வியாழன், 28 ஏப்ரல், 2016

திமுகவுக்கு பலமான சம்மட்டி அடி கொடுங்கள்...அடிமைகள் அறிமுக விழாவில் இதய தெய்வம்.....

உங்கள் ஓட்டுகளை பெற கொள்ளை கூட்டம் வரும். அவர்களுக்கு நீங்கள் பலமான சம்மட்டி அடி கொடுங்கள். அப்போது தான் அந்த கொள்ளை கூட்டத்தை நிரந்தரமாக அழிக்க முடியும்.
பெரியாறு அணையில் 152 அடி தேக்குவது உறுதி: மதுரையில் ஜெயலலிதா சபதம்< மதுரை: ''முல்லை பெரியாறு அணை நீர்த்தேக்க அளவை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என மதுரையில் நடந்த அ.தி.மு.க., தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார்.
மதுரை பாண்டிகோயில் ரிங்ரோட்டில் அவர் பேசியதாவது:மக்கள் நலன் கருதி திட்டங்களை செயல்படுத்துகிறது அ.தி.மு.க., அரசு. ஆனால் குடும்ப நலன் ஒன்றே குறிக்கோளாக செயல்படுபவர் கருணாநிதி. முல்லை பெரியாறு அணை முழு நீர்த்தேக்க அளவான 152 அடியில் இருந்து தற்காலிகமாக 136 அடிக்கு குறைக்கப்பட்ட பின், மீண்டும் அதை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று முழு மூச்சுடன் செயல்படுவது


அ.தி.மு.க., அரசு மட்டுமே. மத்திய அரசில் முக்கிய துறையை கையில் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைத்த கருணாநிதி, இந்த பிரச்னையில் பித்தலாட்டம் நடத்தினார். தமிழக மக்களின் உரிமையை காக்க கருணாநிதிக்கு மனம் இல்லை என்பதுதான் உண்மை.தன்னலம் என்றால் தமிழகத்தையே அடகு வைத்து விடுவார். பொது நலம் என்றால் பொறுமை காப்பார். முல்லை பெரியாறு பிரச்னையிலும் பொறுமை காத்தார் கருணாநிதி.

முல்லை பெரியாறின் முழு கொள்ளளவான 152 அடிக்கு நீர்த் தேக்கிட அ.தி.மு.க. தொடர்ந்து நடவடிக்கை எடுத்துள்ளது. அணையை பலப்படுத்தும் பணிக்காக வரைபடங்கள், குறிப்புகள் தயாரிக்கப்பட்டு மத்திய நீர்வள குழுவிடம் அனுமதி பெற்றது. பணிக்கான ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு அனைத்தும் முடிந்துள்ளது. அணையில் 152 அடிக்கு நீர் தேக்கப்படும் என்ற உறுதியை நான் அளிக்கிறேன்.

ஆனால், தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில், 142 அடியாக உயர்த்த, உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற, தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்துவோம் என வாக்குறுதி அளித்துள்ளது. இது எனக்கு புரிய வில்லை. கடந்க 2 ஆண்டுகளாக 142 அடி தண்ணீர் தேக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது இவர்கள் எதனை வலியுறுத்த போகிறார்கள். 142 அடி தேக்கினால் போதும் என நினைத்து, தமிழக மக்களுக்கு மீண்டும் அவர்கள் துரோகம் செய்ய உள்ளனரா. அவர்களை விரட்டி அடிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டிலும் துரோகம்: ஜல்லிக்கட்டு
மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தி.மு.க., தெரிவித்துள்ளது. இது மக்களை திசை திருப்பி ஏமாற்றும் வேலை.ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமே தி.மு.க.,- காங்., கூட்டணி தான். இந்த துரோகம் செய்த இக்கூட்டணியை ஒருபோதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

கிரானைட் கொள்ளை :மதுரை மாவட்டத்தில் கிரானைட் கொள்ளை தி.மு.க., ஆட்சியில் நடந்தது. கருணாநிதி குடும்பத்தினரே முறைகேடுகளில் ஈடுபட்டனர். இந்த கொள்ளைக்கு அவர்கள் காரணமாக இருந்ததால் தான் கிரானைட் கொள்ளையர்களை விட்டுவிட்டு, அதுபற்றி தெரிவித்தவர் மீது நடவடிக்கைஎடுத்தார்.

2011ம் ஆண்டு நான் முதல்வராக பொறுப்பேற்ற பின் இம்முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டேன். 2014 மே மாதம் அரசுக்கு ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், ஒலிம்பஸ் உட்பட 3 குவாரிகளில் ஆய்வு செய்து கணக்கிட்டால் ரூ. 16 ஆயிரம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் குறிப்பிட்ட, ஒலிம்பஸ் பங்குதாரர் கருணாநிதியின் பேரன். அவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இப்போது தெரிகிறதா?

ஆனால் அ.தி.மு.க., ஆட்சியில் கிரானைட் உரிமையாளர் மீது பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. குற்றவியல் வழக்குகள் எடுக்கப்பட்டன. கற்கள் வெட்டி எடுக்கப்படுவது நிறுத்தப்பட்டது. நீதிமன்றத்தால் சட்டஆணையர் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், தி.மு.க.,வினர் பிரசாரத்தில் கிரானைட்டில் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி என பிரசாரம் செய்கின்றனர். மதுரையில் கிரானைட் வெட்டி எடுப்பது 2012 முதல் நிறுத்தப்பட்டது. அப்படியென்றால் அவர்கள் சொல்லும் ரூ.ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ஊழல் தி.மு.க.,வினர் நடத்தியது தான்.

உங்கள் ஓட்டுகளை பெற கொள்ளை கூட்டம் வரும். அவர்களுக்கு நீங்கள் பலமான சம்மட்டி அடி கொடுங்கள். அப்போது தான் அந்த கொள்ளை கூட்டத்தை நிரந்தரமாக அழிக்க முடியும்.
முந்தைய தி.மு.க., ஆட்சியில் நீடித்த சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை நீக்கி சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தியது நான் தான்.இவ்வாறு பேசினார்.

அ.தி.மு.க.,வில்பா.ம.க., வேட்பாளர்

சிவகங்கை பா.ம.க., வேட்பாளராக, காளையார் கோவில் ஒன்றியச் செயலர் சந்திரகண்ணு அறிவிக்கப்பட்டார்.இவர் வேட்புமனுத் தாக்கல் செய்யாத நிலையில் நேற்று, மதுரையில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.அவர் கூறுகையில், “ஜெ., ஆட்சி சிறப்பானது. அ.தி.மு.க., மாவட்டச் செயலர் செந்தில்நாதன் கட்சி பணியும் என்னை கவர்ந்தது. இதனால் அ.தி.மு.க.,வில் இணைந்தேன்,” என்றார்.>ஜெ., பிரசார துளிகள்

அண்ணே! அது என்ன கட்சிண்ணே


* கூட்டம் நடந்த மதுரை ரிங் ரோட்டில் நேற்று காலை முதலே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் கூட்டத்திற்கு வாகனங்களில் அழைத்து வரப்பட்டவர்கள் பல கி.மீ., துாரம் நடந்தே வந்து சென்றனர்.* மாலை 5.00 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் முதல்வர் ஜெயலலிதா மதுரை வந்தார். மாலை 5.15 மணிக்கு காரில் புறப்பட்டு, மேடைக்கு 5.50 மணிக்கு வந்தார். இரவு 7.50 மணிக்கு சென்னை புறப்பட்டார்.
* மாலை 5.55 மணிக்கு பேச துவங்கிய ஜெ., 6.45 மணிக்கு முடித்தார்.
* கூட்டத்திற்கு வந்த கூட்டணி கட்சியினர் தங்கள் கொடிகளை ஏந்தி பிடித்தனர். இதனால் 'டென்ஷனான' உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ., தவசி, கொடிகளை இறக்கி வைக்குமாறு 'மைக்'கில் கூறினார். ஆனால் கொடிகளை இறக்காததால், தலைமை நிலைய செயலாளர் மகாலிங்கத்திடம் 'அண்ணே! அவுங்க என்ன கட்சிண்ணே. என்ன கட்சிண்ணே தெரியலையே' என ஆதங்கப்பட்டார்.
* மதுரை மாவட்டம் 10 வேட்பாளர்கள், திண்டுக்கல் 7, தேனி 4, ராமநாதபுரம் 1,சிவகங்கை 2, நெல்லை 10, துாத்துக்குடி 5, கன்னியாகுமரி 6, தர்மபுரி 1, தஞ்சாவூர் 1 என மொத்தம் 47 வேட்பாளர்களை ஜெ., அறிமுகப்படுத்தினார்.
* பா.ம.க., - தே.மு.தி.க., உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 14 பேர் ஜெ., முன்னிலையில் அ.தி.மு.க.,வில் சேர்ந்தனர்.
* நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள கட்சியின் தலைமை நிலைய செயலாளர் மகாலிங்கம், 'ஹலோ' என 'மைக்'கை செக் செய்து, அமைச்சர்களிடம் கொடுத்து கூட்டத்தை ஒழுங்குப்படுத்துமாறு கூறினார்.
* கிரானைட் முறைகேடு குறித்து ஜெ., பேசும்போது, 'உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சட்ட ஆணையர்' என்று சகாயத்தின் பெயரை குறிப்பிடாமல் பேசினார்.
* புதுச்சேரி கூட்ட மேடையில் ஜெ.,வுடன் ஒரே மேடையில் சரிசமமாக வேட்பாளர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் மதுரை பிரசார கூட்ட மேடை, கீழே வேட்பாளர்களும், மேலே ஜெ., மட்டும் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக