வியாழன், 20 ஆகஸ்ட், 2020

ஊராட்சி மன்ற தலைவி சுதந்திர தின கொடியேற்றுவதை தடுத்த ஜாதி வெறியர்கள்

Maha Laxmi : · சுதந்திர தினத்தன்று ஊராட்சி மன்றத்தலைவரை கொடியேற்ற
விடாமல் தடுத்ததுடன்.. அதை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளரையும் சிறைப் பிடித்து வைக்கும் அளவுக்கு சாதிவெறியர்கள் ஆட்டம் போடுகிறார்கள்.. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் திருமதி அமிர்தம்.
சுதந்திர தினத்தன்று பட்டியல் இனத்தை சார்ந்தவர் என்பதால் ஊராட்சி மன்ற
பெண் தலைவருக்கு தேசியக் கொடியை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டது என்ற செய்தி நாளிதழில் வெளியானது.        இதைத் தொடர்ந்து இன்று (18-08-2020) செவ்வாய்க்கிழமை காலை புதியதலைமுறை தொலைக்காட்சி செய்தியாளர் எழில் ,ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஊராட்சி செயலாளர் சசிகுமார்
செய்தியாளரை தடுத்து நிறுத்தி மிரட்டியுள்ளார்.தொடர்ந்து அங்கு வந்த ஊராட்சி துணைத்தலைவரின் கணவர் விஜயகுமார் மற்றும் சிலர் செய்தியாளர் எழிலை தாக்கியதுடன் அலைபேசியை பறித்துக் கொண்டு ஊராட்சி அலுவலகத்தில் செய்தியாளரை சிறைவைத்துள்ளனர்.
காவல்துறைக்கு தகவல் தெரிந்து செய்தியாளர் மீட்கப்பட்டார்.
சுதந்திர தினத்தன்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவரை கொடியேற்ற விடாமல் தடுத்த குற்றச் செயலை புரிந்தவர்கள் *செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் எழில் மீது தாக்குதல் நடத்தியதையும் சிறை பிடித்த ஜனநாயக விரோத கொடுஞ்செயலையும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது*.

*திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் செய்தியாளர் எழிலை தாக்கி சிறைப்பிடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது*

பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
*சென்னை பத்திரிகையாளர் மன்றம்*
18-08-2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக