செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

இந்தியாவை கொள்ளை அடிக்கும் குஜராத்தின் வண்டவாளம் ...

Ksb Boobathi : குஜராத் தான் ஒட்டுமொத்த அறிவாளிகள் வாழும் மாநிலம்.
கிருஷ்ணரும் அர்ஜுனனும் இந்த மாநிலத்தில்தான் பிறந்தார்கள்.    நான் சொல்வது புரியவில்லை என்றால் நீங்கள் ஒரு தங்கிலீஷ் காரர். குஜராத்துக்கு நிறைய பெருமைகள் உண்டு அதில் சிலவற்றை மட்டும் நாம் காண்போம். மொத்தம் உள்ள 32,772 பள்ளிகளில்... கிட்டத்தட்ட 12000 பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டும் உள்ளனர்.     இதில் 15 ஆயிரம் பள்ளிகளில் 100 கீழ் மாணவர்கள் மட்டுமே உள்ளனர்...     8673 பள்ளிகளிலும் 50க்கும் கீழே மாணவர்கள் உள்ளனர். 30% குஜராத் பள்ளி மாணவர்களுக்கு அதாவது ஆறில் இருந்து எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிக்கவும் எழுதவும் தெரியாது.

மொத்தம் 63 பள்ளிகளில் இருந்து ஒரு மாணவர் கூட குஜராத்தி மொழியில் பாஸ் ஆகவில்லை.

குஜராத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சதவீதம் 66.97% .... இதே இந்தி படிக்காத பின்தங்கிய மாநிலமான தமிழகத்தில் 95.2%.

இது எல்லாமே நான் சொல்லவில்லை, குஜராத் எஜுகேஷன் டிபார்ட்மென்ட் எடுத்த சர்வேயில் வெளியான தகவல்கள்.

ஒரே ஒரு செல்லூர் ராஜுவை வைத்து கொண்டு பீற்றிக்கொள்ளும் தமிழினமே....

குஜராத்தில் எல்லாம் அமைச்சர்களும் செல்லூர் ராஜுவின் அறிவைப் பெற்றவர்கள்.

பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கல்வித்துறை அமைச்சர் பூந்திராசிங் சுடசமா என்ன சொன்னார் தெரியுமா..... 

ஒவ்வொரு பள்ளியும் பக்கத்திலிருக்கும் பள்ளிகளோடு இணைத்துக்கொள்ள வேண்டும் அதாவது Merge பண்ண வேண்டும்.

இந்த வழியை பின்பற்றினால் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்று சொன்னார்.

இதே வழிமுறையை அவருக்கே தெரியாமல் வங்கி இணைப்பில் பயன்படுத்தி விட்டார்கள்.

அங்கு வாழும் மக்களை பற்றி சொல்ல வேண்டுமென்றால் குஜராத்தில் பேசும் மொழி குஜராத்தி, அந்த மொழி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிறது. இப்போது வெறும் கிராமங்களில் மட்டும் தான் குஜராத்தி பேசப்படுகிறது மற்றபடி நகர்ப்புறங்களில் இந்திதான் பிரதானம்.

சமூக கட்டமைப்பை பொருத்தவரை படேல், மார்வரி, மோடி, காமிட், பனியா, இனமக்களும் அதிகம். ஆமாம் மோடி என்பது அங்கு ஒரு இனம்.

படேல் இன மக்களும் மார்வாரி இனமக்களும் செல்வம் படைத்தவர்கள். நம்ம ஊர் செட்டியார்கள் போல அவர்களுடைய வீடும் ஒரு தெருவில் ஆரம்பித்து மறு தெருவில் முடியும்.

படேல் மற்றும் மோடி இனமும் அரசியலில் வியாபித்து இருக்கிறார்கள்... இவர்களை ஆட்டி வைப்பது மார்வாரிகள்.

தொழிலைப் பொறுத்தவரை வெறும் விவசாயம் ... ஒரு சில தொழிற்சாலைகள் தவிர பெரிதாக வேறொன்றுமில்லை.

கணினித்துறையில் ஒன்றுமே இல்லை...இயற்கையால் கிடைக்கிற வைரம் மட்டும்தான் அம்மாநிலத்தின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துகிறது.

ஏழு கோடி மக்கள் வாழும் இம்மாநிலத்தில் மொத்தமே 21 அணைகள்… 105 ஏரிகள் உள்ளன இதுவே தமிழ்நாட்டில் 116 அணைகள் 187 ஏரிகள் உள்ளன.

மிகவும் முன்னேறிய மாநிலம் என்று சொல்லப்படுகிற குஜராத்தில் மொத்தம் ஆறு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன இதே பின்தங்கிய மாநிலமான தமிழகத்தில் 48 மருத்துவ கல்லூரிகள் உள்ளன.

நாட்டிலேயே அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ள மாநிலம் இந்த பின்தங்கிய தமிழகம் மற்றும் தான்.

பூரண மதுவிலக்கு இம்மாநிலத்தில் இருந்தாலும் கள்ளசாராயம் எங்கும் கிடைக்கிறது, நகர்ப்புறங்களில் போன் செய்தால் ஒரு மணி நேரத்தில் உங்க வீட்டிற்கு தேடி வரும்...பாரின் சரக்கு.

சுத்திகரிக்கப்பட்ட வைரம் அதாவது processed diamond.. 72% உலகளவில் இங்குதான் கிடைக்கிறது.

மகாராஷ்டிரா விற்கு அடுத்தபடியாக குஜராத் தான் அதிக துறைமுகங்களை கொண்டது... மகாராஷ்டிரா 52, குஜராத் 40.

என்னதான் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருந்தாலும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் சதவீதம் 16.42%.

நாம் 7.2% ...

முதலிடத்தில் இருப்பது கோவா 5.09%.

இன்னும் நிறைய Special ஐட்டம் இருக்கு….

குஜராத் பற்றிய மேலும் அரிய தகவல் இதோ….

* இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவியை கொல்வது இந்த மாநிலத்தில் தான் அதிகம்.

* இன்சூரன்ஸ் பணத்திற்காக அதிகமாக போலி டெத் சர்டிபிகேட் கொடுப்பது இங்குதான்.

* ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேற்கொள்ளாமல் அங்கு சிகிச்சை மேற்கொண்டதாக போலி ரசீதுகளை கொடுப்பது.

* ஒரு ஆபரேஷன் செய்து விட்டு 10 இன்சூரன்ஸ் கம்பெனியில் கிளைம் வாங்குவது.

* இந்திய பிரதமரின் கனவு திட்டமான Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana என்ற திட்டத்தின் கீழ் அதிகமான முறைகேடுகள் நடந்தது குஜராத் மாநிலத்தில் தான்.

* இந்தியாவில் மற்ற மாநிலங்களில் 60 லிருந்து 70% இருக்க குஜராத் மற்றும் 130 இல் இருந்து 140 சதவீதம் இழப்பீடு கோரப்பட்டுள்ளது.

* மற்ற மாநிலங்களை விட குஜராத்தில் இன்ஷூரன்ஸ் பிரீமியம் தொகை 20 லிருந்து 25 சதவீதம் அதிகம்.

* நாடு முழுக்க 170 மருத்துவமனைகள் பிளாக் லிஸ்ட் பண்ணப்பட்டு உள்ளது, அதில் 70 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் குஜராத்தில் தான் உள்ளன.

*நாட்டை விட்டு ஓடிய கோடீஸ்வரர்களில் பாதிக்கு பாதிப்பேர் குஜராத்தை சார்ந்தவர்கள் தான்.

இதை நான் சொல்லவில்லை...

சொன்னவர்...

Jagvinder Brar, Partner, Forensic Services, KPMG.

மகா மட்டமான முறையில் இழப்பீடு கோறுவது குஜராத் மாநிலம் தான்..

சொன்னவர்

Nikhil Apte, Chief Product Officer, Royal Sundaram General Insurance.

குஜராத் மாடல் (Gujarat Model):

இந்திய ஒன்றியத்தை படுகுழியில் தள்ளிய 2014ன் பிரச்சார வார்த்தை.

குஜராத்தில் தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்கூடங்கள் அதிகம் உள்ளது என்பது உண்மைதான்.

ஆனால், இந்திய மக்களை ஏமாற்றியது போன்று, அந்த தொழிற்சாலைகள் எல்லாம் திரு. நரேந்திர தாமோதரதாஸ் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்டவைகளா என்றால்.... அதுதான் இல்லை.

பார்சி இனத்தவர்கள் அதிகம் உள்ள குஜராத் மக்கள், அடிப்படையில் ஒரு தொழில் முனைவு (Entrepreneur) சிந்தனை உள்ளவர்கள்.

அவர்களின் தொழிற் சிந்தனைகளுக்கு வலு சேர்க்கும் விதமாக, 1952 முதல் இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி.

டெல்லி - அகமதாபாத் - பரோடா - சூரத் - மும்பை பகுதி மட்டுமே இந்தியா என்று, ஒன்றியத்தின் முழு முதலீட்டையும் இந்த பகுதிகளிலேயே செலவழித்தது.

மேலும் ஐரோப்பாவை இணைக்கும் கப்பல் துறைமுகம் அமைந்த மேற்கு கடற்கரைப் பகுதிகளில் மும்பை மற்றும் குஜராத் அமைந்தது மற்றும் ஒரு Advantage.

Industrial corridor, Electric, Double Track Rail route, Expressway, Exclusive Freight Corridor, சமீபத்தில் அறிவித்த Bullet Train என்று எதுவாக இருந்தாலும், அது

டெல்லி - அகமதாபாத் - பரோடா - சூரத் - மும்பை பகுதியில்தான் முதலில் ஏற்படுத்த படும்.

இப்படி குஜராத்தில் Textile, Pharmaceutical, Medical Surgicals companies எல்லாம் காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே அதாவது 1990க்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டன.

தலைமைச்செயலக நகரமான காந்தி நகர் உருவாக்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சி காலத்தில்.

நர்மதா அணை போன்ற பெரிய அணைகள் உருவாக்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சி காலத்தில்.

துறைமுகங்கள், விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சி காலத்தில்.

அப்படி என்றால், நமது குஜராத் மாடல் நாயகன் என்ன செய்தார்!!!

இப்பொழுது டெல்லியில் என்ன செய்கிறாரோ, அதையேதான் அங்கேயும் செய்தார்.

கடைசியில் ஒட்டு மொத்த இந்திய ஒன்றியமும் உத்திரப்பிரதேசமாக மாறும் காலம் விரைவில்.

இதைத்தான் நம்மால் செரிமானித்துக் கொள்ள முடியவில்லை.

Mallika Thangaraaj

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக