வெள்ளி, 7 அக்டோபர், 2011

ராசா மனு தள்ளுபடி!!உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதிடக் கோரிய

டெல்லி: 2 ஜி முறைகோடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்கக் கோரி, சிபிஐ நீதிமன்றத்தில் ஆ ராசா தாக்கல் செய்திருந்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
2 ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த விசாரணையின்போது, உச்சநீதிமன்றத்தில் தானே நேரில் ஆஜராக அனுமதி அளிக்குமாறும், வழக்கறிஞர்களால் விளக்க முடியாத சில விஷயங்களை, நானே கோர்ட்டில் ஆஜராகி விளக்க விரும்புகிறேன் என்றும் தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ ராசா மனு தாக்கல் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணை இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓபி சைனி முன்னிலையில் நடந்தது.

விசாரணையின்போது ஆஜராகி வாதாடிய ராசாவின் வழக்கறிஞர் சுசில் குமார், இந்த வழக்கில் ராசாவின் உதவி எனக்குத் தேவை. அவரை வாதாட அனுமதிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம்தான் உள்ளது. ராசாவை அனுமதித்தால் அவர் எங்கும் ஓடிவிட மாட்டார். எனவே உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அனுமதிக்க வேண்டும், என்றார்.

ஆனால் நீதிபதி ஓபி சைனி இந்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும், விசாரணையை வரும் அக்டோபர் 10 ம் தேதிக்கு தள்ளி வைப்பதாகவும் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக