புதன், 27 ஏப்ரல், 2016

வைகோ : நானே எழுதி நானே நடித்த நாடகத்தில் நல்ல திருப்பம்...என்னை .நம்பி இருந்தவர்கள் நாசமாய் போனார்கள் இதுதான் எந்தன் விருப்பம்.

ஒரு தொகுதி... ஓராயிரம் கேள்விகள் போராளி, புரட்சிக்காரர் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் வைகோ; ஸ்டெர்லைட், கோகோ கோலா போன்ற பிரம்மாண்ட பன்னாட்டு கார்ப்பரேட்களை எதிர்க்க தயங்காத வைகோ, ஏழு பேர் அடங்கிய ஒரு கும்பல் எழுப்பிய கூச்சலுக்கு அஞ்சி, தேர்தல் போட்டியில் இருந்தே விலகி விட்டார் என்பதை, தமிழகத்தில் யாராலும் நம்ப முடியவில்லை.
இதனால், பற்பல வடிவங்களில் கேள்விகள் எழத் தொடங்கி உள்ளன. அவற்றை பார்க்கும் முன், வைகோவுக்கு உச்சகட்ட கிலி ஏற்படுத்திய அந்த சம்பவத்தை பற்றி...துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே, வடக்கு திட்டங்குளம் கிராமத்தில், தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வைகோ வந்தார். அப்போது, இண்டு பேர் வைகோவை வசைபாடியும், அவர் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதை எதிர்த்தும் கூச்சலிட்டனர். அங்கிருந்த போலீசார் அவர்களை விரட்டினர். அந்த இளைஞர்கள், மேலும் ஐந்து பேரோடு சேர்ந்து மீண்டும் கூச்சலிடவே, அவர்களை போலீசார் கைது செய்தனர்.


அவ்வளவு தான்!: இது ஒரு சின்ன உரசல் தான். அதையும், தேவர் சமூகத்தை சேர்ந்த, தி.மு.க., வேட்பாளர் தனது சமூகத்தின் எண்ணிக்கையை பற்றி பேசியதையும், இணைத்து வைகோ, விஷயத்தை ரணகளமாக்கி விட்டார். எந்த அடிப்படையில் இரண்டு சம்பவங்களையும் வைகோ பிணைத்தார்? தி.மு.க., வேட்பாளர் பேசியதை அந்த கட்சியின் தலைமை கண்டிக்கவில்லை. அதனால், தி.மு.க., சாதிக் கலவரத்தை துாண்ட முனைகிறது என்று வைகோ கூறியிருப்பது, ஜோடிப்புக்கு கஷ்டப்படுவது போல் இல்லையா?

இதுவரை, கோவில்பட்டி பகுதியில், தேவர்களுக்கும், நாயுடுகளுக்கும் எந்த கலவரமும் ஏற்பட்டதில்லை என்பது, இங்கு குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்க, ஒரு சிலை சம்பவத்தை வைத்து கலவரத்தை ஏற்படுத்திவிட முடியுமா? ஒவ்வொரு ஊரிலும், பொருளாதார ரீதியாக ஒவ்வொரு சாதியும், ஒன்றை ஒன்று சார்ந்து தான் வாழ்கின்றன. கலவரத்தை ஏற்படுத்துவதெ ல்லாம், நெடுங்காலமாக கசப்பை ஏற்படுத்தி, சில சம்பவங்கள் மூலம் வெடிக்கச் செய்வது தான்.

சரி, இந்த சம்பவம் முடிந்த பின், வைகோ, இமானுவேல் சேகரனின் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்ற போது, அங்கு இருந்த தலித் மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனரே, அதை
பற்றி வைகோ குறிப்பிடாதது ஏன்? அதேபோல், 'வி.சி., கட்சி கொடிகளை எங்கள் பகுதியில் கட்டக்கூடாது' என்று, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் சார்ந்த தலித் மக்கள், எதிர்ப்பு தெரிவித்ததை பற்றி வைகோ குறிப்பிடாதது ஏன்?

அதாவது, நடந்த எதிர்ப்பு சம்பவம், ஒன்று மட்டும் அல்ல; பல எதிர்ப்பு சம்பவங்களில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து வைகோ காரணம் கண்டுபிடித்திருக்கிறார்.வைகோவின் முடிவு பற்றி, கூட்டணியினருக்கு முன்பே தெரியாது என்பது, வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன், ''வைகோ போட்டியிடாதது அதிர்ச்சி அளிக்கிறது,'' என்று அளித்த பேட்டியில் இருந்து அப்பட்டம். வைகோவின் காரணங்கள் ஜீரணிக்க முடியாதவையாக இருப்பதாகவும், அவருடைய முடிவு கூட்டணியில் கீறலை ஏற்படுத்தி உள்ளதாகவும், கூட்டணி கட்சியினர் சொல்கின்றனர். அவர்கள் மனதில் ஓராயிரம் கேள்விகள்.

சந்தேகம் கலந்த கேள்விகள். அவற்றில் சில...
*கோவில்பட்டி தொகுதியில், நாயுடு இனத்தவர் அதிகம் உள்ளனர். அதனால், அந்த தொகுதி எனக்கு பாதுகாப்பான தொகுதியாக இருக்கும்' என சொல்லித் தானே,கம்யூனிஸ்டுகள் அதிகம் உள்ள அந்த தொகுதியை, வைகோ போராடிப் பெற்றார். இப்போது, அந்த தொகுதியில் இருந்து பின்வாங்கியது ஏன்?* ஒருவேளை ஜாதிய பிரச்னைகள், அவர் சொல்கிறபடியே அதிகமாக இருந்திருந்தால், அதையும் மீறி களத்தை எதிர் கொள்வதுதானே, கூட்டணியையே ஒருங்கிணைத்து செல்லும், ஒரு தலைவனுடைய பாங்கு?*கம்யூனிஸ்டுகளிடம் போராடிப் பெற்ற தொகுதியில், தனக்கு பிரச்னை என்று சொல்லி ஒதுங்கும் பட்சத்தில், கம்யூனிஸ்டுகளுக்கு வலுவான அந்த தொகுதியை மீண்டும் கம்யூனிஸ்டுகளுக்கே திருப்பி அளித்திருக்கலாமே!* தொகுதியில் நாயுடு சமூகத்தவருக்கும், தேவர் இனத்தவருக்கும் பிரச்னை ஏற்படும் என்ற நல்லெண்ணத்தால், போட்டியில் இருந்து விலகும் பட்சத்தில், அந்த தொகுதியில் தன் இனத்தையே சார்ந்த விநாயகா ரமேஷ் என்பவரையே வேட்பாளர் ஆக்கியது ஏன்? விநாயகா ரமேஷ் போட்டியிட்டால் மட்டும், வைகோ எதிர்பார்க்கும் சமூக பிரச்னைகள் ஏற்படாமல் போய்விடுமா?*விநாயகா ரமேஷ் தான், வைகோவின் மாற்று வேட்பாளர் என்கிற பட்சத்தில், அவர் மாற்று வேட்பாளராக, கடைசி நிமிடத்தில் முடிவெடுக்கப்பட்டு, சட்டென வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியாது. இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பே, போட்டியிலிருந்து விலகும் முடிவை வைகோ எடுத்திருக்க வேண்டும். அப்படியென்றால், அந்த முடிவு பற்றி முன்கூட்டியே, கூட்டணி கட்சி தலைவர்களிடம் விவாதிக்காதது ஏன்?* தி.மு.க.,தான் சமூக ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் பிரச்னையில் ஈடுபடுகிறது என வைகோ சொல்வதோடு, தேவர்களை எனக்கு எதிராக துாண்டி விடுகிறார் என சொன்னால், தேவர் இனத்தவர் ஒட்டுமொத்தமாக தி.மு.க., பின்னால் திரளுவர் என்ற சாதாரண கணக்கு கூடவா, நெடுங்காலஅரசியல்வாதிக்குத் தெரியவில்லை?class="Apple-tab-span" style="white-space:pre"> கரூர் அன்புநாதன், மணிமாறன், சென்னை, எழும்பூர் விஜய் கிருஷ்ணசாமி ஆகியோர் < வீடு மற்றும் குடோனில் பிடிபட்ட கோடிக்கணக்கான பணத்தின் பின்னணியில் அ.தி.மு.க., உள்ளது என்ற குற்றச்சாட்டு குறித்து, மொத்த தமிழகமும் பேசிக் கொண்டிருக்க, *போட்டியிலிருந்து விலகல் அறிவிப்பை வெளியிட்டு, அந்த பிரச்னையை திசை திருப்புவது போல செயல்பட்டு இருக்கலாமா?* ஏற்கனவே, அ.தி.மு.க.,வின், 'பி டீம்' தான் மக்கள் நலக் கூட்டணி என, விமர்சிக்கப்படும் சூழலில், ஜாதிய பிரச்னைகளை சொல்லி, தி.மு.க.,வை சிக்கலில் ஆழ்த்துவதன் மூலம்,'பி டீம்' குற்றச்சாட்டு வலுப்பெறாதா?*ஒரு வேளை, சாதிய பிரச்னை தான் காரணம் என்றால், மற்ற தலைவர்கள் போட்டியிடுவது போல, சென்னையிலேயே ஒரு தொகுதியில் போட்டியிடப் போவதாக வைகோ அறிவித்திருக்கலாமே. அதை ஏன் செய்யவில்லை? சொந்த தொகுதியில், தனது சாதி மக்கள் நிறைந்துள்ள தொகுதியில் போட்டியிட்டால் தான் வெற்றி வாய்ப்பு என்றால், சாதி பிரச்னைகளை கண்டு ஏன் அஞ்ச வேண்டும்?*தமிழகம் முழுவதும் கூட்டணி சார்பில் போட்டி யிடும் வேட்பாளர்களுக்கு, செலவுத் தொகை தருவதாக சொல்லப்பட்டு, தராததால் ஏற்பட்ட நெருக்கடியை தவிர்க்க, தனக்கே ஒரு நெருக்கடி ஏற்பட்டிருப்பது போல காட்டவே, இப்படியொரு விலகல் சம்பவமா? இப்படி கூட்டணியினர் கேட்டுப் புலம்பிக் கொண்டு இருக்க, அரசியல் வட்டாரங்களில், மேலும் சில சந்தேகங்கள் கிளப்பப்படுகின்றன... *வைகோவிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், நடிகர் கருணாசின் புலிப்படை அமைப்பு மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் என, போலீஸ் வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன. கருணாஸ், அ.தி.மு.க., சார்பில் திருவாடானை தொகுதியில் போட்டியிடுகிறார். அப்போது, இந்த எதிர்ப்பெல்லாம், 'ஏற்பாடு தானா' என, சம்பவ பகுதியை சார்ந்த சிலர், வைகோவால் தங்கள் ஊருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதை நினைத்து, எரிச்சலோடு கேட்கின்றனர்.* சமீபகாலமாக, தன் தலையில் கட்டியிருக்கும் பச்சைத் துண்டை, துாங்கும் போதுகூட, வைகோ அகற்றுவதில்லை என்று கூறப் படுகிறது. நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே வசிக்கும் தன் சகோதரியின் ஜோதிடர் அறிவுரைப்படி தான், இந்த பச்சைத் துண்டாம். அதே ஜோதிடர் மூலம் போட்டியில் இருந்து விலகுவதற்கு அறிவுரை வந்ததா என, ம.தி.மு.க.,வினர் வினவுகின்றனர். -நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக