செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

எஸ்.பி. பாலசுபிராமணியம் நெருக்கடியான நிலையில் தொடர்கிறார்: மருத்துவமனை அறிக்கை

hindutamil.in : எஸ்.பி.பி நெருக்கடியான நிலையில் தொடர்கிறார் என்று
மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 17) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்று பாதிப்பால் எங்களுடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடர்ந்து செயற்கை சுவாச உதவியோடு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். நெருக்கடியான நிலையில் தொடர்கிறார். அவருக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவ நிபுணர் குழு அவரது உடல்நிலையைக் கூர்ந்து கண்காணித்து வருகிறது இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக