வியாழன், 28 ஏப்ரல், 2016

தி.மு.க.,வை விரட்டி அடியுங்கள்: ஜெ., ஆவேசம்

மதுரை: "ஓட்டு கேட்க வரும் தி.மு.க.,வினரை விரட்டி அடியுங்கள். 2011 ல் தி.மு.க., கூட்டணிக்கு கொடுத்த அடியை விட இந்த முறை பலமான சம்மட்டி அடி கொடுங்கள்" என மதுரையில் நடந்த அ.தி.மு.க., தேர்தல் பிரசாரத்தில் ஜெ., ஆவேசத்துடன் பேசினார்.மதுரை, தேனி, திண்டுக்கல், துாத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த 47 தொகுதிகளில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி மதுரையில்
ஜெயலலிதா இன்று தேர்தல் பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தில் அவர் பேசியதாவது:
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த அ.தி.மு.க., அரசு அயராது முயற்சி எடுத்து வருகிறது. மத்தியில் காங்கிரசுடன் கைகோர்த்து 2006 முதல் 2011 தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதி முல்லை பெரியாறு பிரச்சனையை மறந்துவிட்டார். முல்லை பெரியாறு நீரை நம்பி வாழும் விவசாயிகளுக்கு கருணாநிதி துரோகம் இழைத்து விட்டார்.     அதிமுக மேடை ஒரு அடிமை பயிற்சி முகாம்!  நவீன தீண்டாமை .....? வேட்பாளர்களே இந்த அம்மாவை நெருங்க முடியவில்லை, சரத்து மட்டும் கெஞ்சி கூத்தாடி கருப்பு கண்ணாடி போட்டிருக்காக. இந்த லட்சணத்தில்  மக்கள் எப்படி நெருங்க முடியும். பூலான்தேவியை தான் மக்கள் விரட்டி அடிக்கப்போகிறார்கள் . இவர்கள் கட்சி நடத்தவில்லை 45% கமிசன் கம்பனி தான் நடத்துகிறார்கள்.

நான் 2011ல் ஆட்சி பொறுப்பேற்ற பின் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு 142 அடி வரை நீரை தேக்கலாம் என்ற தீர்ப்பை எனது அரசு பெற்று தந்தது.
தி.மு.க., வின் தற்போதைய தேர்தல் அறிக்கையில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகவே 142 அடியில் தான் நீர்தேக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் கூட தி.மு.க.விற்கு தெரியாதா?
ஜல்லிகட்டு நடைபெறாமல் தடை ஏற்பட்டதற்கு தி.மு.க.வும் காங்கிரசும் தான் காரணம்.
மதுரை மாவட்டத்தில் கிரைனைட் கடத்திலின் மூலம் அரசுக்கு 16,000 கோடிக்கும் அதிகமாக
வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில் தான் கிரானைட் முறைகேடு நடந்தது. அப்போது கிரானைட் கொள்ளையர்கள் மீது எந்த நடவடிக்கையும் கருணாநிதி தலைமையிலான தி.மு.க., அரசு எடுக்கவில்லை.
கருணாநிதி தன்னலம் என்றால் தமிழகத்தை அடகு வைப்பார். பொதுநலம் என்றால் பொறுமை காப்பார். ஆனால், எனது ஆட்சியில் 2012லிருந்து கிரானைட் வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஓட்டு கேட்க வரும் தி.மு.க.,வினரை விரட்டி அடியுங்கள். 2011 ல் தி.மு.க., கூட்டணிக்கு கொடுத்த அடியை விட இந்த முறை பலமான சம்மட்டி அடி கொடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்   dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக