சனி, 30 ஏப்ரல், 2016

5 கலெக்டர்கள், இரண்டு காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாற்றம்...ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும்

விகடன்.com திருவாரூர் மாவட்ட கலெக்டர் உள்பட ஐந்து மாவட்ட கலெக்டர்கள், இரண்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களை பணியிடை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கலெக்டர்கள் முதல் காவல்துறை அதிகாரிகள் வரை ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம், பல மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்தது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட நடவடிக்கையை தேர்தல் ஆணையம் இன்று எடுத்துள்ளது. 5 மாவட்ட கலெக்டர்கள், இரண்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்


கரூர் மாவட்ட கலெக்டராக இருந்த டி.பி.ராஜேஷ் மாற்றப்பட்டு காக்கர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட கலெக்டராக இருந்த டாக்டர் எம்.மதிவாணன் மாற்றப்பட்டு டி.என்.வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக இருந்த ஏ.குணசேகரன் மாற்றப்பட்டு பூஜா குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த எம்.கருணாகரன் மாற்றப்பட்டு சத்தியமூர்த்தியும், புதுக்கோட்டை மாவட்ட இருந்த எஸ்.கணேஷ் மாற்றப்பட்டு புதிய கலெக்டராக ஸ்வர்ணாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உளவுத்துறை ஐஜியாக இருந்த கே.என்.சத்தியமூர்த்தி மாற்றப்பட்டு  கரண் சிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசியல் பிரமுகர்களின் தொலைபேசிகளை தமிழக உளவுத்துறை ஐ.ஜி-யான சத்தியமூர்த்தி கண்காணிப்பதாக தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் போனது. இதன் காரணமாகவே சத்தியமூர்த்தி மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மேலே, உளவுத்துறை தலைவர் பதவி (கூடுதல் டி.ஜி.பி) பதவி இதுநாள் வரை காலியாக இருந்தது. தற்போது தேர்தல் கமிஷன் அந்த பதவிக்கு கரண் சின்கா-வை நியமித்துள்ளது.

ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி மாற்றப்பட்டு ரூபெஷ் குமார் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த என்.எம்.மயில்வாகணன் மாற்றப்பட்டு ர.சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக