ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

கொரோனா பாதிப்பு ... உலக அளவில் இந்திய முதலிடம்

tamil.oneindia.com  vishnu-priya உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா முதலிடம்!.. அமெரிக்காவை முந்தியது! 

வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.1 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் நாளுக்கு நாள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உலகளவில் கொரோனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.1 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 7.67 லட்சமாகும்.      இதுவரை கொரோனாவிலிருந்து 1.4 கோடி பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். அமெரிக்காவில் 55 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு நேற்று ஒரே நாளில் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53, 523 ஆகும்.

இதுவரை 1.72 லட்சம் பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். பிரேசிலில் 33 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு நேற்று ஒரே நாளில் 38,937 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

இதுவரை 1.07 லட்சம் பேர் பலியாகிவிட்டனர்.கொரோனா.. இந்தியாவில் 50 ஆயிரத்தை கடந்த பலி எண்னிக்கை.. 24 மணி நேரத்தில் 951 பேர் பலி! இந்தியாவில் 25 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு ஒரே நாளில் 63,986 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா 24 மணி நேரத்தில் கொரோனா அதிகம் பாதித்தோரின் எண்ணிக்கையில் இந்தியாவில்தான் அதிகம். இதுவரை 50,084 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர்.ரஷ்யாவில் 9.17 லட்சம் பேரும், தென்னாப்பிரிக்காவில் 5.83 லட்சம் பேரும், பெருவில் 5.16 லட்சம் பேரும், மெக்சிக்கோவில் 5.11 லட்சம் பேரும், கொலம்பியாவில் 4.56 லட்சம் பேரும், சிலியில் 3.83 லட்சம் பேரும், ஸ்பெயினில் 3.58 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.&

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக