புதன், 19 ஆகஸ்ட், 2020
அமெரிக்காவை முந்திய தமிழ்நாடு Tamilnadu GER - 49 ! USA - 41 ! . India - 26 !
செந்தில் வடிவேல் :
பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற வங்கத்தின் அமர்த்தியா சென் அவர்கள் திராவிட ஆட்சியினை கொண்டாடி தீர்த்தார் என்ற செய்தி.நாம் அறிந்ததே. தமிழ் நாட்டின் வளர்ச்சியினை பிற மாநிலங்களுடன் ஒப்பிட முடியாது. வளர்ந்த நாடுகளுடன் மட்டுமே ஒப்பிட முடியும் என்றும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் திக வோ திமுக வோ அல்ல. நமது மாநிலத்தை சேர்ந்தவரும் அல்ல. ஆனாலும்
தெளிவாக திறனாய்வு செய்து எழுதியிருக்கிறார். தமிழ் நாட்டின் வளர்ச்சி சில
வளர்ந்த ஐரோப்பிய நாடுகளை விடவும் அதிகம் என்பது பழைய செய்தி. ஆனால் GERல்
நாம் அமெரிக்காவை விடவும் முன்னேறியவர்கள் என்பது புதிய செய்தி.
ஏற்கெனவே கல்வியில் உச்சத்தில் இருக்கும் நம்மை லீழ்த்துவதற்கு தான்
முதலில் நீட் வந்தது. இப்போது புதிய கல்வி கொள்கை எனும் குலக் கல்வி
வருகிறது. இதையும் மும்மொழி மோசடியையும் நாம் ஏற்றால் சோமாலியா
எத்தியோப்பியாவை விட பின்னோக்கி செல்வோம் என்பது உறுதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக