வியாழன், 28 ஏப்ரல், 2016

கோவில்பட்டியில் வைகோ போட்டியிடமாட்டார் என்பது மதிமுககாரர்களுக்கு ஏற்கனவே தெரியுமாம்

நக்கீரன்:  ஹலோ தலைவரே, பதவியைத் தக்கவச்சே ஆகணும்ன்னு நினைக்கிற இந்நாள் முதல்வர் ஜெ.வும், அடுத்த முதல்வராகணும்னு களமிறங்கியுள்ள முன்னாள் முதல்வர் கலைஞரும், ஒரேநாள்ல அவங்கவங்க தொகுதிகள்ல வேட்புமனுவைத் தாக்கல் பண்ணியதைப் பார்த்தீங்களா?''’ ""பார்த்தேன். சொத்துக் கணக்கையும் சுவாரஸ்யமாக் கொடுத்திருக்காங்களே?''’ ""ஆமா, போயஸ்கார்டனில் இருந்து ஆர்.கே.நகர் வரை, வழிநெடுக ர.ர.க்களின் அமர்க்களமான வரவேற்புகளை ஏற்றபடியே போய், வேட்பு மனுவைத் தாக்கல் பண்ணினாரு ஜெ. இதேபோல், திருவாரூருக்குப் போன கலைஞர், சன்ன தித் தெருவில் இருக்கும் தனது அக்கா வீட்டில் இருந்து கிளம்பி, அடுத்த தெருவில் இருக்கும் கோட்டாட்சியர் அலுவலகத்தில், தன் வேட்பு மனுவைத் தாக்கல் பண்ணினாரு. அப்ப, ஏராளமான மக்கள் திரண்டு வந்து கலைஞரை உற்சாகப்படுத்தினாங்க.

வேட்பு மனுவில் இந்த ரெண்டு தலைவர்களுமே தங்கள் சொத்துக் கணக்கை குறிப்பிட்டிருந்தாங்க.'' ""அந்த விவரத்தை சொல்லுப்பா.''… ""2011-ல் வெறும் 64 கோடியா இருந்த தன் சொத்து மதிப்பை, இப்ப 118.58 கோடியா ஜெ.’ குறிப்பிட்டிருக்காங்க. கடந்த 5 வருசத்தில் ஏறத்தாழ இரு மடங்கா உயர்ந்திருக்கு. அதேபோல் கலைஞர் 2011-ல் தன் சொத்து மதிப்பா 13.42 கோடின்னு குறிப் பிட்டிருந்தாரு. இப்ப தன் னோட சொத்து மதிப்பு 18.84 கோடின்னு அவர் குறிப் பிட்டிருக்காரு. ஏறத்தாழ 5 கோடி அதிகரிச்சிருக்கு. இதில் கலைஞரின் துணைவி ராசாத்தி யம்மாள் பெயரில் 11.94 கோடி கடன் இருக்காம். இதில் ராசாத்தி, தன் மகளான கனிமொழியிடம் 1.17 கோடி ரூபாய், பற்றில்லாக் கடனா வாங்கியிருக் காராம். கலைஞருக்கு சொந்தமா கார் இல்லைங்கிறது உபரி தகவல்.

ஜெ.வும் கலைஞ ரும் தங்கள் உறுதிமொழிப் பத்திரத்துக்கான ஸ்டாம்ப் பேப்பரை, மயிலாப்பூரில் இருக்கும் ரவூப்பாஷா என்பவரிடமே வாங்கியிருக்காங்க. அதில், ஜெ.’ ஆங்கிலத்திலும், கலைஞர் தமிழிலும் உறுதிமொழியை டைப் அடிச்சி, வேட்புமனுவுடன் தாக்கல் செய்திருக்காங்க.''’ ""ஜெ. தாக்கல் செய்த அன்னைக்கு மற்ற அ.தி.மு.க. வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யலையே?''’ ""தான் வேட்புமனு தாக்கல் செய்த 25-ந் தேதியே மற்ற அ.தி.மு.க. வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்தால், தன்னோட மனுவுக்கு இந்தளவு முக்கியத்துவம் கிடைக்காதுன்னுதான், அ.தி.மு.க. வேட்பாளர்கள் எல்லோரும் 28-ந் தேதி, ஒரே நாள்ல வேட்புமனுவைத் தாக்கல் பண்ணணும்ன்னு ஜெ. உத்தரவு போட்டார்.

அ.தி.மு.க வேட்பாளர்களைப் பொறுத்தவரை வேட்புமனு தாக்கல் தள்ளிப்போகும்போது, வேட்பாளர் மாற்றம் ஏற்படுமோங்கிற பயத்திலே இருக்காங்க.''’ ""ஜெ.’ முதல்வரா இருக்கும் போது, தேர்தல்ல ஜெயிச்சி, சட்டசபையில் காலெடுத்து வச்ச பிறகுதான் கல்யாணமே பண்ணிக்குவேன்னு சபதம் போட்டிருந்த கும்பகோணம் ராமநாதனை, வேட்பாளர் பட்டியலில் இருந்து கார்டன் தூக்கிடுச்சே?''’ ""பாவம். அப்படியொரு சபதத்தை போட்டுவிட்டு அல்லாடுறார் ராமநாதன். போன முறை வாய்ப்பு கொடுத்தப்பவும் அவரால் ஜெயிக்க முடியல. இந்த முறையும் டஃப்பா இருக்கும்ங்கிறதால அவருக்கு பதிலா ரதிமீனா டிராவல்ஸ் உரிமையாளரும், குடந்தை நகர சேர்மனுமான ரத்னா சேகரை வேட்பாளரா அறிவிச்சி, ராமநாதனின் கல்யாணக் கனவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒத்தி வச்சிருக்கு கார்டன். அதுக்குப் பிறகாவது சீட் கிடைத்து, நமக்கு கல்யாணம் ஆகுமான்னு இப்பவே 52 வயதைத் தொட்டுவிட்ட ராமநாதன் பரிதவிக்கிறாரு.

தஞ்சை மண்டல அ.தி.மு.க.வினரோ புது வேட்பாளர் அறிவிப்பு தொடர்பா ஒரு தகவல் சொல்றாங்க.'' ""என்ன தகவல்?'' ""ஒரு காலத்தில் சசியின் தம்பி திவாகரனோடு ஒத்து போகாததால், அரசியலில் இறங்குமுகம் கண்ட வேதாரண்யம் ஓ.எஸ்.மணியன், மன்னார்குடி எஸ்.காமராஜ், கும்பகோணம் ரத்னா சேகர் ஆகியோரின் பெயரெல்லாம் அதே சசி தரப்பால், இப்போ ஞானஸ்நானம் செய்யப்பட்டு, வேட்பாளர் பட்டியலுக்கு வந்துவிட்டது. இப்ப கட்சிக்குள் மன்னார்குடி தரப்பு படுசெல்வாக்கா இருப்பதை கட்சிக் காரர்கள் சுட்டிக்காட்டுறாங்க. இன்னும் வேட் பாளர் மாற்றம் இருக்கும்ன்னு பேச்சு அடிபடுவதால், வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான 29-ந் தேதிவரை இலைத்தரப்பு வேட்பாளர்களுக்கு பதட்டம்தான்.

''’’ ""தேர்தல் கள நிலவரம் எப்படி இருக்கு?''’ ""தேர்தல் தேதி நெருங்க நெருங்க, பலமுனைப் போட்டி என்பது இருமுனைப் போட்டியா பல தொகுதிகளிலும் கூர்மை அடைஞ்சிருக்கு. தி.மு.க. சைடில் பார்த்தா, தேர்தல் அறிக்கை வெளியீடு, கலைஞர், ஸ்டாலின் பிரச்சாரம், வேட்புமனுத் தாக்கல் போன்ற வைபவங்களுக்குப் பிறகு, புதுவேகம் தெரியுது. வாக்கு சேகரிப்பிலும் மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு தெரியுது. இருந்தும் இன்னும் பல இடங்களில், கட்சி நிர்வாகிகள் செய்யும் உள்ளடி வேலைகளும், ஒத்துழையாமையும் எப்ப சரியாகும் என்ற யோசனை தொண்டர்கள் மத்தியில் இருக்கு. அதை சரி பண்ணி, கட்சிக்காரர்களை ஒருங் கிணைச்சி, மற்ற விஷயங்களையும் கவனிச்சா, தெம்பா இருக்கலாம்ன்னு தி.மு.க..வினரிடமே பேச்சு இருக்கு.''

""அ.தி.மு.க?'' ""அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, ஆட்சி பலத்தோட, பாக்கெட் வெயிட்டும் தங்களிடம் இருப்பதால், எளிதா வெற்றியை அறுவடை பண்ணிடலாம்ன்னு ஆரம்பத்தில் நினைச்சாங்க. ஜெ.வின் தேர்தல் பிரச்சாரம் ஸ்டார்ட் ஆனதி லிருந்து, எதிர்பார்த்த வேகமும் விறுவிறுப்பும் அ.தி.மு.க. தரப்பிடம் இல்லை. ஏன்னா பிரச்சார சாவுகள், வெய்யில் நேர மயக்கங்கள், மூச்சுத் திணறலுடன் அடைந்த காயங்கள், பிரச்சாரக் கூட்டங்களில் இரட்டை மேடை இதெல்லாம் கட்சிக்காரர்கள் மத்தியிலேயே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கு.

இதுபற்றி அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு இருப்பதையும் நக்கீரனில் குறிப்பிட்டிருந்தோம். இதையெல்லாம் தெரிஞ்சிக் கிட்ட கார்டன், திகைச்சுப் போயிருக்கு. அதன் எதிரொலியாத்தான் புதுச்சேரி பிரச்சாரக் கூட்டத்தில், ஜெ.வின் மேடையிலேயே வேட்பாளர் களுக்கும் இடம் கொடுக்கப்பட்டது.

செவ்வாய்க் கிழமை இரவுவரை தேர்தல் அறிக்கை ரெடியாகாத தையும், தங்கள் தரப்புக்கான பின்னடைவா ர.ர.க்கள் பார்க்கிறாங்க. தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தரப்பின் பணப் பதுக்கல்- விநியோக விவகாரங்கள் மீடியாக்களில் வர்றதையும் தடுக்கமுடியலை. பெரும்பாலான தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு எதிரான சூறாவளி பலமா வீசிக்கிட்டி ருக்கு. அதனால், புதிய வியூகங்களை வகுத்து, அதன்படி, பிரச்சார உத்திகளில் மாற்றத்தையும், தேர்தல் அறிக்கையில் கவர்ச்சிகர அறிவிப்புகளையும் கடைசி கட்ட பட்டுவாடாவையும் சரியா செஞ்சா கரையேறிடலாம்ன்னு, கார்டன் சில கூட்டல் கழித்தல்களை போட்டுக் கிட்டிருக்கு.

''’ ""தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய ரெண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றா அமைக்கப்பட்டிருக்கும் ’தே.மு.தி.க. - ம.ந.கூ- த.மா.கா’ அணியில் என்ன நடக்குது?''’

 ""ஜாதிக் கலவர சதி நடக்குதுன்னு சொல்லி, கோவில்பட்டியில் போட்டியிடும் தனது முடிவை வாபஸ் வாங்கிய வைகோ, தனக்குப் பதிலா, தனது கட்சியின் டம்மி வேட்பாளரான விநாயகா ரமேஷையே வேட்பாளரா நிறுத்திட்டாரு. இது அந்தக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கு. ஏன்னா, அது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதி. நான் நிக்கிறேன். எனக்காக கோவில்பட்டியை விட்டுக் கொடுங்கன்னு பிடிவாதமா, தொகுதியை வாங்கி யிருந்தாரு வைகோ. ஆனா தன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாரிடமும் ஆலோசிக்காமல், அவரே திடுதிப்பென மாற்று வேட்பாளரை அறிவிச்சதை கம்யூனிஸ்ட்டுகள் உள்பட கூட்டணியில் உள்ள தலைவர்கள் யாரும் ரசிக்கலை.

ஆனால் ம.தி.மு.க. நிர்வாகிகளுக்கு மட்டும் இப்படி நடக்கும்ன்னு முன்பே தெரியுமாம். காரணம் வைகோ, விநாயகா ரமேஷை மனதில் வைத்துதான் அந்தத் தொகுதியையே வாங்கினாராம்.'

' ""இப்படி ஒரு வியூகமா?'' ""டம்மி வேட்பாளர்னு வெளியே சொல்லப் பட்ட விநாயகா ரமேஷும் நேரடி வேட்பாளரா வேட்புமனு தாக்கலுக்கு ரெடியாகத்தான் போயிருக்காரு. வைகோவும் விநாயகா ரமேஷுக் கான டெபாஸிட் தொகையை தன் சட்டைப் பையில் இருந்து எடுத்துக்கொடுத்தாரு.

இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்ட கூட்டணியின் சக தலைவர்கள், சரி, அடம்பிடிச்சி தொகுதியை வாங்கின பிறகு, நாம என்ன திருப்பிக் கேட்கவா போறோம்?
இதுக்காக ஜாதிக் கலவரம்ன்னும், தி.மு.க தூண்டிவிடுதுன்னும் அவர் எதுக்கு, இல்லாத பிரச்சினையைக் கொளுத்திவிடறாருன்னு ஆதங்கப்படறாங்க. பல தொகுதிகளிலும் கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு கட்சியும் ஆளுக்கொரு பக்கம் இழுப்பதால், ஆரம்பத்தில் இருந்த வேகம் மிஸ்சானதில், இப்ப திணறிக் கிட்டிருக்காங்க.''’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக