வெள்ளி, 7 அக்டோபர், 2011

மாணவர் படை பயிற்சி முகாமில் மாணவி உயிரிழப்பு!

ரன்தம்பே மாணவர் படை பயிற்சி முகாமில் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது சுகயீனமுற்றுள்ளதாக தெரிவித்து குறித்த மாணவி ஓய்வு பெற்றுக்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இரவு உணவு உட்கொண்டதன் பின்னர் நித்திரைக்குச் சென்ற மாணவி மறுநாள் விழித்தெழாததன் காரணமாக அம்பகஹபெலஸ்ஸ வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.
வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படும் முன்னரே மாணவி உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பொல்கஹவெல, இரத்மல்தொட்ட மத்தியக் கல்லூரியைச் சேர்ந்த 25 வயது மாணவியே உயிரிழந்தவராவார். ஹசலக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக