“நீ
என்ன லாயர் மயிரு”; “வெளிநாட்டுலயா இருக்குறா”: பேண்ட் சட்டைப் போட்ட
முகநூல் தமிழ் கலாச்சார காவலர்கள் இந்த உடைக்கு சொல்லும் கமெண்ட்!
கிருபா முனுசாமி உச்சநீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். இவர் தன்னுடைய
முகநூலில் ஒரு புதிய படத்தைப் பகிர்கிறார். அந்தப் படத்தை முகப்பில்
தந்திருக்கிறோம். இந்த படத்தில் தமிழ் கலாச்சாரத்துக்கு விரோதமாக உடை
(தமிழ் கலாச்சார உடை எது? ரவிக்கை அணியாமல் நீளமான புடவையை உடலில் சுற்றிக்
கொள்வது இப்படித்தான் பண்டைய தமிழர்கள் உடையணிந்தனர். இதுதான் இவர்கள்
குறிப்பிடும் தமிழ் கலாச்சார உடையா?) அணிந்தார் என்பதற்காக கிருபாவுக்கு
அறிவுரை வழங்குகிறார் ஒருவர். அவர் அறிவுரை குறித்து கேள்வி எழுப்பும்
கிருபாவை அத்துமீறி எழுதுக்கிறார் இன்னொருவர்.கிருபா முனுசாமி
இன்று நான் மாற்றிய சுயவிவர படம் குறித்து என் உள்பெட்டிக்கு ஒரு தமிழ் கலாச்சார பாதுகாவலர் அனுப்பிய செய்தி.