சனி, 22 ஆகஸ்ட், 2020

சூரியா விளக்கம் : நடிகனாக இல்லாமல் தயாரிப்பாளராக எடுத்த முடிவு !!

வெப்துனியா : நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரக்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் இந்த படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் சூர்யாவும் உறுதிப்படுத்தியுள்ளார்  ஆனால், சூர்யாவின் முடிவால் திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையங்க உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதோடு திரைப்பட தொழிலை நம்பியுள்ள பலரும் பாதிக்கப்படுவார்கள் என திரையரங்க உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்." >இது குறித்து, சோதனை மிகுந்த காலக்கட்டத்தில் அனைத்து தரப்பினரின் நன்மைக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், சூரரைப் போற்று வெளியீட்டு தொகையில் இருந்து தேவை உள்ளவர்களுக்கு ரூ.5 கோடி பகிர்ந்து அளிக்கப்படும் என சூர்யா அறிக்கை மூலம் விளக்கமளித்துள்ளார்.  அவரது முழு அறிக்கை பின்வருமாறு... 

சூரரைப் போற்று வெளியீட்டு தொகையில் இருந்து தேவை உள்ளவ

ர்களுக்கு ரூ.5 கோடி பகிர்ந்து அளிக்கப்படும் என சூர்யா அறிக்கை..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக