சனி, 8 அக்டோபர், 2011

யாழ்ப்பாண பெண்ணின் பிரித்தானிய குதிரை பரீட்சை எழுத 500 ஸ்டேலிங்

பிரித்தானியாவில் குடியேற்றம் தொடர்பான பரீட்சையினை எழுதுவதற்கு சட்டவிரோதமாக வேறொரு ஆண்   நபரை  அனுப்பி  வைத்த இலங்கைப் பெண் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.    குறித்த மோசடிக்கு துணை  போன ஆணுக்கும் சிறைத் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது.
ரெஜினோல்ட் அந்தனி என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த ஆண் இவ்வாறு பரீட்சைகளுக்கு தோன்ற போலி சாரதி அனுமதிப் பத்திரத்தையும் அதிகாரிகளிடம் கையளித்துள்ளார்.
இதேவேளை, இவ்வாறு குறித்த நபரை சட்டவிரோதமாக பரீட்சை எழுத  அனுப்பி வைத்த பெண் கிருஷ்ணதேவி தம்பிராஜா என இனங்காணப்பட்டுள்ளார். 
குடிவரவு திணைக்கள அதிகாரிகள் குறித்த பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்று அவருடன் ஆங்கிலத்தில் கதைக்க முற்பட்ட போது அவரது கணவர் அவருக்கு அதனை மொழி பெயர்த்து கூறியுள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண் பரீட்சை எழுதியிருக்க வாய்ப்பில்லை என சந்தேகித்த எல்லைப் பாதுகாப்பு முகவர் அமைப்பு,  தொடர்ந்து நடத்திய விசாரணைகள் மூலம் பரீட்சைக்கு சமர்ப்பித்த சாரதி அனுமதி    அட்டை போலியானது எனகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.    பிரித்தானியாவில் தொடர்ந்து விடுமுறையை கழிக்க கோருபவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான பரீட்சையிலேயே    குறித்த பெண் இவ்வாறான மோசடியினை செய்துள்ளார்.
இவர் இவ்வாறு போலி சாரதி பத்திரத்தை பெற்று பரீட்சை எழுத அந்தோனிக்கு 500 ஸ்டேலிங் பவுண்ஸ்களைகொடுத்துள்ளார். இதனையடுத்து இவருக்கு   இரண்டு வருடங்கள் பிற்போடப்பட்ட ஆறுமாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக