மின்னம்பலம் : வசந்தகுமார் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்
மக்கள் பிரதிநிதிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அமைச்சர்கள் செல்லூர் ராஜு, தங்கமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர்,
நிலோபர் கபில் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்
கொ
ரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்
தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழக
காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி மக்களவை
உறுப்பினருமான வசந்தகுமாருக்கும், அவரது மனைவிக்கும் கடந்த வாரம் கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால்,
வசந்தகுமார் வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும்
உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட்
21) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வசந்தகுமார்,
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு
அமைச்சர், “சுகாதாரத் துறை சார்பில் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில்
சென்று வசந்தகுமாரின் உடல்நிலை குறித்து அறிந்துவந்தோம். எஸ்.பி.பி
அனுமதிக்கப்பட்டுள்ள எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர்களோடு தொடர்பில்
இருக்கிறோம். இருவருமே கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறார்கள்” என்று
தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்
நல்லக்கண்ணுவுக்கு கொரோனா இல்லை. ஐந்து நாட்கள் ராஜீவ்காந்தி
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நல்லக்கண்ணு வீடு திரும்புவார். அவருக்கு
சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும் என்றும் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
எழில்
மிகவும் வருத்தம்
பதிலளிநீக்கு