புதன், 27 ஏப்ரல், 2016

விசாகபட்டிணம் பயோ டீசல் யூனிட்டில் பயங்கர தீ விபத்து.. தீயணைக்க பல மணி நேர போராட்டம்

விசாகபட்டிணம்: ஆந்திர மாநிலம் விசாகபட்டிணத்திலுள்ள பயோ எரிபொருள் உற்பத்தி பிரிவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. விசாகபட்டிணம், நகரில் துவ்வடா என்ற பகுதியில், பயோமேக்ஸ் என்ற நிறுவனத்தின் பயோ எரிபொருள் உற்பத்தி பிரிவு சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நேற்று இரவு இங்குள்ள டீசல் டேங்கர்களில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.

இந்த நெருப்பு பிற டேங்கர்களுக்கும் பரவியது. இன்று காலைக்குள் 12 டேங்கர்களில் தீ பரவியது.
Huge fire breaks out in Duvvada Special Economic Zone (SEZ) near #Visakhapatnam in Andhra Pradesh pic.twitter.com/sUmSadYZZD — Doordarshan News (எரிபொருளில் தீ பரவுவதால், அதை அணைப்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவால் நிலவுகிறது. 45 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். 13 மணி நேரமாக போராடி வரும் நிலையிலும், 70 சதவீத அளவுக்குதான் இதுவரை தீ அணைக்கப்பட்டுள்ளது. கடற்படை வீரர்களும், தீயணைக்கும் பணியில் களமிறக்கப்பட்டுள்ளனர். 12 வாகனங்களில் கடற்படை வீரர்கள் களமிறங்கியுள்ளனர். இரவில் விபத்து ஏற்பட்டதால், உயிரிழப்பு ஏதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல இன்று அதிகாலை டெல்லி சஞ்சய் காந்தி நகர் பகுதியிலுள்ள குடோன் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதிருஷ்வசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது  /tamil.oneindia.com/ne

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக