாக நடத்தியதும், கலகலப்பாக பழகியதும், உற்சாகம் தந்ததுமே கழகத்தின் மீதான பற்றினை மேலும் வலிமையாக்கச் செய்தன என்பது இப்போதும் நெஞ்சை வருடும் நினைவுகள்.

    வியாழன், 20 ஆகஸ்ட், 2020

    காங்கிரசின் பார்ப்பன பாசம் .. பிராமண சேத்னா பரிசத் .. காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாத் ...

    .hindutamil.in:   உத்திரப்பிரதேசத்தின் மழைக்கால சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று முதல் துவங்குகிறது. இதில் பிராமணர்கள் பாதுகாப்பிற்காகக் குரல் கொடுக்க அனைத்து கட்சி எம்எல்ஏக்களுக்கும் காங்கிரஸின் மூத்த தலைவர் ஜிதின் பிரசாத் கடிதம் எழுதியுள்ளார்.  உபியில் ராமர் கோயில் பூமி பூஜைக்கு பின் பிராமணர்கள் ஆதரவு அரசியல் தலைதூக்கத் துவங்கி விட்டது. பாஜக ஆளும் அம்மாநிலத்தின் எதிர்கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் பிராமணர்களுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர்.   இதற்காகவே ‘பிராமண் சேத்னா பரிஷத்’ எனும் பெயரில் காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாத் ஒரு அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார். அதன் சார்பில் அவர் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதில் பிரசாத், உபியில் இதுவரை 700 பிராமணர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகப் புகார் கூறி இருந்தார். தொடர்ந்து பாஜக பிராமணர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் விமர்சனம் செய்திருந்தார்.

    திருமுருகன் காந்தி சீமான் போன்றவர்கள் தமிழகத்தின் சாபக்கேடு?

    Jagadheesan LR : தமிழ்நாட்டின் “போராளிகள்”, “கட்சி அரசியல் தாண்டிய” (?!)

    அரசியல் செயற்பாட்டாளர்கள்; ஈழத்தமிழர் ஆதரவாளர்கள்; சுற்றுச்சூழல்,  மனித உரிமை, தலித்திய மேம்பாடு, பெண்ணீயம், etc, etc, etc labelகளில் உலா வரும் எல்லாவித திடீர்/குபீர் போராளிகளின் ஒட்டுமொத்த லட்சணத்துக்கும் இந்த பதிவு ஒரு சோற்றுப்பதம்.

    பதிவின் துவக்கத்தில் இவர் குறிப்பிடும் அந்த 15 பேரின் உயிர் எந்த கட்சியின் ஆட்சியில் எந்த முதல்வரின் நேரடி உத்தரவில் செயற்படும் காவல்துறையால் பறிக்கப்பட்டன என்று பதிவின் எந்த இடத்திலும் ஒரே ஒரு வார்த்தை கூட இல்லை.                 அவ்வளவு தெளிவு. ஆனால் இந்தியாவுக்கு வெளியே அந்நிய நாட்டில் கொலைகளையே கொள்கைகளாக முன்னெடுத்த ஒரு மூர்க்க கும்பலின் ஆயுத அழிவரசியல் அயோக்கியத்தனத்தால் நேர்ந்த கொடூரமான கோர முடிவுக்கு இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முதல்வரான கலைஞரே நேரடி, முழுபொறுப்பு என்று கூவின வாய்கள் இதே வாய்கள் தான். இன்றுவரை கூவிக்கொண்டிருக்கும் வாய்களும் இதே மேல்வாய்கள் தான்.

    திராவிட தீரர் ரகுமான் கான் காலமானார் ! எம்ஜியாரை ஓயாமல் திணறடித்த இடிமுழக்கம் ஓய்ந்தது

    மின்னம்பலம் : முன்னாள் அமைச்சரும் திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவருமான ரகுமான் கான் இன்று (ஆகஸ்டு 20) உடல் நலக் குறைவோடு கொரோனா தொற்றும் ஏற்பட்ட நிலையில், சென்னையில் காலமானார்.  திமுகவில் உயர் நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரான ரகுமான்கான் ராமநாதபுரம், சேப்பாக்கம், பூங்கா நகர் தொகுதிகளில் இருந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்,. சட்டமன்றத்தில் கேள்விகள் கேட்டு எம்.ஜி.ஆரை திணற வைத்தவர். 

    உயர் நீதிமன்றத்தில் பதினைந்து ஆண்டு காலம் வழக்கறிஞராக பணியாற்றியவர். 96 ஆம் ஆண்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தபோது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வாரியங்களைக் கொண்டு வந்தவர் ரகுமான்கான்.ச ிறந்த பேச்சாளரான ரகுமான்கான் திமுகவுக்காக ஆயிரக்கணக்கான மேடைகளில் பேசியிருக்கிறார். மாநாடுகளில் ரகுமான்கானின் உரைக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. சட்டமன்றத்திலும் மிகச் சிறந்த பேச்சாளர். சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் அந்த காலங்களில் இடி மின்னல் மழை என்று மூன்று பேர் வர்ணிக்கப்பட்டனர். துரைமுருகன், ரகுமான் கான், க.சுப்பு ஆகியோரைக் குறிப்பிட்டுதான் இடி மின்னல் மழை என்று கூறுவார்கள். ரகுமான்கான் மறைவுக்கு திமுக மற்றும் பிற கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.-வேந்தன்

    ஸ்டெர்லைட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் வைகோ கேவியட் மனு தாக்கல்

    sterlite-case-waiko-caveat-petition-filed-in-supreme-court

    .hindutamil.in:   ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரிய வேதாந்தாவின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தால் தன்னை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இதுகுறித்து மதிமுக வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:   “ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி இல்லை என வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து ஆகஸ்ட் 18-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    விநாயகர் சதுர்த்தியை வீடுகளில் கொண்டாட வேண்டும்- தமிழக அரசு வேண்டுகோள்

    மாலைமலர் : பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும்- தமிழக அரசு வேண்டுகோள் சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  

    பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும்.* தமிழகத்தில் விநாயகர் சிலையை பொது இடங்களில் வைக்க, ஊர்வலம் செல்ல தடை தொடருகிறது.   * கொரோனாவை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும்.   * மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாட்டுக்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.     * வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டும் அரசின் ஆணையை மக்கள் பின்பற்ற அறிவுறுத்தி உள்ளது.     * மத்திய, மாநில அரசுகளின் ஆணைகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.   இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காஷ்மீரில் இருந்து 10 ஆயிரம் துணை ராணுவ படையினரை திரும்ப பெற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

          தினத்தந்தி :  ஜம்மு, காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த 370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அந்த மாநிலம் காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளின்போது காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

    அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த தளங்களில் இருந்து கூடுதல் பாதுகாப்பு படையினர் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில், காஷ்மீரில் தற்போதைய கள நிலவரத்தை ஆய்வு செய்யும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 10 ஆயிரம் துணை ராணுவ படை வீரர்களை திரும்ப அழைக்க உத்தரவிடப்பட்டது.

    ஒரே தேசம்.. ஒரே தேர்வு. பொது நுழைவுத் தேர்வு, தேசிய ஆள்தேர்வு முகமை (NRA) ஏன்? மத்திய அரசு விளக்கம்

    tamil.oneindia.com - Mathivanan Maran : டெல்லி: மத்திய அரசு பணிகளுக்கு பொது நுழைவுத் தேர்வு செட் (Common eligibility Test CET) அறிமுகப்படுத்தப்படுகிறது. 
    இந்த நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான National Recruitment Agency என்ற ஏஜென்சியை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. செட் தேர்வு மற்றும் என்.ஆர்.ஏ. ஏன் அமைக்கப்படுகிறது என்பது தொடர்பாக மத்திய அரசு விரிவான விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: 
     Union Cabinet approves creation of National Recruitment Agency (NRA) இப்போது அரசுப் பணிகளுக்கு விண்ணப்பம் செய்பவர்கள், பல்வேறு பணிகளுக்கு, பல்வேறு ஆள்தேர்வு முகமைகள் நடத்தும் தேர்வுகளை எழுத வேண்டியுள்ளது. அந்தப் பணிக்காக வரையறுக்கப்பட்ட தகுதி நிலைகளைக் கொண்டதாக அந்தத் தேர்வுகள் உள்ளன. விண்ணப்பம் செய்பவர்கள் பல எண்ணிக்கையிலான ஆள்தேர்வு முகமைகளுக்குக் கட்டணம் செலுத்துவதுடன், தேர்வுகளை எழுத நீண்ட தூரத்துக்குப் பயணம் செல்ல வேண்டியுள்ளது. 
    பல தேர்வுகள் என்பது விண்ணப்பதாரர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. திரும்பத் திரும்பச் செலவிடுதல், பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள், தேர்வு நடத்துவதற்கான மையங்களை ஏற்பாடு செய்தல் என்ற வகையில் அந்தந்த ஆள்தேர்வு முகமைகளுக்கும் இது சுமையாக உள்ளது.

    50 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்! ஜெலட்டின், டெட்டனேட்டர்

     நக்கீரன் ":  கிருஷ்ணகிரி அருகே, இருசக்கர வாகனத்தில் ஜெலட்டின், டெட்டனேட்டர் மற்றும் 50 கிலோ வெடி பொருள்களை சட்ட விரோதமாக கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். 

    கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பம் என்.ஹெச். சாலையில் குருவிநாயனப்பள்ளி சோதனைச்சாவடி உள்ளது. 

    இங்கு, ஊத்தங்கரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்எஸ்ஐ ரவிச்சந்திரன், கந்திக்குப்பம் காவல்நிலைய எஸ்எஸ்ஐ மயில்வாகனன் ஆகியோர் கடந்த 17- ஆம் தேதி இரவு, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர். வாகனத்தில் மாட்டி இருந்த ஒரு பையை சோதனை செய்தபோது அதில், 200 ஜெலட்டின் குச்சிகள், அவற்றை வெடிக்க செய்யும் 400 டெட்டனேட்டர் உபகரணங்கள் மற்றும் 50 கிலோ வெடி மருந்து ஆகியவை இருந்தன.     

    ஊராட்சி மன்ற தலைவி சுதந்திர தின கொடியேற்றுவதை தடுத்த ஜாதி வெறியர்கள்

    Maha Laxmi : · சுதந்திர தினத்தன்று ஊராட்சி மன்றத்தலைவரை கொடியேற்ற
    விடாமல் தடுத்ததுடன்.. அதை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளரையும் சிறைப் பிடித்து வைக்கும் அளவுக்கு சாதிவெறியர்கள் ஆட்டம் போடுகிறார்கள்.. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் திருமதி அமிர்தம்.
    சுதந்திர தினத்தன்று பட்டியல் இனத்தை சார்ந்தவர் என்பதால் ஊராட்சி மன்ற
    பெண் தலைவருக்கு தேசியக் கொடியை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டது என்ற செய்தி நாளிதழில் வெளியானது.        இதைத் தொடர்ந்து இன்று (18-08-2020) செவ்வாய்க்கிழமை காலை புதியதலைமுறை தொலைக்காட்சி செய்தியாளர் எழில் ,ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஊராட்சி செயலாளர் சசிகுமார்
    செய்தியாளரை தடுத்து நிறுத்தி மிரட்டியுள்ளார்.தொடர்ந்து அங்கு வந்த ஊராட்சி துணைத்தலைவரின் கணவர் விஜயகுமார் மற்றும் சிலர் செய்தியாளர் எழிலை தாக்கியதுடன் அலைபேசியை பறித்துக் கொண்டு ஊராட்சி அலுவலகத்தில் செய்தியாளரை சிறைவைத்துள்ளனர்.

    புதன், 19 ஆகஸ்ட், 2020

    மாணவி சுபஸ்ரீ தற்கொலை .. நீட் தேர்வு பலி வாங்கிய மற்றுமொரு மாணவி ..

             tamil.samayam.com : உயிர் காக்கும் மருத்துவர்களைத் தேர்வு செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வு, தமிழகத்தில் உயிர்பலி வாங்கி வருகிறது.

     4 ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வால் உயிரிழந்த ஏழைச்சிறுமி அனிதாவின் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியதை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த நீட் தற்கொலையால் ஏற்பட்ட காயம், இன்னும் பலர் நெஞ்சில் வடுவாக இருக்கும் நிலையில், கோவையில் மேலுமொரு மாணவி நீட் தேர்வால் உயிரிழந்துள்ளார். 

     கோவை ஆர்.எஸ் புரம் வெங்கடசாமி சாலை கிழக்குப் பகுதியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவரது மகள் மாணவி சுபஸ்ரீ. 19 வயதாகும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக பயிற்சி மையத்தில் பயின்று வந்துள்ளார். இந்நிலையில், கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீட் தேர்வுகள் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. 

    ஈழப்போராட்டம் என்பது வெறும் வட மாகாண நலன்கள் சார்ந்ததா? உண்மை நிலவரம் என்ன?

    Kalai Selvi : · இந்தியா, , தமிழகத்தவர்களைப் பொருத்தவரை ஈழத் தமிழர்கள் என்றால் நமக்கு ஒட்டு மொத்த இலங்கைத் தமிழர்களையும் உள்ளடிக்கியே நாம் பார்க்கிறோம், அப்படியே புரிந்து உள்வாங்கியுள்ளோம். ஆனால் எதார்த்த மோ இலங்கையிலும், தமிழகத்திலும் வேறாக உள்ளது. அதுவும் இப்ப நடந்து முடிந்த இலங்கை பாராளுமன்றத் தேர்தல் நன்றாகவே பாடம் நடத்தியுள்ளன. அது சமூக வலைத்தளங்கள் காலத்தில் நன்றாகவே வெளிச்சத்திற்கு வந்துள்ளது! 

    1. இப் பின்னணியில் சில கருத்து தமிழகத்தில் ஈழப்போராட்டம் பற்றிய பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன.

    2. இலங்கையின் யாழ்பாணம் -_வடக்கு மாகாண இயக்க தலைமைகளும், அவற்றின் பரப்புரைகளுமே முழு ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாறாக தமிழகத்தில் கருதப்படுகிறது.

    3. ஈழ போராட்டத்தில் ஏற்பட்ட ஏராளமான தவறுகளின் முக்கிய புள்ளியாக இந்த வடக்கு மாகாண யாழ்பாண மேலாதிக்க அரசியலே காரணமாக இருக்கிறது.

    4. .. .போராளிகளில் மிக பெருவாரியானோர் கிழக்கு மாகாண போராளிகளே! எல்லா பக்கத்தாலும் பெரும் நெருக்கடிக்குள் உள்ளானவர்கள்கூட பெரும்பாலும் கிழக்கு மாகாணத்தவர்களே! இலங்கை இனப்பிரச்சனை பற்றி உண்மையான பல விடயங்களை இந்த வடக்கு போராட்ட தலைவர்கள் இருட்டடிப்பு செய்துவிட்டார்கள்

    நடிகை திரிஷாவை காதலித்து ஏமாற்றி வேறு பெண்ணை கரம்பிடித்த நடிகர் ராணா?

    வெப்துனியா  : காதலித்து ஏமாற்றி வேறு பெண்ணை கரம்பிடித்த நடிகர் -
    கடும் மன உளைச்சலில் திரிஷா!தமிழ் சினிமாவில் முதன்முறையாக 21 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் ஒரே நடிகை த்ரிஷா மட்டும் தான். பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா தற்போது நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். எவர்க்ரீன் நடிகையாக வலம் வரும் திரிஷா 37 வயதிலும் பலரது கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார்./>
    கொரோனா ஊரடங்கில் முழு நேரமும்  வீட்டில் இருந்து வந்தாலும் அவ்வப்போது மட்டும் இன்ஸ்டாவில் எதையேனும் பதிவிட்டு அப்பப்போ வந்து தலை காட்டுவார். இந்நிலையில் திரிஷா திடீரென நேற்று தனது இன்ஸ்டாவில் இருந்த பழைய புகைப்படங்கள் அனைத்தையும் டெலீட் செய்துவிட்டு வெறும் 7 புகைப்படங்கள் மட்டுமே விட்டு வைத்துள்ளார்.    ஏன்? என்ன ஆனது. த்ரிஷா அக்கவுண்ட்டை யாரேனும் ஹேக் செய்து விட்டார்களா என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வர... அப்படி எதுவும் இல்லை. என்னுடைய கணக்கு ஹேக் ஆகவில்லை என த்ரிஷா தெரிவித்துவிட்டார்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

    மாலைமலர் :புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூ​ட சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீ​ர்ப்பு அளித்துள்ளது. 

    இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை ​நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.       அதில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இந்த நிலையில் தமிழக அரசு சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.      ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா .. வசந்தகுமார் எம்.பிக்கு வென்டிலேட்டர் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை

    கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதால் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் வசந்தகுமாருக்கு சுவாசக்கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    கடந்த 11ஆம் தேதி வசந்தகுமாருக்கு, கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அவரது மனைவி தமிழ்செல்விக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.            இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வசந்தகுமார் எம்.பி.க்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து உள்ளது.          வசந்தகுமார் விரைவில் நலம் பெற வேண்டும் என தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு காங்கிஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

    வளர்ப்பு நாய்களை உணவாக.. வடகொரியா அதிபர் கிம் ஜாங் : சாப்பிட வழியில்ல, செல்லப்பிராணிய தாங் - அதிபர் உத்தரவு

    zeenews.india.com : வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன் (Kim Jong Un) தான்
    சர்வாதிகாரி மட்டுமல்ல, கொடுங்கோலன் தான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். 

     வட கொரியா நாட்டில் உணவு தட்டுபாடு நிலவுகிறது. பல மக்கள் உணவு இல்லாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் மக்களின் துயரை போக்க அரசு சிறந்த திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று தான் மக்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கும். ஆனால், இவர் தனித்துவமான சர்வாதிகாரி அல்லவா. அதனால், ஒரு கொடூரமான வினொதமான உத்தரவை பிறப்பித்துள்ளார். அது என்ன உத்தரவு என்றால், நாட்டில் உணவு தட்டுப்பாடு நிலவுவதால் நாட்டில் இருக்கும் மாமிச தொழில் நிறுவனங்களிடம் அனைவரும் தங்கள் ஆசையாக வளர்க்கும் நாயை ஒப்படைக்க வேண்டும் என்பது தான்.

    திருச்சியா, மதுரையா? எழும் இரண்டாம் தலைநகர் விவாதம்!

    மின்னம்பலம் : தமிழகத்தின் தலைநகராக சென்னை இருந்து வரும் நிலையில், மக்கள் தொகை நெருக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் வசதிக்காக இரண்டாவது தலைநகரை நிறுவ வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்துவருகிறது. திருச்சியை இரண்டாவது தலைநகராக்க திருச்சியா, மதுரையா? எழும் இரண்டாம் தலைநகர் விவாதம்!வேண்டும் என்று எம்.ஜி.ஆர் விரும்பினார். அது பல காரணங்களால் தடைப்பட்டுவிட்டது.

    இதனிடையே மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் உதயகுமார் புதுக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதனை வழிமொழிந்த அமைச்சர் செல்லூர் ராஜு, எம்.ஜி.ஆர் மதுரையை இரண்டாம் தலைநகராக்க விரும்பினார் எனக் கூறினார். இந்த நிலையில் மையப் பகுதியான திருச்சியில்தான் இரண்டாவது தலைநகரம் அமைய வேண்டுமென திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

    தேடுதல் வேட்டையின் போது திடீர் தாக்குதல்; குண்டு வீசி போலீஸ்காரர் கொலை

    மின்னம்பலம் : நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள மேல மங்கலகுறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையில் கடந்த 24.11.2018 அன்று வினோத், ராமச்சந்திரன் ஆகிய 2 வாலிபர்கள் படுகொதேடுதல் வேட்டையின் போது திடீர் தாக்குதல்; குண்டு வீசி போலீஸ்காரர் கொலைலை செய்யப்பட்டனர்.    இந்த இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அதே ஊரைச் சேர்ந்த பிச்சையா பாண்டியன் மகன் துரைமுத்துவை (வயது 29) போலீசார் வலைவீசி தேடி வந்தனர். ரவுடியான இவர் மீது ஸ்ரீவைகுண்டம், நெல்லை பழைய பேட்டை போலீஸ் நிலையங்களிலும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.    தலைமறைவான துரைமுத்துவை கைது செய்வதற்காக, ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று துரைமுத்துவை வலைவீசி தேடி வந்தனர்.

       தினத்தந்தி : நெல்லை அருகே தேடுதல் வேட்டையின் போது வெடிகுண்டு வீசி போலீஸ்காரர் கொல்லப்பட்டார். 

    அமெரிக்காவை முந்திய தமிழ்நாடு Tamilnadu GER - 49 ! USA - 41 ! . India - 26 !

    செந்தில் டிவேல் : பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற வங்கத்தின்
    அமர்த்தியா சென் அவர்கள் திராவிட ஆட்சியினை கொண்டாடி தீர்த்தார் என்ற செய்தி.நாம் அறிந்ததே. தமிழ் நாட்டின் வளர்ச்சியினை பிற மாநிலங்களுடன் ஒப்பிட முடியாது. வளர்ந்த நாடுகளுடன் மட்டுமே ஒப்பிட முடியும் என்றும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அவர் திக வோ திமுக வோ அல்ல. நமது மாநிலத்தை சேர்ந்தவரும் அல்ல. ஆனாலும் தெளிவாக திறனாய்வு செய்து எழுதியிருக்கிறார். தமிழ் நாட்டின் வளர்ச்சி சில வளர்ந்த ஐரோப்பிய நாடுகளை விடவும் அதிகம் என்பது பழைய செய்தி.       ஆனால் GERல் நாம் அமெரிக்காவை விடவும் முன்னேறியவர்கள் என்பது புதிய செய்தி. ஏற்கெனவே கல்வியில் உச்சத்தில் இருக்கும் நம்மை லீழ்த்துவதற்கு தான் முதலில் நீட் வந்தது. இப்போது புதிய கல்வி கொள்கை எனும் குலக் கல்வி வருகிறது. இதையும் மும்மொழி மோசடியையும் நாம் ஏற்றால் சோமாலியா எத்தியோப்பியாவை விட பின்னோக்கி செல்வோம் என்பது உறுதி

    கேரளா லாட்ஜில் இறந்த அகிலா .. பணக்கார பெண்ணின் மர்ம கதை ....

    tamil.oneindia.com - Hemavandhana : திருவனந்தபுரம்: 2வது கணவனையும் விட்டுவிட்டு போன அகிலா.. கடைசியில் லாட்ஜில் பிணமாக கிடந்தார்.. இளம்பெண் மரணம்
    குறித்த விசாரணையை கேரள போலீசார் கையில் எடுத்துள்ளனர்.

    கேரளாவின் கன்னூரை சேர்ந்தவர் அகிலா பெரையில்... இவர் கல்யாணம் ஆனவர்.. ஆனால் அவருடன் சண்டை போட்டுக் கொண்டு 2016-ல் பிரிந்துவிட்டார்... முறைப்படி விவாகரத்தும் பெற்று கொண்டார்.

    பிறகு 2வது கல்யாணம் செய்தார்.. அவர் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர்.. 3 மாசம்தான் வாழ்ந்திருப்பார்.. அவரிடமும் சண்டை போட்டுக் கொண்டு வீட்டைவிட்டு போய்விட்டார்.போனவர் சும்மா போகவில்லை.. 30 லட்சம் ரூபாய், 40 சவரன் நகைகள், காருடன் அகிலா எஸ்.ஆனார்.. எங்கே போனார் என்று யாருக்குமே தெரியவில்லை. இந்த நிலையில், கொஞ்ச நாளைக்கு முன்பு அகிலா சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்கள்.. சொந்தக்காரர்களை சந்தித்து விட்டு ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருந்திருக்கிறார்.

    செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

    அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிகாலை 2. 30 மணி அளவில்

     BBC :  இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அதிகாலை 2.30

    மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென்று சேர்க்கப்பட்டுள்ளார்.கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அமித் ஷாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து குர்கானில் உள்ள மேதாந்தா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இரு வார சிகிச்சைக்குப் பிறகு அவரது பரிசோதனை முடிவில், வைரஸ் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டதால், வீடு திரும்பினார். எனினும், மருத்துவர்களின் அறிவுரைப்படி இரு வாரம் வீட்டுத்தனிமையில் அவர் ஓய்வெடுத்து வந்தார்.

    இந்த நிலையில், கடந்த இரண்டு, மூன்று நாட்களாக உடல் சோர்வு மற்றும் உடல் வலி காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், திங்கள்கிழமை நள்ளிரவைக் கடந்த வேளையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன? #DoubtOfCommonMan #MustRead

    .vikatan.com - ராஜு.கே
    இந்திய - சீன எல்லை
    : இந்திய - சீன எல்லை அக்சாய் சின்னும், ஜம்மு காஷ்மீரின் ஒருபகுதிதான். காஷ்மீர் என்றால் அது அக்சாய் சின், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் அனைத்தும் உட்பட்டதுதான்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் பதற்றம் நிலவிவருகிறது. இச்சூழலில், விகடனின்  DoubtOfCommonMan பக்கத்தில், கீர்த்திநாதன் என்ற வாசகர் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். "சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (அக்சய் சின்) உள்ள இந்தியாவின் பகுதிகள் எவை? அங்குள்ள மக்களின் வரலாறு மற்றும் குடியுரிமை நிலை என்ன?" என்பதுதான், அவரது கேள்வி.

    இந்திய - சீன எல்லை

    சுமார் 69 ஆண்டுகளாக, தீர்க்க முடியாமல் இருக்கும் இந்திய - சீன எல்லைப் பிரச்னையின் மையமாக இருப்பது காஷ்மீரின் மேற்குப் பகுதியில் இருக்கும் அக்சாய் சின். சீனாவின் நம்பகமற்ற தன்மை, இந்திய ஆட்சியாளர்களின் தொடர் தவறுகளால், இப்பிரச்னை இன்றுவரை இழுபறியாகவே உள்ளது.

    Facebook BJP RSS கூட்டணி ? முகநூலுக்கும் பாஜகவுக்கும் உள்ள திருட்டு தொடர்பு ...

    Kulitalai Mano : முகநூல் எதிர்பார்த்த ஒன்று. கத்திரிக்காய் முற்றி கடைத்தெருவுக்கு வந்தது! சிலமாதங்களுக்கு முன்பு face book Mr Mark Zuckerberg ரிலையன்ஸ்
    அம்பானி கம்பனியில் பல லட்சம் டாலர் முதலீடு என்றதும் எனக்கு ஏற்பட்ட முதல் எண்ணம் நம்முடைய தகவல்கள் திருடபடும் என்பது தான் கத்திரிக்காய் முற்றினால் கடை தெருவுக்கு வந்துதானே ஆகவேண்டும் என்று அதை பற்றி பதிவு போடவில்லை. அடுத்து மிகவும் கெத்தாக இருந்த ஃபேஸ் புக் திடீரென்று நீங்கள் வியாபார விளம்பரம் செய்ய என்று ஏதோ தொடர்பு என்னை கொடுத்தார்கள்.
    அடுத்து அதிர்ச்சியடைவதை போல அடுத்தவர் பிறந்தநாளை கொண்டாட நண்பர்களிடம் பண உதவி என்று ஆரம்பித்தார்கள் அன்றே நான் நான் பணம் கொடுக்கும் நிலையில் இல்லை வேனா நான் எழுதுவதற்கு நீங்கள் பணம் கொடுங்கள் என்று பதில் அனுப்பினேன் அதற்கு பிறகு பதில் இல்லை.

    விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி இல்லை! கொரோனா தொற்று .. எப்படி அனுமதிக்க முடியும் ? நீதிமன்றம் கேள்வி .

    tamil.samayam.com: விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வழங்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துள்ளது.ஒருநாளில் சுமார் 6000 பேருக்கு கொரோனா

    தொற்று ஏற்பட்டுவரும் இந்த சூழலில் எப்படி விநாயகர் சதுர்த்தி விழாவை அனுமதிக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

    விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும். கொரோனா பொது முடக்கம் காரணமாக அனைத்து மத வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுபோல் தமிழ்நாடு அரசு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கும் ஊர்வலங்கள் செல்வதற்கும் தடை விதித்துள்ளது. பாஜக, இந்து முன்னணி போன்ற அமைப்புகள் இந்த தடையை நீக்கி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றன. இது தொடர்பாக பாஜக தலைவர் எல்.முருகன் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார்.

    மத்திய பிரதேசம்: "மண்ணின் மக்களுக்கே அரசு வேலை" - முதல்வர் சிவராஜ் சிங் செளஹான்.. வீடியோ

    BBC : மத்திய பிரதேச மக்களுக்கு மட்டுமே மாநில அரசு பணிகள் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் அறிவித்துள்ளார். 

    இது தொடர்பாக காணொளி வெளியிட்டுள்ள சிவராஜ் செளஹான், "மத்திய பிரதேச அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மத்திய பிரதேச அரசு பணிகள் அம்மாநில இளைஞர்களுக்கு மட்டுமே கிடைக்க வழிவகை செய்யும் ஒரு சட்டத்திருத்தத்தை கொண்டு வர உள்ளோம்.        மத்திய பிரதேச வளம், மத்திய பிரதேச குழந்தைகளுக்கே," என அவர் கூறி உள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் தொழிற்சாலை அல்லது நிறுவனங்கள் உள்பட அனைத்து வகை தொழிற்துறை வேலைவாய்ப்பிலும் 75%, உள்ளூர் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கும் மசோதா ஆந்திர பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.>மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாகவுள்ள 27 சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், முதலமைச்சரின் இந்த அறிவிப்பு, அம்மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை- வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி .. சென்னை உயர் நீதிமன்றம் .. வீடியோ

    மாலைமலர் : : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை- வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் ஸ்டெர்லைட் ஆலை சென்னை: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி பொதுமக்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டம், வன்முறையாக மாறியது.           இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து அதே ஆண்டு மே மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு ‘சீல்’ வைத்தது. இதை எதிர்த்தும் ஆலையை திறக்க அனுமதி கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    மாறனின் தோஹா பிரகடனம் ... மூன்றாம் உலக நாடுகளின் வல்லமையை உணர்த்திய ஆளுமை What is DOHA DECLARATION?

    Sivakumar Nagarajan  : · தோஹாவில் 142 நாடுகள் கலந்து கொண்ட WTO மாநாடு. மூன்றாம் உலக நாடுகளுக்கு எதிரான ஒப்பந்தம் என இந்தியாவின் காமர்ஸ் அமைச்சர், கலைஞரின்_மனசாட்சி முரசொலி மாறன் கடுமையாக எதிர்த்து அந்த மாநாட்டையே ஸ்தம்பிக்க வைத்தார். 

    பிறகு அமெரிக்கா பணிந்து, கேட்ட திருத்தமெல்லாம் செய்த பிறகே இந்தியா கையெழுத்திட்டது வரலாறு.          

     ஒரு மத்திய அமைச்சர் எத்தனை ஆழமாக தனது துறை சார்ந்த விஷயங்களைப் படித்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உலகிற்கே எடுத்துக்காட்டு முரசொலி_மாறன்.       பல துறை சார்ந்த நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட ஒப்பந்தத்தை தனி ஆளாக படித்து, திருத்தங்கள் செய்து அசத்தினார் .     அவரை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தோஹா மாநாட்டுக்கு மாறன் அவர்களை இந்தியக் குழுவை தலைமையேற்று செல்லுமாறு பணித்தார்.       அதுவரை பிரதமரே செல்வதாக திட்டம். திடீரென இவரை போகச் சொன்னவுடன், அந்த இரவு புறப்படும் முன் பிரதமரை சந்தித்து, நாளைய மாநாட்டில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? என மாறன் கேட்டார்.  

    What My Commerce Minister Mr.Maran says is the policy of this country என்றார் பிரதமர். மேலும் மற்ற நாட்டு அதிபர்களுக்கு இணையான கவுரவத்துடன் இந்தியப் பிரதிநிதி செல்ல வேண்டும் என தனது தனி விமானத்தைத் தந்து அனுப்பினார். விமானத்திலேயே அதிகாரிகளுடன் டிராஃப்ட் ஒப்பந்தத்தை ஒவ்வொரு பக்கமாக எடுத்து விவாதிக்கத் தொடங்கினார் மாறன். 

    கொரோனா தடுப்பு மருந்து: சீனாவின் முதல் தடுப்பு மருந்துக்கு படைப்புரிமை வீடியோ

    BBC : சீனாவில் கண்டறியப்பட்டுள்ள முதல் கொரோனா தடுப்பு மருந்துக்குரிய படைப்புரிமைக்கு (பேட்டன்ட்) அந்த நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.>சீனாவை சேர்ந்த கான்சினோ பயோலொஜிக்ஸ் (CanSino Biologics) என்ற மருந்து நிறுவனம் அந்த நாட்டின் ராணுவ மருத்துவ அறிவியல் மையத்துடன் சேர்ந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்துக்கு, தேசிய அறிவுசார் சொத்து ஆணையம் படைப்புரிமை வழங்கியுள்ளதாக சீன அரசு ஊடகமான "பீப்பிள்ஸ் டெய்லி" செய்தி வெளியிட்டுள்ளது. இந்த புதிய தடுப்பு மருந்துக்காக கடந்த மார்ச் 18ஆம் தேதி படைப்புரிமை கோரி விண்ணப்பிக்கப்பட்டதாகவும், அதற்கு ஆகஸ்டு 11ஆம் தேதி ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் காப்புரிமை ஆவணங்கள் தெரிவிப்பதாக பீப்பிள்ஸ் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.

    கீழடி அகழாய்வு! தோண்டத்தோண்ட தாழிகள்... ஆச்சர்யம் தரும் #ExclusivePhotos

    அருண் சின்னதுரை - -என்.ஜி.மணிகண்டன் - ஈ.ஜெ.நந்தகுமார் விகடன் : `கொந்தகை' - கீழடி தொல்லியல் அகழாய்வு இயக்குநர் சிவானந்தம்
    `கொந்தகை' - கீழடி
    `கொந்தகை' - கீழடி
    'மணிமேகலைக் காப்பியத்தில்' கூறுவதைப்போல சுடுவோர், இடுவோர், தாழ்வையில் அடைப்போர், தாழியிற் கவிழ்ப்போர் என்ற நான்கு வகையான புதை நடைமுறைகளை இங்கே காண முடிகிறது. எப்போதும் இல்லாத அளவில் கீழடி 6-ம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் என்று நான்கு இடங்களில் செய்யப்படுகிறது. இதில் ஒவ்வொரு இடங்களிலும் சிறப்பு மிக்க தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. 3 மாத கொரோனா ஊரடங்கு, மழை பொழிவுப் தொய்வுகளுக்கும் இடையில் அகழாய்வு வேகமெடுத்து வருகிறது. 6ம் கட்ட அகழாய்வில் தற்போது வரை இந்த நான்கு இடங்களையும் சேர்த்து 130 குழிகளுக்கு மேல் தோண்டப்பட்டு ஆய்வு தொடர்கிறது.கீழடி ஆய்வு பல ஆச்சர்யங்களை தொடர்ந்து தந்துகொண்டே இருக்கிறது. நான்கு, ஐந்து, 6-ம் கட்டம் என தமிழக தொல்லியல்துறை கீழடியின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து விரிவான அகழாய்வு செய்து வருகின்றது. கடந்த பிப்ரவரி 19-ம் தேதி கீழடி 6-ம் கட்ட அகழாய்வுப் பணியை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். 

    பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் ... மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 . வீடியோ

    தினத்தந்தி : மணிலா, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை 5.30 மணிக்கு ஏற்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவானதாக தேசிய பூகம்ப ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து 451 கி.மீ தென்கிழக்கில் இருந்ததாகவும், கடலுக்கு மேற்பரப்பில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளது. வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறிஅடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதவிவரங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை

    இந்தியாவை கொள்ளை அடிக்கும் குஜராத்தின் வண்டவாளம் ...

    Ksb Boobathi : குஜராத் தான் ஒட்டுமொத்த அறிவாளிகள் வாழும் மாநிலம்.
    கிருஷ்ணரும் அர்ஜுனனும் இந்த மாநிலத்தில்தான் பிறந்தார்கள்.    நான் சொல்வது புரியவில்லை என்றால் நீங்கள் ஒரு தங்கிலீஷ் காரர். குஜராத்துக்கு நிறைய பெருமைகள் உண்டு அதில் சிலவற்றை மட்டும் நாம் காண்போம். மொத்தம் உள்ள 32,772 பள்ளிகளில்... கிட்டத்தட்ட 12000 பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டும் உள்ளனர்.     இதில் 15 ஆயிரம் பள்ளிகளில் 100 கீழ் மாணவர்கள் மட்டுமே உள்ளனர்...     8673 பள்ளிகளிலும் 50க்கும் கீழே மாணவர்கள் உள்ளனர். 30% குஜராத் பள்ளி மாணவர்களுக்கு அதாவது ஆறில் இருந்து எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிக்கவும் எழுதவும் தெரியாது.

    மொத்தம் 63 பள்ளிகளில் இருந்து ஒரு மாணவர் கூட குஜராத்தி மொழியில் பாஸ் ஆகவில்லை.

    குஜராத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சதவீதம் 66.97% .... இதே இந்தி படிக்காத பின்தங்கிய மாநிலமான தமிழகத்தில் 95.2%.

    இது எல்லாமே நான் சொல்லவில்லை, குஜராத் எஜுகேஷன் டிபார்ட்மென்ட் எடுத்த சர்வேயில் வெளியான தகவல்கள்.

    தங்கம் விலை அண்மையில் குறையும் வாய்ப்பில்லை ... Karthikeyan Fastura

    Karthikeyan Fastura : 2018 ஏப்ரலில் 2.27 ட்ரில்லியன் அளவிற்கு சந்தை மதிப்பு கொண்ட NSE Stock Exchange, இந்த வருடம் மார்ச் 31ந்தேதியில் 1.463 ட்ரில்லியன்க்கு குறைந்துள்ளது. 800 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 60 லட்சம் கோடிகள்) அளவிற்கு இந்திய பங்குச்சந்தையின் மதிப்பு குறைந்துள்ளது. இந்த வேகத்தில் சரிந்தால் இன்னும் ஓராண்டு காலத்தில் ட்ரில்லியன் டாலர் பங்குசந்தை என்ற அடையாளத்தை இழக்ககூடும். இரண்டாண்டுகளில் இந்த 60 லட்சம் கோடிகள் எங்கே போனது என்றால் அது தன் மதிப்பை இழந்திருக்கிறது. FII எடுத்துக்கொண்டு விலகியது 10% தான் இருக்கும். மீதி 90% என்பது சந்தையின் மதிப்பு இழந்துள்ளது அவ்வளவே.

    உதாரணத்திற்கு நீங்கள் ஒரு நிலத்தை 1 கோடி ரூபாய்க்கு வாங்குகிறீர்கள். திடிரென்று அந்த நிலத்தின் அருகே உயிருக்கு ஆபத்தான ஒரு தொழில்சாலை வருகிறது. அங்கே யாரும் நிலம் வாங்க தயாராக இல்லை. இப்போது நீங்கள் அந்த நிலத்தை 50 லட்சத்திற்கு விற்க முடிவு செய்கிறீர்கள். மீதி 50 லட்சம் எங்கே போனது? மதிப்பு குறைந்து போனது அவ்வளவே.

    மாறன் தேவைப்படும் நேரம் இது: வைகோ பேச்சு

    தினகரன் : சென்னை: மத்தியில் புதிய கல்விக் கொள்கையை திணிக்கின்றனர். இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கின்றனர். இந்த நேரத்தில் முரசொலி மாறன் தேவைப்படுகிறார். அவரின் மாநில சுயாட்சி தேவைப்படுகிறது என வைகோ புகழாரம் சூட்டினார். மதிமுக பொது செயலாளர் வைகோ எம்பி, காணொலி மூலம் பேசியதாவது: முரசொலி மாறனை பொறுத்தவரை எந்த காலத்திலும் கடிந்து கொண்டதில்லை. கொஞ்சம் கூட முகதாட்சண்யம் இல்லாமல் அவர் பேசி விடுவார் என்று மற்றவர்கள் கூறுவார்கள். ஒரு நாளும் என்னை கடிந்து கொண்டதில்லை. எல்லா நாட்களிலும் அவரிடம் ஆலோசனை பெற்று தான் நாடாளுமன்றத்துக்கு பேச செல்வேன். ஒவ்வொரு கட்டத்திலும் நாடாளுமன்றத்தில் நான் உரையாற்றும் போது எனக்கு அவ்வளவு ஊக்கமும், ஆக்கமும் தந்தார்.

    எஸ்.பி. பாலசுபிராமணியம் நெருக்கடியான நிலையில் தொடர்கிறார்: மருத்துவமனை அறிக்கை

    hindutamil.in : எஸ்.பி.பி நெருக்கடியான நிலையில் தொடர்கிறார் என்று
    மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 17) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்று பாதிப்பால் எங்களுடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடர்ந்து செயற்கை சுவாச உதவியோடு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். நெருக்கடியான நிலையில் தொடர்கிறார். அவருக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவ நிபுணர் குழு அவரது உடல்நிலையைக் கூர்ந்து கண்காணித்து வருகிறது இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

    சொதப்பும் ஐ-பேக்... கொதிக்கும் திமுக... இதுவரை பிரசாந்த் கிஷோர் டீம் செய்தது என்ன..?

     Arsath Kan-tamil.oneindia.com : சென்னை: திமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவன செயல்பாடுகள் மு.க.ஸ்டாலினுக்கு திருப்திகரமாக இல்லை. ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பணியாற்றிய டீமில் பாதிபேர் ஐ-பேக் நிறுவனத்தில் இருந்து வெளியேறிவிட்டதால், அனுபவமற்ற புதிய நபர்களை கொண்டு திணறி வருகிறார் பி.கே. சமூக வலைதளங்களில் திமுக மீதான விமர்சனங்களுக்கு ஐ-பேக் குழுவில் இருந்து சரியான பதிலடி கொடுப்பதில்லை என்பது கட்சி சீனியர்களின் கருத்தாக உள்ளது.        கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஆப்பு வைக்கும் டிரம்ப்.. டிக்டாக்கை அடுத்து அலிபாபாவிற்கும் அதிரடி செக்! தேர்தல் வியூகம் தேர்தல் வியூகம் தேர்தல் வியூகம் வகுப்பதில் ஸ்பெலிஸ்ட் என பெயரெடுத்த பிரசாந்த் கிஷோரை அறியாத தலைவர்களே இந்தியாவில் இருக்கமுடியாது.           தங்கள் கட்சியின் ஆலோசகராகவும், தேர்தல் வியூக வகுப்பாளராகவும் கொண்டு வர இவரிடம் பல கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தினாலும் எந்த குதிரை ஜெயிக்குமோ அந்த குதிரையிலேயே பயணப்பட விரும்புபவர். தமிழகத்தில் இருந்து கூட மக்கள் நீதி மய்யம், அதிமுக சார்பில் கடந்தாண்டு இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு - ஐகோர்ட்டு அறிவிப்பு

    மாலைமலர் : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு இழுத்து மூடியதை எதிர்த்தும், ஆதரித்தும் தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை இன்று சென்னை ஐகோர்ட்டு பிறப்பிக்க உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு - ஐகோர்ட்டு அறிவிப்பு சென்னை ஐகோர்ட் சென்னை: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி பொதுமக்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டம், வன்முறையாக மாறியது இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து அதே ஆண்டு மே மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு ‘சீல்’ வைத்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    ஸ்டெர்லைட் ஆலை


    ஆனால், தமிழக அரசு எடுத்த முடிவு சரிதான் என்றும், ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுபுகையால் பொதுமக்களுக்கு நோய்கள் வருகிறது. அதனால் அந்த ஆலையை திறக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தெர்மல் சொ.ராஜா, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜூ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜூனன், தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் வக்கீல் அரிராகவன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

    நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    மின்னம்பலம் : கொரோனா தொற்று பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதுபோலவே மே மாதம் நடத்தப்படும் மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய நீட் நுழைவுத் தேர்வு இதுவரை நடைபெறவில்லை. இதனிடையே ஜேஇஇ மெயின் தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13ஆம் தேதி நடக்கும் என தேசிய தேர்வு முகமை ஜூலை 3ஆம் தேதி அறிவித்தது.  

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 11 மாநிலங்களைச் சேர்ந்த 11 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள், “நாட்டில் இயல்புநிலை திரும்பிய பின்னரே ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை நடத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்” என மனுவில் வலியுறுத்தினர். இதுபோலவே தேர்வுகளை நடத்த வேண்டும் எனவும் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.    இந்த இரண்டு வழக்குகளும் நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு முன்பு இன்று (ஆகஸ்ட் 17) விசாரணைக்கு வந்தது. தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரிய மனுவில், “கொரோனா நேரத்திலும் கூட வாழ்க்கை முன்னேறிச் சென்றுகொண்டுதான் உள்ளது. அதுபோல நாமும் முன்னேறிச் சென்றுகொண்டுதான் இருக்க வேண்டும்” என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    திங்கள், 17 ஆகஸ்ட், 2020

    லட்டியால் வெளுத்த போலீஸ் 83 வயது முதியவருக்கு எலும்பு முறிவு! மகனுக்கு கண் பார்வை போச்சு! எடப்பாடியின் காக்கிகள்!

    ariyampalayam

    நக்கீஎரன் : சேலத்தில், விசாரணை என்ற பெயரில் லட்டியால் கண்மூடித்தனமாக தாக்கியதில், 83 வயது முதியவரின் வலது கை எலும்பை முறித்துள்ளனர், காவல்துறையினர். அவருடைய மகனை தாக்கியதில் கண் பார்வை நரம்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 
    சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் அருகே உள்ள அரியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (83). இவருடைய மகன் ராஜூ (53). இவர்களுக்கு அதே பகுதியில் 2.60 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 60

    ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களின் அனுபவ பாத்தியதையில் இருந்து வருகிறது. இவர்களது நிலம் அருகே, உத்தமசோழபுரம் ஊராட்சி மன்றத் தலைவரான அதிமுகவைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் விவசாய நிலம் இருக்கிறது.   

    H-1B visa : இந்தியர்களுக்கு அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் அளித்த உறுதி

    tamil.oneindia.com - VelmuruganP : வாஷிங்டன்: தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்கவாழ் இந்தியர்களுக்காக ஹெச்-1பி விசா உள்பட பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார்.

    அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். ஒபாமா அதிபராக இருந்த போது துணை அதிபராக இருந்தவர் தான் ஜோ பைடன்.

    இந்நிலையில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் ஆதரவை பெறுவதற்காக ஜோ பைடன் பல்வேறு சலுகைகளை அளிப்பேன் என்று உறுதியளித்துள்ளார். தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்கவாழ் இந்தியர்களுக்காக ஹெச்-1பி விசா உள்பட பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

    சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் திறப்பு!

     சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் திறப்பு!

    மின்னம்பலம் : சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.   கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதத்தில் தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. அதன் பின் ஒவ்வொரு ஊரடங்கு நீட்டிப்பின் போதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மே 7ஆம் தேதி சென்னையைத் தவிர்த்து தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள 4,550 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன. திறந்த முதல் நாளிலேயே 170 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வருவாய் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்தும், நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய்க்கு அதிகமாகவும், சனிக்கிழமைகளில் 150 கோடி ரூபாய்க்கு அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாவதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இ-பாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கிடைக்கும் . அப்புறம் ஏன் இந்த பாஸ் நடைமுறை?

    விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: வழங்கும் முறை  தமிழகத்தில் அமலுக்கு வந்தது

    தினத்தந்தி : சென்னை, ; தமிழகத்தில் விண்ணப்பிக்கும்  அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் என்ற அறிவிப்பு இன்று (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது.
    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கில் மிக கடுமையாக பின்பற்றப்படும் நடவடிக்கையாக இ-பாஸ் நடைமுறை பார்க்கப்பட்டது. மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு முதலில் அறிவித்தது.

    M.S Dhoni தோனி ஜார்கான்ட் மாநில தேர்தலில் பாஜகவுக்கு பிரசாரம் செய்ய மறுத்ததால் பழிவாங்கப்பட்டார்

    எல்லோரும் MS தோனி ஓய்வு பற்றி வருந்துகிறோம். அதிலும் பெரிய கொடுமை என்னவென்றால் இரு உலக கோப்பைகளை வென்ற நாயகனுக்கு ஒரு வழியனுப்பு போட்டி கூட இல்லாமல் ஓய்வு பெறுவது தான். 

    இதற்கு பின்னால் உள்ள காரணம் மிக அதிர்ச்சிகரமானது.        2019 ஜூலை மாதம் நடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டி தான் தோனி விளையாடிய கடைசி ஒருநாள் போட்டி. அதற்கு பிறகு எந்த காரணமும் இன்றி தோனி அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.        ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஜூலை - 2019உலகக்கோப்பை முடியும் தருவாயில் தோனியின் மாநிலமான ஜார்கண்டில் சட்டசபை தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியது.      ஆளும் கட்சியான பாஜக விற்கு மக்களிடம் பெரும் அதிருப்தி நிலவியது. பாஜக'விற்கு வெற்றி வாய்ப்பு துளியும் இல்லை என்று கள நிலவரம் தெளிவாக உணர்த்தியது.       அந்த நேரத்தில் பாஜக'விற்கு தேவைப்பட்டதெல்லாம் ஒரு பிரபல முகம். ஆம்! இளைஞர்களில் இருந்து வெகுஜன மக்கள் வரை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு பிரபல முகம் தேவைப்பட்டது.  பாஜக உடனடியாக அணுகியது ஜார்கண்ட் மண்ணின் மைந்தன் தோனியை தான். பலமுறை கட்டாயப்படுத்தியும், ஆசை வார்த்தைகள் கூறியும் MS.தோனியை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்தது பாஜக. தோனி விடாப்பிடியாக மறுத்துவிட்டார்.

    ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

    Facebook முகநூல் - பாஜக ஆர் எஸ் எஸ் திருட்டு தொடர்பு அம்பலம் ..

    Raja Sridhar : : · அம்பலமான பேஸ்புக்-பாஜக/ஆர்எஸ்எஸ் தொடர்பு முகநூல் இந்திய நிறுவனத்தில் கொள்கை தலைவரான (Policy Head) அங்கி தாஸ் (Ankhi Das) பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு பல காலமாக
    இருக்கிறது. தற்போது வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், இந்த அங்கி தாஸ், தான் சார்ந்த முகநூல் கொள்கைக்கு எதிரானதாக இருக்கும், இஸ்லாமியர்களுக்கு எதிரான பாஜகவின் வெறுப்பு பிரசாரங்களை முகநூளில் பரவ அனுமதித்துள்ளார் என்று அம்பலப்படுத்தியுள்ளது. அம்பலமான பேஸ்புக்-பாஜக/ஆர்எஸ்எஸ் தொடர்பு

    முகநூல்  இந்திய நிறுவனத்தில் கொள்கை தலைவரான (Policy Head) அங்கி தாஸ் (Ankhi Das) பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருக்கிறது. தற்போது வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், இந்த அங்கி தாஸ், தான் சார்ந்த முகநூல் கொள்கைக்கு எதிரானதாக இருக்கும், இஸ்லாமியர்களுக்கு எதிரான பாஜகவின் வெறுப்பு பிரசாரங்களை முகநூளில் பரவ அனுமதித்துள்ளார் என்று அம்பலப்படுத்தியுள்ளது.

    விரதம் பூஜை அபிசேகம் வேண்டுதல் சாபவிமோசனம் புராணங்கள் எல்லாம் கோயில் பூசகர்களாலும் பார்ப்பனர்களாலும் புனையப்பட்ட பொய்கள் . .. யாழ்ப்பாணம் திரு ந.ச. கந்தையாபிள்ளை

    Dhinakaran Chelliah

    : விரதமோ விரதம் சமீபத்திய பதிவு ஒன்றில் மச்ச புராணத்தின் ஆங்கிலப் பதிப்பின், எழுபதாவது அத்தியாயத்தை அப்படியே தந்திருந்தேன். அதைத் தமிழில் எழுதுவதற்கு விருப்பமில்லை,  அந்த அளவிற்கு ஆபாசமாய் இருப்பதாக குறிப்பிட்டிருந்தேன். அந்த அத்தியாயத்தின் தமிழாக்கப் பகுதியை யாழ்பாணத்து நவாலியூர் திரு.ந.சி.கந்தையாபிள்ளை  அவர்கள் எழுதிய “ஆரிய வேதங்கள்” எனும் நூலில் வாசிக்க நேர்ந்தது.    இந்த நூல் 1947 ல் ஆண்டு பதிப்பு ஆகும். அதாவது, பிரம்மாவிற்கும் சிவனுக்கும் சம்பாஷணை நடக்கிறது. பிரம்மா, சாதாரண மானுடப் பெண்மனிகளின் நடத்தையும் அவர்களது கடமைகளைப் விவரிக்கும்படி சிவனிடம் கேட்கிறார் அதற்கு சிவபெருமான்,மேற்சொன்ன யுகங்களில் கிருஷ்ணனுக்கு 16000 மனைவிகள் உண்டு. இவர்கள் தேவலோக கன்னிகைகள். ஒரு சமயம் நாரத முனிவரை வணங்காத பாவத்தினால் அவரது சாபத்திற்கு ஆளாகிப் போகிறார்கள். தேவ கன்னிகளாக இருந்த இந்தப் பெண்கள் சாதரண மானுடப் பெண்களாக பிறப்பெடுக்கிறார்கள்.

    தமிழக பஜாக மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் ....

    tamil.indianexpress.com : வரும் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்,பாஜக
    வேட்பாளரை வெற்றி பெறச்செய்யும் மாவட்ட தலைவருக்கு இன்னோவா கார் பரிசு வழங்கப்படும் என்று பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். முன்னதாக, சென்னை கமலாலயத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய வி.பி துரைசாமி,”சட்டமன்ற உறுப்பினரான கு.க.செல்வம் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த பின்னர், தமிழக அரசியல் களம் திமுக vs பாஜக என உருவெடுத்துள்ளது. நாங்கள் வெகு வேகமாக தமிழகத்தில் வளர்ந்து வருகிறோம். 2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் எங்கள் தலைமையிலான கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்” என்று கருத்து தெரிவித்திருந்தார்  . 

    இந்நிலையில், தமிழக பாஜாகவின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் காணொளி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய  எல்.முருகன், ” அடுத்த 6 மாதத்தில் தமிழக அரசியலில் மிகப் பெரும் மாற்றம் ஏற்படும். பாஜக கை காட்டும் கட்சியே, தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கும்  நிலை உருவாகும்” என மாவட்ட தலைவர்களிடம் தெரிவித்தார்.

    கமலா ஹாரிஸ் : என்னை கறுப்பு இன பெண்ணாகவே பார்க்கும் .. எனவே தன்னம்பிக்கை கொண்ட பெண்ணாக ..

    BBC :கமலா ஹாரிஸ்: மெட்ராஸ் இட்லியும், கடற்கரையில் தாத்தாவுடன் நடைப்பயிற்சியும் - அமெரிக்க துணை அதிபர் வேட்பாளரின் சென்னை நாட்கள் . 16 ஆகஸ்ட் 2020 கமலா ஹாரிஸின் ஒரேயொரு பலவீனம் இதுதான் - தாய்மாமா பகிரும் புதிய தகவல்கள்" அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான செனட்டர் கமலா ஹாரிஸ், தனது தாத்தாவுடன் சென்னை கடற்கரையில் நடந்ததையும், தனக்கு இட்லியை பிடிக்க வைக்க தனது தாய் எடுத்த முயற்சிகளையும் நினைவுகூர்ந்து பேசினார் .துணை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல் முறையாக இந்திய அமெரிக்க சமூகத்தினரிடம் உரையாற்றிய கமலா ஹாரிஸ், தனது இந்தியப் பாரம்பரியம் குறித்துப் பெருமைப்படுவதாகக் கூறினார்.

    இந்தியர்களுக்கு சுதந்திர வாழ்த்து தெரிவித்த அவர், "இன்று ஆகஸ்ட் 15. தெற்காசிய பூர்வீகத்தைக் கொண்ட அமெரிக்காவின் முதல் துணை அதிபர் வேட்பாளராக நான் உங்கள் முன் நிற்கிறேன்" என அப்போது தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "என் அம்மாவிற்கு 19 வயதாக இருக்கும்போது கலிஃபோர்னியா வந்திறங்கினார். அப்போது அவரிடம் எதுவுமில்லை. ஆனால், அவரது பூர்வீகத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் அவரிடம் இருந்தது.

    சவுக்கு சங்கர் : எதை கொண்டாடுவது ?

    Savukku · 15/08/2020 : எந்த சுதந்திரத்துக்காக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தார்களோ, சிறைப்பட்டார்களோ, சித்திரவதைகளை எதிர்கொண்டார்களோ, சொத்துக்களை இழந்தார்களோ, துப்பாக்கிக் குண்டுகளை ஏந்தினார்களோ, தடியடி பட்டார்களோ அந்த சுதந்திரம் பாசிச சக்திகளால் பறிக்கப்படுவதை கொண்டாடவா ?    

    நாடு விடுதலையடைந்தபின் பல நாடுகளின் உதவியோடு  இந்தியாவில் உருவாக்கப்பட்ட, இந்தியாவை பின்னாளில் பெரும் பொருளாதார சக்தியாக உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் அக்கு அக்காக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றனவே அதைக் கொண்டாடவா ?    ஒரு நாளில் இரு நாடுகள் உருவாகும் நேரத்தில், ஒரு நாடு மதத்தின் அடிப்படையில் உருவானபோது, இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தது.  அந்த முடிவு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு,  இந்தியாவும் மதவெறி நாடாக மாறியதை கொண்டாடவா ?

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் வாக்குவங்கி எத்தனை சதவிகிதம்? திமுக நடத்திய ஆய்வு முடிவு!

    மின்னம்பலம் : தமிழகத்தில் வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அப்படியே தொடருமா அல்லது அதில் சில மாற்றங்கள் ஏற்படுமா என்பது குறித்து, அரசியல் நகர்வுகளை ஒட்டி கணிப்புகள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன. ‘காங்கிரஸ் இல்லா பாரதம்’ என்பதை      தனது கொள்கையாகவே வைத்துக் கொண்டிருக்கும் பாஜக அதை பல மாநிலங்களில் செயல்படுத்தவும் முனைந்து வருகிறது. அந்த அடிப்படையில் இந்திய அளவில் காங்கிரஸ் இன்னும் ‘கொஞ்சம் பலத்தோடு’ இருக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்று கருதுகிறது பாஜக. அந்தவகையில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை விலக்கி வைக்க வேண்டும் என திமுகவுக்கு பாஜக அழுத்தம் தருவதாகவும் டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் வருகின்றன.     

    ஆனால் இப்போது வரை தமிழகத்தில் திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் இடம்பெற்றிருக்கிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமியும் இணைந்து வெளியிட்ட அறிக்கை திமுக -காங்கிரஸ் கூட்டணிக்குள் புயலைக் கிளப்பியது, கூட்டணி என்று அறிவித்துவிட்டு காங்கிரஸுக்கான இடங்களிலும் திமுகவே போட்டியிடுகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இந்த அறிக்கைப் பிரச்சினை டெல்லி வரை எதிரொலித்தது. சோனியா காந்தி கூட்டிய கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் டெல்லியில் இருந்துகொண்டே திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு புறக்கணித்தார். இதன் மூலம் திமுக காங்கிரஸ் கூட்டணி மேலும் ஒரு ரிஸ்க்கை சந்தித்தது.

    பெண்களின் திருமண வயதை மாற்றியமைக்கப்படுகிறது . 21 வயதாக உயர்த்த ஆலோசனை .

    மின்னம்பலம் : பெண்களின் திருமண வயதை மாற்றியமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் 74ஆவது சுதந்திர தினமான நேற்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி வைத்து உரையாற்றினார். பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட பிரதமர், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாபெண்களின் திருமண வயது மாறுகிறது!க தெரிவித்தார்.

    தற்போது பெண்களின் திருமண வயது 18 ஆகவும் ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் உள்ள நிலையில், “பெண்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் நிலையில், அவர்களின் திருமண வயதை 21 ஆக மாற்றியமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் மத்திய அரசு ஒரு முடிவை எடுக்கும்” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

    மத்திய அரசின் இந்த முடிவு பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பெண்களின், உயர் கல்வி மற்றும் தொழில் வாழ்க்கையில் வாய்ப்புகளை உயர்த்தவும், தாய்வழி இறப்பு விகிதத்தை குறைக்கவும், பெண்களுக்கு ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துவதற்கான கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    கொரோனா பாதிப்பு ... உலக அளவில் இந்திய முதலிடம்

    tamil.oneindia.com  vishnu-priya உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா முதலிடம்!.. அமெரிக்காவை முந்தியது! 

    வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.1 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் நாளுக்கு நாள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உலகளவில் கொரோனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.1 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 7.67 லட்சமாகும்.      இதுவரை கொரோனாவிலிருந்து 1.4 கோடி பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். அமெரிக்காவில் 55 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு நேற்று ஒரே நாளில் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53, 523 ஆகும்.

    இதுவரை 1.72 லட்சம் பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். பிரேசிலில் 33 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு நேற்று ஒரே நாளில் 38,937 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

    அங்கோடா லொக்கா: கடல் கடந்த போதைக் கழுகின் கதை!

    மின்னம்பலம் : கோவையில் கடந்த மாதம் மாரடைப்பால் இறந்துபோன பிரதீப் சிங் என்பவரைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தபோதுதான் தமிழக போலீஸாருக்கு, அந்த உடலுக்குப் பின்னால் ஒரு கடல் கடந்த கதை இருப்பதும், அந்த கதை குற்றங்கள் நிறைந்த கதை என்பதும் தெரியவந்தது.அங்கோடா லொக்கா: கடல் கடந்த போதைக் கழுகின் கதை!

    அங்கொடோ லொக்கா என்ற இலங்கை போலீஸாரால் தேடப்பட்டு வந்த பிரபல தாதாதான் இங்கே கோவையில் பிரதீப் சிங் என்ற வேறு ஒரு பெயருக்குள் புகுந்து போலி ஆதார் கார்டு வரை எடுத்து வாழ்ந்து வந்திருக்கிறார்.

    கடந்த ஜூலை முதல் கோவை விமான நிலையத்தில் இருந்து இரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அமைதியான ஏரியாவான கோய

    முத்தூர் பாலாஜி நகர் இப்போது பரபரப்பு நகராகியிருக்கிறது. அங்கோடா லோக்கா அல்லது பிரதீப் சிங் அல்லது மத்துமகே லசந்தா சந்தனா பெரேரா என்ற பெயர்களுக்கு சொந்தமான அந்த நபர் அந்த பகுதியில் உள்ள தோசைக் கடைக்கு அருகேதான் வசித்திருக்கிறார்.    

    "48 மணி நேரமாக எஸ்பிபி உடல்நிலை... சீராக உள்ளது .. மருத்துவர் சொல்வது என்ன?"

    மின்னம்பலம்  ; பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பிளாஸ்மா தெரபி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக எஸ்பிபிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம், கடந்த இரு நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வ ருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு, மருத்துவ உதவி வழங்க அரசு தயாராக இருப்பதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 15) அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை நேரில் சென்று பார்த்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எஸ்பிபியின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்.    பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாடகர் எஸ்பிபி பூரண நலம் பெற வேண்டும் என்பது முதலமைச்சரின் விருப்பம். எனவே மருத்துவமனைக்கு வந்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்தோம். எஸ்பிபிக்கு பிளாஸ்மா தெரபி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.