பிரித்தானியாவில் குடியேற்றம் தொடர்பான பரீட்சையினை எழுதுவதற்கு சட்டவிரோதமாக வேறொரு ஆண் நபரை அனுப்பி வைத்த இலங்கைப் பெண் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த மோசடிக்கு துணை போன ஆணுக்கும் சிறைத் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது.
ரெஜினோல்ட் அந்தனி என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த ஆண் இவ்வாறு பரீட்சைகளுக்கு தோன்ற போலி சாரதி அனுமதிப் பத்திரத்தையும் அதிகாரிகளிடம் கையளித்துள்ளார்.
இதேவேளை, இவ்வாறு குறித்த நபரை சட்டவிரோதமாக பரீட்சை எழுத அனுப்பி வைத்த பெண் கிருஷ்ணதேவி தம்பிராஜா என இனங்காணப்பட்டுள்ளார்.