புதன், 27 ஏப்ரல், 2016

நிதின் கட்காரி : நெடுஞ்சாலைகளில் 3 டி பெயிண்டிங் வேக( போலி ) தடைகள்..அப்புறம் நிஜமான தடையை கூட பெயிண்ட்டிங் என்று நினைப்பாங்க அடிபடுவாங்க.

புதுடில்லி : சாலை விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் நாடு முழுவதிலுமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 3-டி தொழில்நுட்பத்தில் மாய வேகத் தடைகள் அமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிதின் கட்காரி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் ஓராண்டில் மட்டும் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் நடக்கின்றன. இந்த விபத்துகளால் சுமார் 1.5 லட்சம் பேர் பலியாகின்றனர். 3 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைகின்றனர். பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணம் அதிவேக பயணமே. எனவே, தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களை வேகமாக ஓட்டுவதை வாகன ஓட்டிகள் தவிர்க்கும் வகையில் 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய மாய வேகத்தடைகளை, சாலைகளில் வரைவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.இது ஒரு அடி முட்டாள் தனமான ஏற்பாடு .கொஞ்ச நாள் பழகியதும் இது வெறும் பெயிண்டிங்தானே என்று வேகமாகவே போவார்கள். அதை விட ஆபத்து நிஜமாகவே ஏதாவது கண்ணுக்கு தெரிந்தாலும்  வெறும் பெயிண்டிங் என்ற எண்ணம்தான் வரும்.  விபத்துக்கள் அதிகம் நடக்கும், 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக