சனி, 30 ஏப்ரல், 2016

சபாஷ் நாயுடு’ – டைட்டில் ஜாதி பெயர்தான்! – ஆனா ஏன் வைச்சேன் தெரியுமா?” = கமல் விளக்கம்

ka 3ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் படத்தின் பூஜை சென்னையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. கமல், ஸ்ருதி ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினரோடு நடிகர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டார் கள். இப்படத்திற்கு தலைப்பு ‘சபாஷ் நாயுடு’ என்று படப்பூஜையில் அறிவித்தார் கமல். தமிழ் மற்றும் தெலுங்கில் கமலுடன் பிரம்மானந்தம் முக்கிய பாத்திரத்திலும், இந்தியில் கமலுடன் செளரஃப் சுக்லாவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதையை கமல் எழுதியிருக்கிறார். நாயுடுஜாதி  மக்களின்  ஆதரவு  அதிலும் ஒட்டு மொத்த தெலுங்கு பேசும் மக்களின் ஆதரவு...அதாவது  வசூல் வசூல் வசூல் ...வேற ஒரு புண்ணாக்கும் இல்லை 



பட பூஜையைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கமல் ஹாசன் பேசியது, “தமிழ் மற்றும் தெலுங்கு படங்களின் தலைப்பாக ‘சபாஷ் நாயுடு’ இருக்கும். இந்தியில் ‘சபாஷ் குந்து’ என்று இருக்கும். காமெடி த்ரில்லராக உருவாக்க இருக்கிறோம். தமிழில் நான் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறேன். நான் பிறந்து வாழ்ந்த சினிமாவில் இரண்டு மகள்களோடும் பணியாற்றுவேன் என்று நினைத்துப் பார்த்திருக்கிறேன். இப்படி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. யார் எப்படி வருவார் என்பது எனக்கு தெரியாது. ஸ்ருதி ஹாசன் இசையுலகிற்கு சென்றிருக்க வேண்டியது. ராஜீவ் குமார் இயக்கத்தில் 25 வருடங்களுக்கு பிறகு நடிப்பதில் சந்தோஷம். நடுவில் நிறைய விஷயங்கள் பேசினோம். அப்படியே தள்ளிப் போய் இந்தப் படத்தில் இணைந்தது சந்தோஷம். ஸ்ருதி ஹாசனைப் பொறுத்தவரை கமல் பெண் தானே, அதான் நடிக்கிறார் என்று யாரும் சொல்லிவிடக் கூடாதே என்று நினைப்பு இருந்தது. அதனால் தான் அவருடன் நடிக்காமலே இருந்தேன். ராஜ்கமல் நிறுவனம் ஒரு ஸ்டாரை ஒப்பந்தம் செய்வது போலத் தான் இப்படத்தில் ஸ்ருதியை ஒப்பந்தம் செய்திருக்கிறோம். எனக்கு மகளாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ரஹ்மானின் ‘பாம்பே ட்ரீம்ஸ்’ இசை நாடகத்தில் நாயகனாக நடித்த மனுப் நாராயணன் இப்படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.


அப்புறம்.. ஒரு குடிகாரனைப் பற்றி படமெடுத்தால் தான் மதுவிலக்கு பற்றி எடுக்க முடியும். என்ன சொல்ல வருகிறோம் என்று தெரி யாமல் ஜாதிப் பெயர் இருக்கிறதே என்றால், முதலில் ஜாதிப் பெயரை தெருவில் இருந்து எடுங்கள். பெயருக்கு முன்னாள் இருந்து ஜாதிப் பெயரை எடுங்கள். நான் எடுத்து விட்டேன்.இப்படத்திற்கும் ‘துப்பறியும் சாம்புவிற்கும் சம்பந்தமில்லை. அப்படத்தைப் போல இருந்தாலும் இது வேறு மாதிரியான ஒரு சுவை. பல்ராம் நாயுடு பாத்திரத்திற்கும் இதற்கும் தொடர்புண்டு. பல்ராம் நாயுடுவின் தனிவாழ்க்கை தான் இந்தப் படம். இந்தப் 4 பாட்டு முடிவு பண்ணியிருக்கிறோம். அமெரிக்காவில் ‘DISTRICT 72′ என்ற குழு இருக்கிறார்கள். அவர்கள் இளையராஜா வோடு இப்படத்தில் பணிபுரிய இருக்கிறார்கள். வித்தியாசமான் ஒலி சேர்க்கை இருக்கும் என நம்புகிறோம். வேலைப் பளு, நாயுடு வேஷம் போடும் போது அதற்கான நேரம் ஒதுக்க வேண்டும். அதனால் பொறுப்பாக இயக்குவதற்கு ஆள் வேண்டும். அதற்காக ராஜீவ் குமாரைத் தேர்வு செய்தேன்.
நகைச்சுவைப் படங்கள் மட்டுமல்ல என்னுடைய சீரியஸ் படங்களின் கதைகளைக் கூட அவரிடம் சொல்வேன். மெளலி, கிரேசி மோகன், சுதா, ஜெயமோகன் இப்படி என்னுடைய நண்பர்கள் அனைவருக்குமே என் கதைகளை படித்துக் காட்டுவதுண்டு. தேவைப்பட்டால் அவர்களுடைய பங்களிப்பையும் ஏற்றுக் கொள்வேன். மே 16-ம் தேதி அமெரிக்காவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறோம். 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை தான் இந்தியாவில் படமாக்க இருக்கிறோம். நாங்கள் அமெரிக்க படப்பிடிப்பை ஜூன் இறுதியில் முடிக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறோம். இங்கு ஜூலையில் பாக்கி வரும் படப்பிடிப்பை முடிக்க இருக்கிறோம்” என்று பேசினார் கமல்ஹாசன்.  ஆந்தை ரிப்போர்டர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக