வியாழன், 28 ஏப்ரல், 2016

சென்னை..3 பேரை விஷ ஊசி போட்டு கொன்ற ரியல் எஸ்டேட் அதிபர் ....லஞ்சம் கொடுத்து இயற்கை மரணம் என........

When the Neelankarai police began a probe into a burglary complaint from a 41-year-old real estate businessman, little did they think that they would have to reopen three death cases which were months ago closed as mere cases of unnatural death.
சென்னை: திருவான்மியூர் அடுத்த ஈஞ்சம்பாக்கம், அனுமன் காலனி பிரதான சாலையை சேர்ந்தவர் ஸ்டீபன் (45), ரியல் எஸ்டேட் அதிபர். இவர், கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசிக்கிறார். இவரது வீட்டில் கொட்டிவாக்கத்தை சேர்ந்த பாலாஜி (32), ஆனந்தம் (எ) முருகானந்தம் (27) ஆகியோர் வேலை பார்க்கின்றனர். கடந்த 4ம் தேதி ஸ்டீபன் வெளியே சென்று மாலையில் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பீரோவில் நகைகள் மாயமாகி இருந்தது. இகுதுறித்து நீலாங்கரை போலீசில், ஸ்டீபன் புகார் செய்தார். அதில், 120 சவரன் நகை, நில பத்திரங்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதாக கூறியிருந்தார். விசாரணையில் ஸ்டீபன் வீட்டில் வேலை செய்த பாலாஜி மற்றும் ஆனந்தம் ஆகியோர் சதீஷ்குமார் (26) என்பவருடன் சேர்ந்து கொள்ளையடித்தது தெரிந்தது.


அப்போது அவர்கள் , ‘நாங்கள் திருடியது 40 சவரன் நகை, 2 கை துப்பாக்கி, 5 தோட்டாக்கள் மட்டுமே என்றும், வீட்டின் உரிமையாளர் ஸ்டீபன் 3 பேரை விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ளார். அவரை கைது செய்யுங்கள் எனவும் கூறியுள்ளனர்.இதையடுத்து, ஸ்டீபனை பிடித்து, ‘எதற்காக அனுமதியில்லாமல் கை துப்பாக்கி வைத்திருந்தீர்கள், 3 பேரை விஷ ஊசி போட்டு கொன்றது உண்மையா,’ என விசாரித்தனர். அப்போது, பல திடுக்கிடும் தகவல் வெளியானது.இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘ஸ்டீபனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. இதனால், அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார். மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதற்கு மனைவியின் சகோதரர் ஆயிரம் விளக்கை சேர்ந்த ஜான் பிலோமினன் தான் காரணம் என ஸ்டீபன் கருதினார். இதனால், கடந்த 19ம் தேதி ஜான் பிலோமினன் வீட்டுக்கு சென்ற ஸ்டீபன், யாருக்கும் தெரியாமல் அவருக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்தார். ஏற்கனவே, உத்திரமேரூரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரது மனைவியுடன், ஸ்டீபனுக்கு தொடர்பு இருந்தது.

இதை அறிந்த தர், இருவரையும் கண்டித்தார். இதனால், கடந்த ஆண்டு மே 17ம் தேதி, தரையும் விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ளார்.
இதேபோல், மடிப்பாக்கத்தை சேர்ந்த ஹென்றி என்பவரது மனைவியுடன், அவருக்கு தொடர்பு இருந்தது. இதை அறிந்த ஹென்றி, ஸ்டீபனை கண்டித்துள்ளார். அவரையும் விஷ ஊசி போட்டு கொலை செய்தார். இந்த 3 கொலைகளையும், சிலரது உதவியுடன் இயற்கை மரணமாக வழக்கு பதிய செய்துள்ளார். பின்னர், எதுவும் தெரியாதது போல் வழக்கமாக இருந்துள்ளார்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, ஸ்டீபனை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கொலைக்கு உதவியவர்கள் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.  தினகரன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக