வியாழன், 6 அக்டோபர், 2011

மன்னார் சிறுவனின் மரணத்தின் உண்மைக் காரணத்தை மறைக்க முயற்சி

இந்தியாவில் இருந்து வருகை தந்த சாமியார் ஒருவரைப் பார்ப்பதற்காகச் அவசரமாகச் சென்ற மருத்துவர் ஒருவர் தனது வாகனத்தால் சிறுவனை மோதியதையடுத்து  அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததுள்ளான்   எனத் தகவல்கள் வெனிவந்துள்ளனன.
பாடசாலை முடிந்த பின்னர் அப்பா வேலை செய்யும் இடத்திற்குச் சென்ற சிறுவன் அங்கிருந்து மிக்சர் வாங்கிச் சாப்பிட கடைக்கு சென்றவேளை இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மன்னார் மூர்வீதி கிராம சேவகர் பிரிவில் நேற்று முன்தினம் ஏழு வயதான செபஸ்தியான் அபிஷேக் எனும் சிறுவன் ஒருவன் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டது. பள்ளிமுனை 50 வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் இச் சிறுவனின் தகப்பன் மன்னார் சேவா லங்கா மன்றத்தின் காவலாளியாக கடமையாற்றுபவர் என அறியப்படுகிறது.

பாடசாலை முடிந்து தந்தையரோடு அலுவலகத்தில் வந்து நின்ற இச் சிறுவன் மிக்சர் வாங்க கடைக்குச் சென்ற சமயத்திலேயே விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளான். மன்னார் மாவட்ட பிரபல வைத்தியர் ஒருவரின் கவனயீனமான வாகனத்தைச் செலுத்தியதன் காரணமாகவே இவ்விபத்து நேரிட்டுள்ளது எனவும் மேலும் அறியப்படுகிறது.
இதேவேளை, இந்தச் சிறுவனின் மரணத்துக்கான உண்மைக் காரணத்தை மறைத்து வேறுவிதமாக அதனைத் திசை திருப்ப குறிப்பிட்ட வைத்தியர் முயற்சித்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக