செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

தங்கம் விலை அண்மையில் குறையும் வாய்ப்பில்லை ... Karthikeyan Fastura

Karthikeyan Fastura : 2018 ஏப்ரலில் 2.27 ட்ரில்லியன் அளவிற்கு சந்தை மதிப்பு கொண்ட NSE Stock Exchange, இந்த வருடம் மார்ச் 31ந்தேதியில் 1.463 ட்ரில்லியன்க்கு குறைந்துள்ளது. 800 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 60 லட்சம் கோடிகள்) அளவிற்கு இந்திய பங்குச்சந்தையின் மதிப்பு குறைந்துள்ளது. இந்த வேகத்தில் சரிந்தால் இன்னும் ஓராண்டு காலத்தில் ட்ரில்லியன் டாலர் பங்குசந்தை என்ற அடையாளத்தை இழக்ககூடும். இரண்டாண்டுகளில் இந்த 60 லட்சம் கோடிகள் எங்கே போனது என்றால் அது தன் மதிப்பை இழந்திருக்கிறது. FII எடுத்துக்கொண்டு விலகியது 10% தான் இருக்கும். மீதி 90% என்பது சந்தையின் மதிப்பு இழந்துள்ளது அவ்வளவே.

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு நிலத்தை 1 கோடி ரூபாய்க்கு வாங்குகிறீர்கள். திடிரென்று அந்த நிலத்தின் அருகே உயிருக்கு ஆபத்தான ஒரு தொழில்சாலை வருகிறது. அங்கே யாரும் நிலம் வாங்க தயாராக இல்லை. இப்போது நீங்கள் அந்த நிலத்தை 50 லட்சத்திற்கு விற்க முடிவு செய்கிறீர்கள். மீதி 50 லட்சம் எங்கே போனது? மதிப்பு குறைந்து போனது அவ்வளவே.

இதே தான் கரன்சியிலும் நடக்கும். ரஸ்யா, இந்தோனேசியா, வியட்நாம், ஈரான், ஈராக் இங்கெல்லாம் பணமதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் விழவில்லை. சமூக, அரசியல் பொருளாதார காரணங்களால் சட்டென்று விழுந்தது.

பொருளாதாரம் வீழும் போதெல்லாம் தங்கள் நாட்டின் பணமதிப்பு விழுந்துவிடக் கூடாது என்று
தங்கத்தை பெரிய நாடுகள் சேர்த்துவைப்பது அதனால் தான்.

தங்கம் இப்போதைக்கு குறையப்போவதில்லை. பொருளாதாரம் மந்தநிலையில் இருந்து மீண்டு வந்து சரியாகும் வரை இது தான் நிலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக