சனி, 30 ஏப்ரல், 2016

பரதேசி,லூசு,உயிர்கொல்லி...இளங்கோவன்,விஜயகாந்த், சீமான்....அட இதுவுல கூட வைகோ இல்லைங்க. தேர்தல் காமெடி ட்ராக்

மதுரை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பரதேசி என்று பொருள் படுமாறு பேட்டியளித்ததோடு, மக்கள் நல கூட்டணியை சாவு ஊர்வலத்துக்கு ஒப்பிட்டு பேசினார் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவ்வப்போது பிறரது மனம் புண்படும்படியான கருத்துக்களை பேசி சர்ச்சைக்குள்ளாகி வருகிறார். இதை அவர் தெரியாமல் செய்கிறாரா, அல்லது செய்திகளில் தனது பெயரும், கட்சி பெயரும் இருக்க வேண்டும் என்று நினைத்து விரும்பி செய்கிறாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அதேநேரம், அவரது கருத்துக்கள் மிக மோசமானவை என்பதில் நடுநிலையாளர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு பிரதமர் மோடி, சென்று சந்தித்தபோது, தனிமையில் அவர்கள் தப்பு செய்திருக்க வாய்ப்பு இல்லை என்று மோசமான ஒரு கருத்தை வாய் கூசாமல் கூறியவர் இளங்கோவன். இதற்காக தமிழகம் முழுக்க பெரும் போராட்டங்களை அதிமுகவினர் நடத்தினர். ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.

ஆபாச பேச்சு இதேபோல, கருணாநிதி முன்னிலையில் சில நாட்கள் முன்பு திருவாரூர் பொதுக்கூட்டத்திலும், ஜெயலலிதா பற்றி ஆபாச கருத்துக்களை பேசினார் இளங்கோவன். இதை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் நடத்திய நிலையில், வருத்தம் தெரிவித்தார், அவர்
காங்கிரஸ் கட்சியில் கலகம் செய்த ஒரு பெண் பிரமுகரை, நாய் என்று கூறி கேலி செய்தார் இளங்கோவன். இதையெல்லாம் பார்த்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இளங்கோவன் பெண்களை பார்த்து வக்கிரமாக பேசக்கூடியவர் என்று கூறியிருந்தார். இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் இளங்கோவன் அளித்த பேட்டியொன்று இப்போது பிரச்சினைக்கு காரணமாகியுள்ளது. காங்கிரஸ் பற்றிய நாம் தமிழர் கட்சி சீமானின் விமர்சனம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, "சில பெயர்கள் அழகாகத்தான் இருக்கும். பரதேசியெல்லாம் சீமான் என்று பெயர் வைத்துக்கொள்வார்கள். ஆனால், அதெற்கெல்லாம் பதில் சொல்ல நான்விரும்பவில்லை" என்று இளங்கோவன் கூறினார்.
உயிர்கொல்லி பிரசாரம் இதன்பிறகு பேட்டியை தொடர்ந்த இளங்கோவன் கூறியதாவது: ஜெயலலிதா பிரசாரம் தேர்தல் பிரசாரமாக இல்லை. உயிர் கொல்லி பிரசாரமாக உள்ளது. இந்த தேர்தலில் ஜெயலலிதா பிரசாரம், மக்களுக்கு எதிராக உள்ளது. என்னதான், எப்படித்தான் பிரசாரம் செய்தாலும், ஜெயலலிதா இந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை காணப்போவது உறுதி.
அதிகாரிகள் மாறுதல் திமுக-காங்கிரஸ் புகாரை தொடர்ந்து, தமிழகத்தில் சில அதிகாரிகளை மாற்றியுள்ளனர். சில அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று கோர்ட்டில் நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம். தேர்தல் கமிஷன் அதை செய்யும் என எதிர்பார்க்கிறோம்.
உளறல் தேர்தலில், திமுக கூட்டணி 3வது இடத்தை பிடிக்கும் என்று ஜெயலலிதா சொல்கிறார். அவர் என்ன பேசுகிறார் என்பது அவருக்கும் புரியவில்லை. மக்களுக்கும் புரியவில்லை. ஜெயலலிதாவுக்கு தோல்வி பற்றிய அறிகுறி தெரிய ஆரம்பித்துவிட்டதால், அவர் உளறிக்கொண்டுள்ளார்.
சாவு ஊர்வலம் மக்கள் நல கூட்டணியில் ஆறுபேர் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு உள்ளனர். நாலு பேர் தூக்குவார்கள், ஒருவர் படுத்துக்கொள்வார். ஒருவர் சங்கு ஊதுவார். இதுதான் அந்த ஆறு பேர் கொண்ட கூட்டணி. வேறு எதுவும் அதைபற்றி சொல்ல இல்லை. இவ்வாறு இளங்கோவன் பேட்டியளித்தார்.

Read more at: ://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக