வெள்ளி, 29 ஏப்ரல், 2016

டெல்லி கணேஷின் "என்னுள் ஆயிரம்"....படிப்பினையாம்

மகனை வைத்து சொந்தமாக எடுத்த படம் தோல்வி அடைந்துவிட்டது என்று நடிகர் டெல்லி கணேஷ் புலம்பியிருக்கிறார். தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கும் மேல், குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் டெல்லி கனேஷ். அவர் தன்னுடைய மகன் மகாவை கதாநாயகனாக வைத்து ‘என்னுள் ஆயிரம்’ என்ற திரைப்படத்தை எடுத்தார். ஆனால், அந்த படம் வியாபார ரீதியாக வெற்றியடையவில்லை. அதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லி கணேஷ் பேசி வெளியிட்டதாக ஒரு ஆடியோ வெளியாகியிருக்கிறது. அதில் பேசும் அவர் “ தமிழ் வாழ்க, தமிழன் வாழ்க என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழ் படங்களுக்கு ஒரு காட்சி கொடுப்பதற்கு தியேட்டர் அதிபர்கள் மறுக்கிறார்கள். மற்ற மொழிகளான இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கில கார்ட்டூன் படங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தமிழ் படங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை


 நான் ஒரு வெளியிடும் தேதியை முடிவு செய்தால், அந்த தேதியில் ‘தெறி’ வெளியாகிறது என்று கூறி படத்தை தள்ளிப்போட சொன்னார்கள். தியேட்டர் கிடைக்காததால், திருச்சியில் என் படம் வெளியாகவில்லை. மற்ற மாவட்டங்களில் சிறிய தியேட்டர்கள் மட்டுமே கிடைத்தது. ஒரு வழியாக 22ஆம் தேதி வெளியிட்டால். நீங்கள் 29ஆம் தேதி வெளியிட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள். மொத்தத்தில் ஒரு படம் தயாரித்து நான் பைத்தியக்காரன் ஆகிவிட்டேன். சினிமா துறையில் இவ்வளவு வருடங்களாக கற்றுக்கொள்ளாததை இப்போது கற்றுக் கொண்டேன்” என்று அவர் வருத்ததுடன் பேசுகிறார். இந்த விவகாரம் தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது  வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக