வியாழன், 28 ஏப்ரல், 2016

பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் ஏன் வெடித்தது ? சொத்து குவிப்பு ரிலீஸ் +அதிக சீட்+ இந்து வாக்குவங்கி பறிப்பு...

""தேசியக் கட்சியான பா.ஜ.க.வில் என்ன வியூகங்கள் இருக்கு?'' ""வியூகத்தைவிட கோபம்தான் அதிகமா இருக்குது. பா.ஜ.க.வின் ஒட்டுமொத்த கோபமும் இப்ப அ.தி.மு.க. பக்கம்தான் குவிஞ்சிருக்கு. கூட்டணி ஆசையில் டெல்லித் தலைமை எவ்வளவோ இறங்கிவந்தும், கார்டன் அசைஞ்சி கொடுக்காததில் அவங்களுக்குக் கடுப்பான கடுப்பாம். சொத்துக்குவிப்பு வழக்கைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல், பிரதமரே கார்டனைத் தேடிப்போய் கை குலுக்கினாரு. சட்ட மந்திரியான அருண்ஜெட்லியும், விமர்சனங்களைப் பத்திக்கூட யோசிக்காமல் கார்டன்ல விருந்து சாப்பிட்டுட்டு வந்தாரு. அப்படி இருந்தும் 234-லும் இரட்டை இலைதான்னு கார்டன் பிடிவாதமா இருந்ததை தாமரைத் தலைமை ரசிக்கலை. ஏன் இப்படி பிடிவாதமா இருக்காங்கன்னு தமிழகத் தரப்பில் டெல்லி விசாரிச்சிது. இரண்டு நரிகள் ஒற்றுமையா இருப்பது கஷ்டம்தான்

இது தொடர்பா ஏப்ரல் முதல்வாரம், மோடியும் அமித்ஷாவும் கூட விவாதிச்சாங்க. அப்ப, எம்.பி. தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் துணையோடு பட்டுவாடாவை எல்லாம் பாதுகாப்பா நடத்தி, வெற்றி பெற்றாங்க. அமைதியா இருந்துட்டோம்.

ஜனநாயகத்தில், இப்படி ஒரு விஷயத்தை இனியும் நாம அனுமதிச்சிக்கிட்டே அமைதியா இருக்கக் கூடாதுன்னு பேசியிருக்காங்க.

'' ""ஓ''… ""அ.தி.மு.க மேலே தேர்தல் கமிஷனுக்கு புகார் மேல புகார்கள் வருதுன்னு தமிழக பா.ஜ.க.வினர் டெல்லிக்குத் தெரிவிக்க, இதன் அடிப்படையில் தமிழக மந்திரிகள், அவர்களின் பினாமிகள், சசி ஆட்கள்ன்னு மத்திய நிதி அமைச்சகம் கூர்மையா கவனிச்சி, பிரதமர் அலுவலகத்துக்கு சில தகவல்களைக் கொடுத்தது. இதையடுத்து, 300 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாங்க. அவங்க எல்லா விபரங்களை யும் திரட்டியிருக்காங்க.

அதன்பிறகே தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கண்காணிப்போடு, வருமான வரித்துறை அதிகாரிகள், தேர்தலுக் காகப் பதுக்கப்பட்ட பணத்தை எல்லாம் பறிமுதல் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. கரூர் ஐயம்பாளையத்தில் எடுக்கப்பட்ட பணம் தான் இந்தியாவிலேயே ஒரே நேரத்தில் கைப்பற்றப்பட்ட அதிகப்படியான தேர்தல் பணம்.

''’ ""போன முறை நம்ம நக்கீரனில் விரிவா எழுதியிருந்தாங்களே..'' ""இந்த முறையும் கூடுதல் விவரங்கள் இருக்கு. தேர்தலில் வாக்காளர்களை பர்சேஸ் பண்ணும் நோக்கத்தில், தமிழகம் முழுக்க ஆளும்தரப்பு 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான பணத்தை பதுக்கி வச்சிருப்பதா மத்திய அரசுக்குத் ஆதாரப்பூர்வமான தகவல் கிடைச்சிருக்கு. வாக்குப்பதிவுக்கு 20 நாட்கள்கூட இல்லாத நிலையில் எப்படி இவ்வளவு பணத்தையும் டிரேஸ் பண்ணி பறிமுதல் பண்றதுன்னு, இப்ப டெல்லியே மலைப்பில் இருக்குதாம்.''’

""வேட்புமனு தாக்கல் 29-ந் தேதியோடு நிறைவடையும் நிலையில், அ.தி.மு.க வேட் பாளர்கள் திக் திக் மனநிலையில் இருக்காங்க. இதற்கிடையில், ஜெ. ஆர்.கே.நகரோடு அடிஷனலா இன்னொரு தொகுதியிலும் போட்டியிடலாம்னு ஆலோசிப்பதா கார்டன் தரப்பிலிருந்து செய்தி கசியுது. அவர் முதன்முதலில் போட்டியிட்ட போடி அல்லது தேனி மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதிங்கிற அடிப்படையில் உளவுத் துறை சர்வே எடுத்துக்கிட்டிருக்குதாம்.' நக்கீரன்,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக